Friday

இந்த வார கேள்வி பதில்

06-06-09

skumar4777 has sent you this email in tamil.

skumar4777's message in tamil -
வணக்கம் சார்

“Day trading இல் stop loss & profit book எப்படி maintain செய்வது ஒரு சிறு உதாரணம் சொல்லித்தரவும். Day trading செய்ய எதை எல்லாம் கவனிக்க வேண்டும். "

PROFIT BOOKING செய்ய எந்த PATTERN னின் BREAK OUT க்காக நீங்கள் BUY செய்கின்றீர்களோ அந்த PATTERN (அமைப்பின்) னின் இலக்கு எதுவோ அதை வைத்து முடிவு செய்ய வேண்டும், உதாரணமாக ஒரு CUP FORMATION 10 புள்ளிகள் மேலும் உயரே கடக்க வேண்டும் என்று BREAK OUT பெற்றுள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த 10 புள்ளிகளில் நீங்கள் எப்படி வர்த்தகம் செய்யலாம் என்று பார்ப்போம், 

அதாவது அந்த குறிப்பிட்ட SHARE கடக்க வேண்டிய 10 புள்ளிகளை FIBONACCI RETRACEMENT முறையில் கடக்கலாம், அதாவது அந்த 10 புள்ளியில் முதலில் 23.6% ஐ கடக்கும் அடுத்து 38.2%, அடுத்து 50% அடுத்து 61.8%, அடுத்து 100%, இப்படி ஒவ்வொரு நிலையாக கடக்கலாம், இதில் எந்த நிலையில் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் PROFIT ஐ உறுதி செய்து கொள்ளலாம், ஒரு நிலையை கடந்தால் அடுத்த நிலையை நோக்கி நகர ஆரம்பிக்கும் அப்படி செல்லும் போது முதல் நிலை SUPPORT ஆகவோ அல்லது TRAILING S/L ஆகவோ இருக்கும், 

ஒரு பங்கில் முதலில் ENTRY ஆகும்போது S/L ஐ MAINTAIN பண்ணுவது INTRA DAY CHART இன் அடிப்படையில் தான் அதை நேரிடையாக தான் செய்து காட்ட முடியும் குமார் அவர்களே இங்கு விளக்குவது குழப்பத்தை தான் உண்டாக்கும்...

"Day Trading செய்ய எதை எல்லாம் கவனிக்க வேண்டும்." 

மிக சரியான ENTRY POINT, துள்ளியமான S/L, தெளிவான இலக்கு இவைகளை கைகளில் வைத்துக்கொண்டு இன்று நமது சந்தை எப்படி நகரும் என்ற ஒரு கண்ணோட்டத்தையும் பெற்றுக்கொண்டு சந்தை ஆரம்பித்தவுடன் கொஞ்ச நேரம் கழித்து சந்தையில் ஒரு நீரோட்டமான போக்குகள் மற்றும் இன்றைய சந்தை எப்படி இருக்கும் என்று நீங்கள் பெற்ற கண்ணோட்டத்தின் அடி ஒட்டியே சந்தை நகர்கின்றதா என்று மீண்டும் உறுதி செய்து கொண்டு, எந்த பங்கில் நீங்கள் வர்த்தகம் செய்ய நினைத்து அதற்கான மூலப்பொருள்களை எல்லாம் கையில் வைத்துள்ளீர்களோ அந்த பங்கு சார்ந்து இருக்கும் துறை சார்ந்த மற்ற பங்குகளின் போக்குகளையும் பார்த்துக்கொண்டு, நீங்கள் எந்த புள்ளியில் ENTRY ஆகலாம் என்று முடிவு செய்தீர்களோ அந்த புள்ளி வந்தவுடன் நீங்கள் ENTRY கொடுங்கள் நீங்கள் இலக்காக வைத்து இருக்கும் புள்ளிகளில் நான் முன்னர் சொன்னது போல FIBONACCI அளவுகளின் படி எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் உங்கள் லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்..

ஒரு கேள்வி தான் இந்த வாரம் வந்தது