Tuesday

NEXT TARGETS OF NIFTY AS PER FIBONACCI RETRACEMENT

14-04-09 TUESDAY

NIFTY இன் அடுத்த கட்ட இலக்குகள் எப்படி இருக்கும் என்பதை FIBONACCI RETRACEMENT LEVEL களின் துணைகொண்டு பார்ப்போம், இங்கு 5 படங்களை கொடுத்துள்ளேன் இந்த படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு புள்ளிகளை LOW (0%) மற்றும் HIGH (100%) களாக கொண்டு FIBONACCI RETRACEMENT அளவுகள் கணக்கிடப்பட்டுள்ளது, இந்த கணக்கீடுகளின் படி NIFTY இன் அடுத்த கட்ட இலக்குகளை பார்ப்போம்…

முதல் படத்திற்கான விளக்கம்

NIFTY 3382 என்ற புள்ளியில் நேற்று (MONDAY 13-04) முடிவடைந்துள்ளது, NIFTY க்கு தற்பொழுது 3411 TO 3420 என்ற புள்ளிகளுக்கிடையில் தடைகள் உள்ளது இந்த தடையை NIFTY கடந்தால் இதன் அடுத்த இலக்கு 3450 TO 3470 என்ற இடத்தில் இருக்கும், இந்த இலக்கு எப்படி வந்தது என்று முதல் படத்தில் குறிப்பிட்டுள்ளேன்

அதாவது கடந்த வருடம் அக்டோபர் மாதம் உண்டான LOW புள்ளியான 2252 லிருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உண்டான HIGH புள்ளியான 4650 என்ற இரண்டு புள்ளிகளை முறையாக LOW மற்றும் HIGH யாக வைத்து அளக்கப்பட்ட FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி 50% உயரம் சரியாக 3450 TO 3470 என்ற புள்ளிகளில் உள்ளது, மேலும் இதே அளவுகளின் படி 61.8% உயரம் 3735 என்ற புள்ளியில் உள்ளது, இந்த உயரங்களை அடைய NIFTY 3411 TO 3420 புள்ளிகளை அதிக சக்தியுடன் கடந்து முடிவடைய வேண்டும். சரி இந்த படத்தை பாருங்கள்

NIFTY 3450 TO 3470 என்ற இலக்கை அடைவதற்கான விளக்கப்படம்




இரண்டாம் படத்திற்கான விளக்கம்

NIFTY 3450 TO 3470 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடையுமானால் அதன் அடுத்த இலக்கு 3525 TO 3540 என்ற புள்ளிகளில் இருக்கும், இந்த இலக்கு FIBONACCI அளவுகளின் படி எப்படி வந்தது என்று பார்ப்போம். கடந்த 2009 மார்ச் மாதம் உண்டான LOW புள்ளியான 2539 லிருந்து 2009 ஆம் வருடம் ஜனவரி மாதம் உண்டான HIGH புள்ளியான 3147 என்ற புள்ளியை முறையாக LOW மற்றும் HIGH ஆக வைத்து அளக்கப்பட்ட FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி 161.8% என்ற அளவு சரியாக 3525 TO 3540 என்ற புள்ளிகளில் வருகிறது. சரி இந்த படத்தை பாருங்கள்

நிபிட்டி 3525 TO 3540 என்ற இலக்கை அடைவதற்கான விளக்கப்படம்




மூன்றாம் படத்திற்கான விளக்கம்

NIFTY 3525 TO 3540 என்ற புள்ளிகளை மேலே கடந்து முடிவடையுமானால் இதன் அடுத்து இலக்கு 3675 என்ற புள்ளியில் இருக்கும், இந்த இலக்கு FIBONACCI அளவுகளின் படி எப்படி வந்தது என்று பார்ப்போம். கடந்த 2009 மார்ச் மாதம் உண்டான LOW புள்ளியான 2539 லிருந்து 2009 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் உண்டான HIGH புள்ளியான 2970 என்ற புள்ளியை முறையாக LOW மற்றும் HIGH ஆக வைத்து அளக்கப்பட்ட FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி 261.8% என்ற அளவு சரியாக 3675 என்ற புள்ளியில் வருகிறது.

மேலும் இந்த படத்தில் பச்சை நிறத்தில் NIFTY CHART இல் HEAD & SHOULDER அமைப்பு கடந்த வாரம் 3161 என்ற புள்ளியில் 3625 என்ற இலக்குடன் BREAK OUT பெற்றுள்ளது. சரியாக இந்த FIBONACCI அளவுகளில் H&S அமைப்புக்கான இலக்கு இருப்பதையும் கவனியுங்கள். படத்தை பாருங்கள்

நிபிட்டி 3675 என்ற இலக்கை அடைவதற்கான விளக்கப்படம்




நான்காம் படத்திற்கான விளக்கம்

NIFTY 3525 மற்றும் 3675 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடையுமானால் இதன் அடுத்து இலக்கு 3710 என்ற புள்ளியில் இருக்கும். இந்த இலக்கு FIBONACCI அளவுகளின் படி எப்படி வந்தது என்று பார்ப்போம். கடந்த 2008 நவம்பர் மாதம் உண்டான LOW புள்ளியான 2503 லிருந்து 2008 ஆம் வருடம் நவம்பர் மாதம் உண்டான HIGH புள்ளியான 3241 என்ற புள்ளியை முறையாக LOW மற்றும் HIGH ஆக வைத்து அளக்கப்பட்ட FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி 161.8% என்ற அளவு சரியாக 3710 என்ற புள்ளியில் வருகிறது. படத்தை பாருங்கள்

நிபிட்டி 3675 என்ற இலக்கை அடைவதற்கான விளக்கப்படம்



ஐந்தாம் படத்திற்கான விளக்கம்

NIFTY 3710 மற்றும் 3735 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடையுமானால் இதன் அடுத்து இலக்கு 3820 TO 3840 என்ற புள்ளியில் இருக்கும். இந்த இலக்கு FIBONACCI அளவுகளின் படி எப்படி வந்தது என்று பார்ப்போம். கடந்த 2008 அக்டோபர் மாதம் உண்டான LOW புள்ளியான 2252 லிருந்து 2008 ஆம் வருடம் ஜனவரி மாதம் உண்டான HIGH புள்ளியான 6357 என்ற புள்ளியை முறையாக LOW மற்றும் HIGH ஆக வைத்து அளக்கப்பட்ட FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி 38.2% என்ற அளவு சரியாக 3820 TO 3840 என்ற புள்ளியில் வருகிறது…

மேலும் 3140 என்ற புள்ளியை தடை புள்ளியாகவும் 2500 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் பெற்று (பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள) அமைந்துள்ள CHANNEL அமைப்பு 3800 என்ற புள்ளியை இலக்காக வைத்து 3140 என்ற புள்ளியில் கடந்த வாரம் BREAK OUT பெற்றுள்ளது, இந்த CHANNEL அமைப்பின் இலக்கு FIBONACCI RETRACEMENT அளவுக்கு அருகில் உள்ளதை கவனியுங்கள்... சரி இந்த படத்தை பாருங்கள்

நிபிட்டி 3820 TO 3840 என்ற இலக்கை அடைவதற்கான விளக்கப்படம்



இந்த இலக்குகளை அடைய முன்னர் சொல்லப்பட்ட ஒவ்வொரு தடை புள்ளிகளையும் NIFTY கடக்க வேண்டும், மேலே குறிப்பிட்ட எந்த புள்ளிகளிலிருந்து NIFTY கீழ் இறங்கலாம், முதலில் 3410 TO 3420 என்ற புள்ளி முக்கியம்