Thursday

NIFTY ON THURSDAY

11-06-09

அமெரிக்க சந்தைகள் ஒரு சிறிய வீழ்ச்சியுடன் முடிந்துள்ளது, தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் அமெரிக்க சந்தைகளை ஒட்டியே காணப்படுகிறது, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET ஒரு சிறிய உயர்வுடன் உள்ளது, SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை FLAT OPEN ஆகி 35 புள்ளிகளை இழந்து தற்பொழுது 13 புள்ளிகளை இழந்த நிலையில் உள்ளது, இதன் தாக்கமாக நமது சந்தைகளில் FLAT OPEN இருக்கும் மேலும் உலக சந்தைகளின் போக்குகளை கடைப்பிடிக்கும் வாய்ப்புகளும் உள்ளது, அடுத்து நாம் நேற்று சொன்னது போல VOLATILE கண்டிப்பாக இருக்கும்...

NIFTY யில் கடந்த 2008 ஜனவரியில் உண்டான HIGH POINT 6357 லிருந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் உண்டான LOW POINT ஆனா 2252 க்கும் இடைப்பட்ட FIBONACCI அளவுகளில் 61.8% 4800 என்ற புள்ளியில் வருகிறது, மேலும் உயர்ந்தாலும் 4890 TO 4900 என்ற அளவுகள் வரைக்கும் உயரலாம், மேலும் DOW JONES இன் இலக்கான 9000 TO 9100 ஐ அடைய இன்னும் 200, 300 புள்ளிகள் தான் மிச்சம் உள்ளது, அடுத்து நமது சந்தைகளில் தொடர்ந்து உயரங்களில் நல்ல SELLING PRESSURE நடந்து வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம், ஆகவே உங்கள் பங்குகளில் லாபம் இருந்தால் அதை உறுதி செய்துகொள்ளுங்கள், நீங்கள் மாட்டிக்கொண்ட பங்குகளில் சிறிய லாபமோ அல்லது நீங்கள் வாங்கிய விலைகளோ வந்தால் முடித்துக்கொள்ளுங்கள், LONG TERM முதலீட்டாளர்கள் கூட அதிகமாக லாபம் கிடைத்த பங்குகளில் இருந்து வெளியே வரலாம்,

இப்பொழுது உயர்ந்த உயர்வுகளில் (FROM 2555 TO TILL NOW (4700 +++))ஒரு 23.6% OR 38.2% OR 50% CORRECTION வரலாம் முதலில் TOPS OUT ஆனா பின்னால் தான் கீழ் நோக்கிய இலக்கு என்ன என்று முடிவு செய்ய முடியும், மேலும் இந்த படத்தில் குறிப்பிட்டுள்ள SUPPORTIVE TREND LINE ஐ கீழே கடந்தால் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும், தொடர்ந்து எச்சரிக்கை செய்வதால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் எச்சரிக்கையாக இருங்கள், தின வர்த்தகர்கள் குறைந்த லாபத்தையும் மேலும் S/L யும் எப்பொழுதும் கவனமாக கையாளுங்கள், SHORT TERM AND SWING TRADER நீங்கள் மாட்டிக்கொண்ட பங்குகளில் இருந்து மெல்ல வெளியேறுங்கள் உயர்ந்து வருகிறது சற்று பொறுப்போம் என்று காத்து இருக்காதீர்கள், அல்லது கொஞ்சம் கொஞ்சமாக பங்குகளை வெளியேற்றிவிடுங்கள்.....

NIFTY WEEKLY CHART

நேற்று நாம் எதிர்பார்த்தது போல VOLATILE மிக அதிகமாக இருந்ததை கவனித்து இருப்பீர்கள் இது தொடரும், சரி இன்றைய NIFTY ஐ பொறுத்தவரை 4705 க்கு மேல் உயர்வுகள் தொடரும் அதாவது 4730, 4770, 4810 என்று செல்லலாம், அதே போல்4620 க்கு கீழ் வீழ்ச்சிகள் தொடரும் அதாவது 4580, 4530, 4500, 4450, 4420 என்று செல்லலாம், இவைகளை பொறுத்து உங்கள் வர்த்தகத்தை மேற்க்கொள்ளுங்கள், தின வர்த்தகம் செய்பவர்களை கண்டிப்பாக S/L ஐ கண்டிப்பாக கடைபிடியுங்கள், உயரங்களில் நீங்கள் வைத்து இருக்கும் பங்குகளை வெளியேற்றி விடுங்கள் ஒரு நல்ல CORRECTION வருவதற்கு சந்தை ஆயத்தமாகி வருகிறது, இன்னும் மேலே100, 200 புள்ளிகள் செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் அது நமக்கு வேண்டாம்...

NIFTY SPOT ன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4705 TARGET 4730, 4770 TO 775, 4800 TO 810, 4850 TO 4860, 4890

NIFTY SPOT BELOW 4640 TARGET 4617, 4582 TO 575, 4537 TO 525, 4450, 4420, 4365 TO 340, 4300, 4270 TO 290, 4220

கவனிக்க வேண்டிய பங்குகள்

ROLTA

இந்த பங்கை 155 என்ற புள்ளிகளுக்கு மேல் வாங்கலாம் இலக்காக 165, 171, 177, 181, 191, 200, S/L ஆக 145 ஐ வைத்துக்கொள்ளுங்கள், அதிகம் காத்திருக்காமல் முதல் அல்லது இரண்டாவது இலக்குகளில் முடித்துக்கொள்ளுங்கள், அதேநேரம் இறங்கினால் S/L ஐ கடைபிடியுங்கள், இக்கட்டான சூழ்நிலை தற்பொழுது நடந்து வருகிறது