SUNDAY – 05-04-09
NIFTY இன் அடுத்த MOVE TECHNICAL ஆ எப்படி இருக்கும் என்று பார்ப்போம்…
இந்த படத்தை பாருங்கள் இதில் உள்ள கோடுகள் எதை எதை குறிக்கின்றன என்று பார்ப்போம்...
NIFTY CHART
இந்த படத்தில் இரண்டு பச்சை நிறகோடுகள் CHANNEL என்ற அமைப்பை குறிக்கும், இந்த CHANNEL அமைப்பு 3100 என்ற புள்ளியை தடை நிலையாகவும், 2500 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் கொண்டுள்ளது....
அடுத்து 4 சிகப்பு நிற சிறிய கோடுகள் NIFTY உயரும்போது தடைகளை கொடுக்கும், இதன் முறையே 3405, 3520 TO 540, 3640, 3700, 3800 TO 3840 ஆகும், அடுத்து ஒரு நீண்ட சிகப்பு நிற TREND LINE உம் ஒரு கருப்பு நிற நீண்ட DOTED LINE உம் கடந்த ஜனவரி மாதம் உயரத்தில் இருந்து வரையப்பட்டுள்ளது, இந்த TREND LINE கள் NIFTY க்கு TREND LINE RESISTANCE ஐ முறையே 3520, மற்றும் 3600 என்ற புள்ளிகளில் கொடுக்கும்,
அடுத்து 4 ஊதா நிற கோடுகள் கொடுத்துள்ளேன், இவைகள் முறையே கடந்த அக்டோபர் மாத LOW புள்ளியான 2252 லிருந்து கடந்த ஜனவரி மாத HIGH புள்ளியான 6357 வரைக்குமான FIBONACCI RETRACEMENT அளவுகளின் இடங்களை குறிக்கின்றது…
சரி மறுபடியும் படத்தை பார்த்து விட்டு வாருங்கள், இதன் விளக்கங்களை பார்த்து விடுவோம்……..
இப்போது NIFTY இல் அமைந்து இருக்கும் CHANNEL அமைப்பு கிட்ட தட்ட BREAK OUT ஆனா புள்ளியில் இருந்து 650 புள்ளிகளை மேலே கடக்க வேண்டும், அதாவது BREAK OUT புள்ளியான 3153 என்ற புள்ளியில் இருந்து 650 புள்ளிகள் மேலே உயர்ந்து 3800 என்ற புள்ளியை இலக்காக அடையவேண்டும் இதன் S/L 3100 என்ற அளவில் இருக்கின்றது,
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிபிட்டி இந்த BREAK OUT புள்ளியான 3150 ஐ நனறாக கடந்து 3229 வரை சென்று 3211 என்ற புள்ளியில் நிறைவடைந்துள்ளது, ஆகவே NIFTY இன் இலக்கு 3800 என்பது TECHNICAL ஆக முடிவாகிவிட்டது ஆனால் NIFTY 3800 ஐ தொடுவதற்கு முன் அதற்க்கு ஏற்படப்போகும் தடைகள் என்ன என்ன என்று பார்ப்போம்…
NIFTY க்கு 3270 என்ற புள்ளியில் இருந்து 3300 மற்றும் 3335 என்ற புள்ளிகளில் TOPS மற்றும் FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி தடை நிலைகள் உள்ளது, இந்த தடைகள் மிக முக்கியமானது ஆகும், இந்த புள்ளிகளை கடந்தல் தான் NIFTY FURTHER MOVE கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றது, உதாரணமாக கடந்த 2003 வருடம் ஏற்ப்பட்ட CORRECTION இல் NIFTY இதுபோல் தான் நகர்ந்துள்ளது, NIFTY 2003 ஆம் வருட வரைபடம் கீழே கொடுத்துள்ளேன் இறுதியாக பார்த்து விடுங்கள்…
அவ்வாறு NIFTY 3340 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 3405 என்ற புள்ளியில் 200 நாள் MOVING AVERAGE உள்ளது ஆகவே இந்த இடம் அடுத்த தடையை கொடுக்கும், அடுத்து 3520 TO 3540 என்ற புள்ளிகளில் முறையே கடந்த 2008 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் HIGH POINT லிருந்து வரையப்பட்ட TREND LINE ஒரு STRONG RESISTANCE ஐயும், தற்பொழுதைய LOW புள்ளியான 2539 முதல் 3141 என்ற இதற்க்கு முந்தய HIGH புள்ளி வரைக்குமான FIBONACCI RETRACEMENT அளவுகளில் 161.8% என்ற தடை நிலையையும் கொடுக்கும்,
அடுத்து 3600 என்ற இடத்தில் சிகப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள TREND LINE RESISTANCE உள்ளது, அடுத்து இப்பொழுது BREAK OUT ஆகி இருக்கும் CHANNEL அமைப்பின்படி இதன் இலக்கு 3800, அடுத்து அக்டோபர் மாத LOW புள்ளியான 2252 லிருந்து கடந்த 2008 ஜனவரி மாத HIGH புள்ளியான 6357 வரைக்குமான FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி 3840 என்ற புள்ளியும் NIFTY க்கு தடைகளை கொடுக்கும்…
இப்பொழுது NIFTY இல் நடந்து கொண்டிருப்பது போல 2003 ஆம் ஆண்டு ஒரு பெரிய CORRECTION க்கு பிறகு NIFTY எவ்வாறு ஒரு CHANNEL அமைப்பை உருவாக்கி அதை BREAK OUT செய்து மேலே உயர்ந்துள்ளது என்பதை இந்த படத்தில் பாருங்கள்...
