Monday

Nifty Spot on 22-03-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளில் தடுமாற்றங்கள் ஆரம்பம் ஆகி உள்ளது, தற்பொழுது உள்ள FUTURE சந்தைகளின் நிலைமையும் சரி இல்லை, ஆசிய சந்தைகள் குழம்பிக்கொண்டுள்ளது, SINGAPORE NIFTY இறக்கத்தில் தடுமாறுகிறார்கள், இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு நல்ல தடுமாற்றத்தையும், மேடு பள்ளங்களையும் தரும் வாய்ப்புகள் தெரிகிறது, எச்சரிக்கையாக செயலடவேண்டிய தருணமிது…

NIFTY SPOT

இன்று 5276 மற்றும் 5283 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே தொடர் உயர்வுகளை பற்றி சிந்திக்க முடியும், இவ்வாறு நடந்தால் அடுத்து முந்தய HIGH புள்ளியான 5312 நோக்கி நகரும் வாய்ப்புகள் பிரகாசமாகலாம், அதேபோல் இன்று 5273 என்ற புள்ளியை மேலே கடக்கவில்லை என்றால் வீழ்ச்சிகளுக்கான முதல் படியாக எடுத்து கொள்ளலாம், மேலும் கீழ் நோக்கிய நகர்வுகள் 5237 மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை நோக்கி இருக்கலாம்,

மேலும் EXPIRY இன் தாக்கம் கடந்த வாரமே ஆரம்பித்து விட்டதை நாம் அறிவோம், ஆகவே இந்த நிலைகளின் நம்பகத்தன்மை எந்தளவுக்கு இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டி உள்ளது, மொத்தத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம் இது, RBI வெள்ளியன்று REPO மற்றும் REVERSE REPO அளவுகளை 25 BPS அளவுக்கு உயர்த்தி உள்ளது

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5276 TARGET 5283, 5300 TO 302, 5324, 5345

NIFTY SPOT IF NOT BREAKS 5273 TARGET 5244 TO 237, 5232, 5201, 5183, 5155

கவனிக்க வேண்டிய பங்குகள்

RCOM ABOVE 171, MUNDRA PORT ABOVE 737, APOLLO HOSPITAL ABOVE 741, CIPLA ABOVE 338 போன்ற பங்குகளை கவனிக்கலாம். இருந்தாலும் EXPIRY வாரமாக இருப்பதால் சற்று கவனமாக இருங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள், இது போன்ற நேரங்களில் உயர்த்துவது போல் உயர்த்தி கீழ் இறக்கவும், இறக்குவது போல் இறக்கி மேல் உயர்த்தவும் வாய்ப்புகள் அதிகம்

பதிவுகள் காலை 7 TO 8 மணி அளவில் பதிவிடுவதால் படிப்பதற்கு சிரமங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் பின்னோட்டம் இடுங்கள் எவளவு நபர்கள் முதல் நாள் இரவே பதிவிட விருப்பப்டுகிறார்கள் என்பதினை பொறுத்து பதிவிடும் நேரத்தை மாற்றலாம் என்று எண்ணுகிறேன், உங்கள் கருத்துகளை எனது மின் அஞ்சலுக்கு அனுப்பினாலும் சரி,