உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகளின் உற்சாகம் மற்ற சந்தைகளுக்கு உற்சாகத்தை தந்துள்ளது, இருந்தாலும் நமது NIFTY SPOT க்கு இன்று 5462, 5487 என்ற புள்ளிகள் பலமான தடைகளாகவும், 5450 நல்ல SUPPORT ஆகவும் செயல்படலாம்…
NIFTY SPOT
இன்று 5462 என்ற புள்ளிக்கு மேல் பலமுடன் நின்றால் அடுத்து 5487 என்ற புள்ளியை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 5487 என்ற புள்ளி நல்ல பலமுடன் மேலே கடக்கப்பட்டு தாக்கு பிடித்தால் அடுத்து தொடர் உயர்வுகள் ஏற்படுவதில் சிக்கல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது, இலக்காக 5542 TO 5563 என்று வைத்துக்கொள்ளலாம்.
அதே நேரம் மேலே சொன்ன 5462, 5487 என்ற புள்ளிகளை பலமுடன் கடந்து தாக்கு பிடிக்க முடியாமல் போனாலும், அல்லது மேலே கடக்க முடியவில்லை என்றாலும் இது வீழ்ச்சிக்கான முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் இவ்வாறு நடந்து 5450 என்ற புள்ளியை கீழே பலமுடன் கடந்து சற்று நேரம் தாக்கு பிடித்தால் அது வீழ்ச்சிக்கான பலம் அதிகரித்து இருப்பதாக எடுத்துக்கொண்டு SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம்.
இதற்க்கு S/L ஆக மேலே சொன்ன புள்ளிகளையோ, அல்லது இந்த புள்ளிகளுக்கு மேலே அப்பொழுதைய DAY HIGH இருந்தால் அதனையோ பயன்படுத்தலாம். இது போன்று நடந்தால் கீழ் நோக்கிய இலக்காக 5404, 5380 TO 5372, 5337 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்...
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5462 TARGET 5480 TO 5487, 5543, 5562
NIFTY SPOT BELOW 5442 TARGET 5404, 5380 TO 5372, 5337, 5327, 5307 TO 5300