Tuesday

Nifty Spot on 23-03-10


NIFTY SPOT

Nifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5194, 5185, 5163 என்ற இந்த மூன்று புள்ளிகளும் கீழ் பக்கங்களில் கவனிக்க வேண்டிய புள்ளிகள், இந்த புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படுவதற்காக சந்தை கதவை திறந்து விட்டதாக எண்ணி கொள்ளலாம், அதே நேரம் expiry volatile க்காக சந்தை மேலே உயர்ந்தாலும், அதிக பட்சமாக 5263, 5283, 5295 என்ற புள்ளிகள் வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது,


ஆகவே 5190 மற்றும் 5180 என்ற புள்ளிகள் கீழே உடைபட்டு மறுபடியும் சந்தை உயர்ந்தால்! மேலே சொன்ன மூன்று புள்ளிகளின் அருகே Nifty fut இல் short sell செய்யலாம் (April contract) இதற்க்கு s/l ஆக 5295 என்ற புள்ளியை கடந்து முடிய வேண்டும் என்று கொள்ளுங்கள்,

இவ்வாறு நீங்கள் செல்லும் short selling கிற்கு முதல் இலக்காக 5105 to 5090 என்ற புள்ளி இருக்கும், ஒரு வேலை இந்த 5090 என்ற புள்ளி உடைக்கப்பட்டு! ஓரிரு நாட்கள் இந்த புள்ளிக்கும் கீழ் முடிவடயுமானால் Nifty Spot இன் அடுத்த இலக்கு 4875 to 4870 என்ற புள்ளியை நோக்கி இருக்கும்,

அதே நேரம் இந்த 5190 மற்றும் 5180 என்ற புள்ளிகளை கீழே கடக்காமல் தொடர்ந்து உயர்ந்து 5282 மற்றும் 5295 என்ற புள்ளிகளை மேலே கடந்தால், Nifty தொடர்ந்து முன்னேற முற்படும்! முதல் இலக்காக 5330 to 5335 என்ற புள்ளிகளும், அடுத்த இலக்காக 5370 என்ற புள்ளியும் இருக்கும்,

அதே நேரம் தொடர்ந்து 5500 to 5570 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் ஏற்படும், இதனை பொறுத்து வர்த்தகம் செய்யுங்கள், இவை இரண்டிற்குமான வரை படங்கள் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள், Nifty யின் தின வர்த்தக chart இல் Broadening Bottom உருவாக்கி இருப்பதை கவனிக்கும் போது 5180 என்ற புள்ளி உடைபடாமல் 5282 என்ற புள்ளி உடைபட்டால் தொடர்ந்து உயருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று சொல்ல தோன்றுகிறது,

ஆகவே 5180 என்ற புள்ளி இன்று எப்படி கையாளப்படுகிறது என்பதினை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம், மேலும் இந்த 5180 என்ற புள்ளி தினமும் மாறிக்கொண்டே இருக்கும் அதாவது இன்று 5180 நாளை 5170 என்று கூட இருக்கலாம், அதை நாளை பார்ப்போம் ,,,,


Nifty Spot EOD Chart





Nifty Spot Intra Chart



Nifty Spot இன் இன்றைய நிலைகள்

Nifty Spot above 5221 Target 5248, 5263, 5289, 5294, 5322, 5339, 5370 ++++

Nifty Spot below 5177 Target 5163, 5128, 5116, 5111, 5105, 5092, 5087