Tuesday

Nifty Spot on 02-03-10

உலக சந்தைகள்

அமரிக்க சந்தைகளின் முடிவுகள் நல்ல முறையில் இருந்தாலும்! அதன் future மற்றும் ஆசிய சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று மேலும் கீழுமாய் உள்ளது, இருந்தாலும் சில நம்பிக்கையான போக்குகள் இருப்பதும் உண்மையே, தற்பொழுதுள்ள சூழ்நிலையில் நமது nifty spot 4965 என்ற புள்ளியில் சில தடைகளையும் இதற்க்கு மேல் 5002, 5036 என்று செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம், மேலும் 4912 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படலாம்


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4936 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து சற்று நேரம் நிலை கொண்டால் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும், மேலும் 4965, 5002, 5036 என்ற புள்ளிகளில் அடுத்த சில தடைகளும், இவைகளை மேலே கடந்தால் 5070 to 5100 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் முக்கியமான தடைகளும் ஏற்படலாம்,

அதே போல் இன்று 4912 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் அதிகமாகலாம், அதே நேரம் 4900 to 4888 என்ற புள்ளிகளில் சில support இருப்பதும்! இதனை கீழே கடந்தால் அடுத்து நல்ல வீழ்ச்சிகளும் ஏற்படும் வாய்ப்புகளும் உருவாகலாம், இதனை பொறுத்து இன்றைய வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்,

சரி இனி வரும் காலங்களில் Nifty யின் நகர்வுகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம், அதாவது கீழே கொடுத்துள்ள இரண்டு படங்களில் சில முக்கியமான கவனிக்க தக்க விஷயங்கள் நடந்தேறி உள்ளன, முதல் படமான Nifty EOD chart இல் காட்டியுள்ள படி Nifty spot ஆனது இரண்டு விதமான வடிவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது, இதில் Triangle என்ற வடிவம் வெள்ளியன்றைய வர்த்தகத்தில் மேலே உடைபட்டு உள்ளது,

இந்த அமைப்பின் படி nifty யானது 5180 to 5200 என்ற புள்ளிகளை நோக்கி நகர வேண்டும், அதே நேரம் அடுத்து உருவாக்கி வரும் channel என்ற அமைப்பு 5040 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடைந்தால் இதன் படி அடுத்த இலக்காக 5220 என்ற புள்ளி செயல்படலாம், அதே நேரம் 5070 என்ற புள்ளியில் இந்த வீழ்ச்சியின் 61.8% என்ற Fibonacci அளவுகள் வருகிறது, மேலும் அடுத்த படமான Nifty யின் தின வர்த்தக chart படத்தில் காட்டியுள்ளபடி ஏற்பட்டுள்ள HNS என்ற அமைப்பின்படி 4930 என்ற புள்ளி தொடர்ந்து உயர்வதற்கு உடைபட்டுள்ளது,

இதன் படி அடுத்த இலக்காக 5200 என்ற புள்ளிகள் செயல்படும், மேலும் 5040 to 5070 என்ற புள்ளிகள் முதல் இலக்காக இருந்து! பிறகு சற்று இளைப்பாறல் ஏற்பட்டு பிறகு தொடர்ந்து உயரும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலும் தற்பொழுது முக்கியமான சில indicator கள் தொடர்ந்து உயர்வதற்கு உதவுவதை விட! சற்று இளைப்பாறல் பெற்று பிறகு உயர்வதற்கு உதவி செய்யும் வகையிலே அமைந்து இருப்பதால்! திடீரென வீழ்ச்சிகள் ஏற்பட்டாலும் 4870 to 4830 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை,

மேலும் கீழே இவ்வாறு வந்தால் நமக்கான பங்குகளை வாங்கலாம், மேலும் இதற்கு நமது s/l ஆக 4800 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து இரண்டு நாட்கள் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்

Nifty eod chart 



Nifty Intra chart




Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 4936 Target 4960, 4965, 4992 to 5002, 5016, 5036, 5100

Nifty Spot below 4912 Target 4900, 4889, 4849 to 4839, 4805, 4769, 4740,4728, 4670

கணிக்க வேண்டிய பங்குகள்

CAIRN

BUY ABOVE 268 TARGETS 275 TO 277, 287, 295, S/L 251
THIS IS FOR POSITIONAL CALL, ADD ON DECLINES UP TO 255