Wednesday

NIFTY SPOT A OVER ALL VIEW - CURRENT RALLY

NIFTY SPOT ஒரு முழு பார்வை 

HISTORY REPEATS IT SELF - CHARLES DOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சுட்டி காட்டியுள்ளது போல NIFTY SPOT இரண்டு முறை உயர்வுகளையும், இரண்டு முறை இறக்கங்களையும், ஒரே மாதிரியான செயல்பாடுகளினால் செய்து வந்துள்ளதை A - A1 மற்றும் B - B1 ஆகிய இரண்டு கோடுகளும்; அதற்க்குண்டான விளக்கங்களும் குறிக்கும். தற்பொழுது மூன்றாவது முறையாக கடந்த இரண்டு தடவை நடந்தது போலவே உயர்ந்து வருகிறது.

அடுத்து A - A1 (772.5, 17%) மற்றும் B - B1 (724.5, 15.5%) ஆகிய இரண்டு உயர்வுகளுக்கான வித்தியாசங்கள் சுமார் 50 புள்ளிகளாகும், அதாவது முதல் உயர்வு (A - A1) அந்த LOW புள்ளியில் இருந்து (4538.5) 17% உயர்ந்துள்ளது, அடுத்து இரண்டாவது உயர்வு (B - B1) அந்த LOW புள்ளியில் இருந்து (4675.5) 15.5% உயர்ந்துள்ளது.

இந்த இரண்டு வித்தியாச ஒற்றுமைகளையும் நாம் மூன்றாவது உயர்வான தற்பொழுது நடந்து வரும் உயர்வில் (C TO C1) எதிர் பார்த்தோமேயானால்?! இந்த மூன்றாவது உயர்வு தொடங்கிய LOW புள்ளியில் இருந்து சரியாக 14 % இல் முடிவடைய வேண்டும், அதாவது 17% - 15.5% = 1.5%, ஆக 15.5% - 1.5% = 14%.

இது போல் நடக்குமேயானால்? மூன்றாவது உயர்வு தொடங்கிய புள்ளியான 4786.5 (C) இல் இருந்து இந்த 14 % எங்கே வருகிறது என்று கணக்கிட்டால் அது சரியாக 5455 என்ற புள்ளியை சுட்டி காட்டுகிறது, அதாவது 4786.5 + 670 (14%) = 5455. இந்த 14% சதவிகித பலனினால் கிடைத்த 670 என்ற புள்ளி முன்னர் நடந்த உயர்வுகளில் கிடைத்த புள்ளிகளுடன் ஒத்துப்போவதை சற்று கவனிக்கலாம்,

அதாவது முதல் உயர்வு (A TO A1) 772.5 புள்ளிகள், இரண்டாவது உயர்வு (B TO B1) 724.5 புள்ளிகள் (கிட்ட தட்ட 50 புள்ளிகள் கம்மியாக), அதே போல் இந்த முறை 14% உயர்ந்து அதாவது இந்த உயர்வு தொடங்கிய 4786.5 என்ற புள்ளியில் இருந்து ஒரு 670 புள்ளிகள் உயர்ந்து வந்தால்? இரண்டாவதாக ஏற்பட்ட உயர்வில் கிடைத்த 724 என்ற புள்ளியில் இருந்து ஒரு 50 புள்ளிகள் கம்மியாக உள்ளது பாருங்கள்,

ஆக சதவிகிதங்களில் முன்னர் ஏற்பட்ட உயர்வை விட 1.5% கம்மியாகவும், புள்ளிகளாக பார்க்கும் போது சற்றேறக்குறைய 50 புள்ளிகள் முன்னர் ஏற்பட்டதை விட கம்மியாகவும் தொடர்ந்து வர வாய்ப்பு இருப்பதால்! இந்த முறை 14% அதாவது LOW புள்ளியில் இருந்து 670 புள்ளிகள் உயர்ந்து 5455 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கலாம் இல்லையா?.

இந்த சதவிகித மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு புள்ளிகளை குறைத்து ஒவ்வொரு முறையும் ஏன் உயர வேண்டும்?

ஒரு வேலை ஒவ்வொரு முறையும் உயர்வுகளை தொடங்கும் புள்ளிகளான LOW புள்ளிகள் ஒன்றை விட மற்றொன்று அதிகமாக இருப்பதாலோ? அதாவது முதல் உயர்வு ஆரம்பித்த இடம் A = 4538.5, இரண்டாவது உயர்வு ஆரம்பித்த இடம் B = 4675, அடுத்து தற்பொழுது நடந்து வரும் உயர்வு ஆரம்பித்த இடம் C = 4786.5, பாருங்கள் இந்த A, B , C அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று அதிகமாக உள்ளது, ஆதலால் தான் மேலே குறைந்து உயர்கின்றார்களோ?.

சரி எது எப்படியோ இந்த 5455 TO 5465, மற்றும் படத்தில் உள்ள CHANNEL அமைப்பு 5510 என்ற புள்ளியில் தடைகளை தருவதினால், நாம் 5455 TO 5510 என்ற புள்ளிகளின் அருகே நமது NIFTY SPOT வரும் போது நமது பழைய நிலைகளில் இருந்து லாபங்களை உறுதி செய்து கொண்டு, கைகளில் பணமாக வைத்து இருப்பது நல்லது.

மேலும் இந்த நிலைகளில் நீங்கள் SHORT SELLING போக விரும்பினால் உங்களுக்கான S/L 5550 என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்து 2 நாட்கள் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள், இலக்குகள் பற்றி பின்னர் பார்ப்போம்,

ஏற்கனவே ஒரு 20 நாட்களில் நாம் 5480 என்ற புள்ளிகளை அடையும் வாய்ப்புகள் இருப்பதாக 5300 என்ற புள்ளி NIFTY யில் உடைபட்டவுடன் பார்த்தோம், நாம் பார்த்து இன்று 17 வது நாள். ஆக இன்னும் சில நாட்களில் இதற்க்கான வாய்ப்புகள் இருக்குமேயானால்? நாம் TOPS OUT என்ற நிலையினை இன்னும் ஒரு 10 நாட்களுக்குள் அடைந்து விடோவோம் என்றே என்ன தோன்றுகிறது, எச்சரிக்கையாக இருங்கள்.

இனி வரும் இரண்டு தினங்கள் எனது சொந்த வேலை காரணமாக வெளியூர் செல்வதால் சந்தையை பகுப்பாய்வு செய்ய இயலாத நிலை, திங்கள் முதல் தொடர்ந்து சிந்திப்போம்

NIFTY SPOT CHART