NIFTY SPOT
Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5264 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரும் சூழ்நிலைகளும், அடுத்து 5282 to 5286 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் உள்ளது, மேலும் 5286 க்கு அடுத்த நகர்வுகள் ஓவொன்றும் சற்று கடினமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே போல் இன்று 5245 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும்! இறக்கங்களும் சற்று கடினமாக இருக்கும் வாய்ப்புகளே தெரிகிறது, மொத்தத்தில் இன்றைய ந்தை வர்த்தகர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,
இறக்கங்களில் 5209 என்ற புள்ளியை இன்று முக்கியமானதாக கொள்ளலாம், உயரத்தில் 5286 என்ற புள்ளி முக்கியமானதாக இருக்கும், இதை விட பெரிதாக சொல்வதற்கு இன்னும் 4 தினங்களுக்கு ஏதும் இல்லை, வங்கிப்பங்குகள், shipping பங்குகளில் சில மாறுதல்கள் தெரிகிறது (UP MOVE) பார்த்து கொள்ளுங்கள்,
Amtek auto பங்கில் 165 என்ற புள்ளி அருமையான support ஆக செயல்பட்டு வருகிறது மேலும் 190 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்கள் உடைபடும் போது நல்ல உயர்வுகள் 220, 240 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கலாம் இதற்க்கு s/l ஆக 160 என்ற புள்ளி close ஆக வேண்டும் என்று கொள்ளுங்கள் இது positional call
Nifty இன் இன்றைய நிலைகளில் வெகு அருகருகே தடைகளும் support களும் இருப்பதால், வர்த்தகர்களுக்கு சரியான பயனை தராது என்பதால் தவிர்க்கின்றேன்
AMTEK AUTO