Monday

NIFTY ON MONDAY

15-06-09

அமரிக்க சந்தைகளில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் FUTURE MARKET சற்று இறக்கத்தில் உள்ளதும், இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகளிலும் இதை ஒட்டியே இறக்கத்திளிருப்பதும் நமது சந்தைகளில் தொடக்கத்தில் ஒரு பதட்டத்தை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை FLAT OPEN ஆகி இருந்தாலும் கிட்ட தட்ட 58 புள்ளிகளை இழந்து தற்பொழுது வெறும் 20 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் நடந்து வருவது நமது சந்தையில் ஒரு உயர்வு இருக்கும் வாய்ப்புகளை உருவாக்கலாம் இருந்தாலும் 4632 TO 4640 என்ற புள்ளிகளில் தடைகள் வரலாம், இந்த புள்ளிகளை மேலே கடக்கும் பட்சத்தில் உயர்வுகள் தொடரும் அதாவது 4687 TO 4693 என்று செல்லவும் வாய்ப்புகள் உள்ளது, இவ்வாறு நடக்க உலக சந்தைகள் சாதகமாக அமைய வேண்டும். அவைகளில் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்…

நமது சந்தைகளில் நாம் எதிர்பார்த்த பதட்டம் உயரங்களில் வந்ததை வெள்ளியன்று நீங்கள் அனைவரும் உணர்ந்து இருப்பீர்கள் , இந்த பதட்டம் இனி வரும் நாட்களில் தென்படும் மேலும் TECHNICAL ஆக சந்தைகளில் ஒரு மேடுபள்ளமான போக்கும் FLAT MARKET எனப்படும் எந்த பக்கமும் அதிகம் நகராத ஒரு வெறுப்பை உண்டாக்கும் சந்தையாகவும் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் சந்தை உயர்ந்தால் கை இருப்புகளை விற்று விடுங்கள், கடந்த வாரம் நமது BLOG கொடுக்கப்பட்ட NIFTY யின் வரைபடத்தில் சுட்டிக்காட்டியுள்ள படி அந்த SUPPORTIVE TREND LINE ஐ கீழே உடைத்தால் தான் ஒரு நல்ல வீழ்ச்சிகள் சந்தையில் மேற்க்கொண்டு வரும் இன்றைய தினத்தில் அந்த கோட்டின் அளவானது 4200 என்ற புள்ளியில் உள்ளது, இந்த புள்ளியை NIFTY அடைய 4450 கீழே கடந்து முடிவடைய வேண்டும்…

தெளிவாக உங்கள் லாபங்களில் உறுதியுடனும் சந்தையில் எந்த விதமான மாறுதல்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிவுடனும் வர்த்தகம் செய்யுங்கள். NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4632 என்ற புள்ளியை மேலே கடக்கும் பட்சத்தில் உயர்வுகள் தொடரும் அதாவது 3687 TO 4693 என்ற வகையில் இருக்கும், அதே போல் கீழே 4565 என்ற புள்ளியை கடக்கும் பட்சத்தில் 4530, 4500, 4482, 4440 என்று வரவும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் இனி வரும் சில நாட்கள் சந்தையில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் ஒரு FLAT MARKET இருக்கும் வாய்ப்புகள் தென்படுகிறது அதாவது எந்த பக்கமும் வாய்ப்புகள் தராத சந்தையாக இருந்து சற்று போர் அடிக்கும் நிலையை கொடுக்கலாம்...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4600 TARGET 4612, 4638, 4655 TO 658, 4680, 4690 TO 4693,4706, 4745

NIFTY SPOT BELOW 4580 TARGET 4570 TO 566, 4550 TO 544, 4529 TO 4532, 4510, 4500 TO 4490, 4453 TO 450, 4430 TO 427, 4404 TO 4400, 4384, 4365, 4340

கவனிக்க வேண்டிய பங்குகள்

DABUR

இந்த பங்கில் 117.5 TO 118 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் இருக்கும் அதாவது 122.5, 127, 131 S/L 112.5, 112 க்கு கீழ் 108, 107 என்று கீழே வரும் வாய்ப்புகளும் இருப்பதால் 112 க்கு கீழ் விற்று விட்டு மறுபடியும் 108 TO 107 என்ற புள்ளிகளில் வாங்கலாம் இலக்குகள் அதே தான் இதன் S/L 105

DABUR CHART