NIFTY 2003 CORRECTON CHART
மேலும் இந்த உயர்வு 2003 ஆண்டு NIFTY யின் மொத்த CORRECTION களில் 50%உயர்வு அடைந்து அங்கிருந்து ஒரு பெரிய CORRECTION பெற்றுள்ளதை படத்தில் குறிப்பிட்டுள்ளேன், மேலும் இந்த CHANNEL அமைப்பின் இலக்கை அடைவதற்கு முன் மொத்த CORRECTION இல் 50% இல் ஒரு தடையை அடைந்து அங்கிருந்து மறுபடியும் கீழே வந்து அந்த CORRECTION முடிந்த பிறகு மீண்டும் NIFTY உயர்ந்து புதிய உயரங்களை எட்டியது, அதையும் படத்தில் குறிப்பிட்டுள்ளேன் பாருங்கள்…
நான் மேலே சொன்னது போல NIFTY தற்பொழுது CHANNEL அமைப்பை BREAK OUT செய்துள்ளது, இதன் படி பார்த்தால் NIFTY மொத்த CORRECTION இல் தற்பொழுது 38.2% அளவு உயர வேண்டும், அதன் படி 3840 என்ற இடத்தில் NIFTY தடைகளை சந்திக்கும், அதற்க்கு முன் NIFTY இல் என்ன என்ன தடைகள் இருக்கலாம் என்பதினையும் முன்னரே பேசிக்கொண்டோம், மறுபடியும் படித்து விடுங்கள் …
சரி இப்பொழுது நாம் எப்படி NIFTY இல் TRADE பண்ண வேண்டும் என்று பார்த்து விடுவோம்
NIFTY க்கு தற்ப்பொழுது 3255 TO 3280 என்ற இடங்களில் TOPS மற்றும் FIBONACCI RETRACE என்ற வகையில் தடைகள் உள்ளது,
நாம் NIFTY ஐ BUY பண்ண வேண்டும் என்றால் இந்த தடைகளை NIFTY கடந்த பிறகு தாராளமாக POSITION எடுக்கலாம் ஆனால் இதன் S/L 3100 என்ற புள்ளியில் தான் உள்ளது,
அப்படி இல்லாமல் NIFTY இந்த புள்ளிகளில் இருந்து, சில சக்திகளை பெற ஒரு சிறிய அல்லது சற்று பெரிய CORRECTION களை சந்தித்தால் கீழ் கண்ட புள்ளிகளில் NIFTY ஐ வாங்கலாம் 2960, 2900, S/L 2850 இவ்வாறு நடக்கும் CORRECTION BULL RALLY CORRECTION என்று அழைக்கப்படும், இது போன்ற CORRECTION ஒன்று இரண்டு நாட்கள் இருக்கும், மிகப்பெரிய வீழ்ச்சி அதை தொடர்ந்து மிகப்பெரிய உயரும் இப்படித்தான் இருக்கும்…
எப்படி பார்த்தாலும் NIFTY அடுத்த உயரத்துக்கான BREAK OUT பெற்று விட்டதாகவே கருத வேண்டியுள்ளது, ஆனால் 3340 என்ற புள்ளியை கடந்தால் தான் இது உண்மையான BREAK OUT தான் என்பதை முடிவு செய்ய முடியும்
மேலும் HIGHER TOP HIGHER BOTTOM என்ற வடிவங்கள் இன்னும் NIFTY CHART இல் அமையவில்லை என்பதை அழுத்தி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இந்த உயர்வு 3280 மற்றும் 3335 என்ற புள்ளிகளை மேலே கடக்க வில்லை என்றால இந்த உயரம் LOWER TOP மற்றும் LOWER BOTTOM என்ற வடிவமாக மாறிவிடக்கூடிய வாய்ப்புகள் மறுப்பதற்கில்லை...
அப்படி ஆகாதென்றே தோன்றுகிறது ஏனெனில் 3800 என்ற இலக்குடன் NIFTY CHANNEL BREAK OUT ஆகியிருப்பதால், பொறுத்திருந்து பார்த்திடுவோம் என்ன நடக்கின்றது என்று…
கீழே கொடுக்கப்பட்டுள்ள TAMILISH என்ற VOTE BUTTON இல் உங்கள் VOTE களையும் பதிவு செய்து விடுங்கள் அனைவரும் படித்து பயன்பெறட்டும்
நன்றி
சரவணபாலாஜி