Wednesday

NIFTY ON WEDNESDAY

03-06-09 

உலக சந்தைகள் எல்லாம் உயரங்களில் தான் உள்ளது, இது வரை இறக்கத்தில் இருந்த அமெரிக்க FUTURE MARKET தற்பொழுது சற்று மீண்டு வருகிறது, இதனை தொடர்ந்து SINGAPORE NIFTY 30 புள்ளிகள் அதிகமாக தொடங்கினாலும் கீழே 5 புள்ளிகள் மைனஸில் வந்து தற்பொழுது மீண்டு 45 புள்ளிகள் உயர்வாக உள்ளது, இந்த தாக்கம் நமது சந்தைகளில் இருக்கும்…

இன்று நமது NIFTY 4600 மேலே கடக்குமா அல்லது நேற்றைப்போல் 4585 TO 4593 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்குமா என்பது பொறுத்து இருந்து பார்க்கலாம், என்னை பொறுத்த வரை மறுபடியும் 4585 TO 4593 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கலாம் இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் தொடரும், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் PROFIT BOOKING வரலாம் கவனமாக இருந்து உங்கள் லாபங்களை உறுதி செய்த்துகொள்ளுங்கள் ,

NIFTY ஐ பொறுத்த வரை இன்று உயரங்களில் நேற்று நாம் பார்த்தது போல 4585 TO 4593 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம் உங்கள் லாபங்களில் உறுதியாக இருங்கள் இரண்டு நாட்களுக்கு முன் நாம் பேசிக்கொண்டது போல VOLATILE, PROFIT BOOKING மற்றும் வீழ்ச்சி ஆகியவைகளை கடந்த இரண்டு தினங்களாக சந்தைகளில் நாம் காண்கின்றோம், இது தொடரும் என்றே தோன்றுகிறது. 

நேற்றைய NIFTY இன் கீழ் நோக்கிய நகர்வுகளில் அதன் செயல்பாடுகளை கவனித்து இருந்தீர்களானால் உங்களுக்கு கீழ் கண்ட விஷயங்கள் தெளிவாக தெரிந்து இருக்கும் அதாவது பெரிய நபர்களுக்கு சந்தை உடனடியாக அதிக அளவு இறங்க கூடாது அதே நேரம் அவர்கள் PROFIT BOOKING செய்ய வேண்டும், உயரங்களில் விற்று சந்தை இறங்கியவுடன் மறுபடியும் உயர்த்தி மறுபடியும் விற்கின்றார்கள், எவளவு லாவகமாக செய்கின்றார்கள் பாருங்கள், அது சரி நமக்கு அது தேவையில்லை நாம் நமது PROFIT இல அதிக ஆசை படாமல் உடனுக்குடன் லாபங்களை பார்த்து விட்டால் சந்தையை ராமன் ஆண்டால் நமக்கு என்ன ராவணன் ஆண்டால் நமக்கு என்ன, 

அதே நேரத்தி NIFTY வீழ்ச்சி அடைய வேண்டும் என்றால் கீழ்க்கண்ட புள்ளிகளை அதாவது 4470, 4450, 4425 நல்ல சக்தியுடன் கடக்கவேண்டும், அப்படி கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் அப்படி இல்லாமல் இந்த புள்ளிகளை SUPPORT எடுக்கும் பட்சத்தில் மறுபடியும் உயரத்தான் வாய்ப்புகள் உள்ளது 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 4552 TARGET 4585 TO 4593, 4613 TO 620, 4652 TO 4665, 4698, 4727 

NIFTY SPOT BELOW 4511 TO 4505 TARGET 4485 TO 473, 4450 TO 4448, 4425, 4400 TO 4390, 4360, 4335, 4300 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

EDUCOMP 

கீழே இந்த பங்கின் CHART கொடுத்து உள்ளேன் அதில் மேல் நோக்கிய TRIANGLE அமைப்பு நேற்று 3085 என்ற புள்ளியில் 3400, 3600, 3700, 3800 என்ற புள்ளிகளை இலக்காக கொண்டு BREAK OUT பெற்றுள்ளது ஆகவே அதன் ஒவ்வொரு இறக்கத்திலும் வாங்கலாம் அதாவது 3080, 3030, 2950, 2900, S/L 2800 

EDUCOMP CHART


TATA MOTORS 360 என்ற புள்ளிக்கு மேல் 400, 420 என்று உயரும் வாய்ப்புகள் உள்ளது 

PIRAMAL HEALTHU CARE ஐ 285 க்கு மேல் வாங்கலாம் இலக்கு 300, 340 TO 350அல்லது 265 TO 270 என்ற புள்ளிகள் வந்தால் வாங்குங்கள் S/L 260