WEDNESDAY - 08-04-09
உலகசந்தைகள் அனைத்தும் தொடர்ந்து இரண்டு நாட்களாக இறங்கு முகத்தில் தான் உள்ளது, நாம் அடிக்கடி விடுமுறை என்ற பெயரில், நமது Normal Trading ஐ Miss பண்றோம், Gap up and Gap down இந்த Method இல் தான் நகரவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்,
தொடர்ச்சியாக அனைத்து சந்தைகளும் உயர்ந்ததால் சோர்வாக இருக்கின்றனர், மற்றும் அனைத்து உலக சந்தைகளும் Technical ஆக Top Trend Line Resistance க்கு அருகில் சென்று திரும்பி வருகின்றனர் மேலும் அனைத்து உலக சந்தைகளும் ஒரு சில Gaps ஐ Technical chart இல் பெற்றுள்ளனர், இந்த Gaps ஐ Fill செய்வதற்கும், தொடர்ந்து உயர்ந்ததால் ஏற்ப்பட்ட சோர்விலும், சில அடுத்த கட்ட உயரத்திற்கு நகர்வதற்கான சக்திகளை பெறுவதற்கும் வீழ்ச்சிகள் கொஞ்சம் தொடரும், உலக சந்தைகளில் இந்த வீழ்ச்சிகள் எது வரைக்கும் செல்லும் என்பதை இந்த வார இறுதியில் வரைபடத்துடன் காண்போம்…
நேற்றைய அமெரிக்க சந்தையில் ஏற்ப்பட்ட வீழ்ச்சி, இன்று இதை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க Future Market இன் வீழ்ச்சி இவைகளால் அனைத்து ஆசிய சந்தைகளும் இறங்கு முகத்துடன் உள்ளது (அதிக ஆட்டங்கள் காணப்படுகிறது அடிக்கடி கவனித்துக்கொள்ளுங்கள்), இதனை தொடர்ந்து நமது Singapore Nifty யும் 70 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்து, இந்த இரக்கத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது, ஆனால் உலகசந்தைகளை பொறுத்து இதன் நகர்வுகளில் மாற்றம் இருக்கும் கவனித்துக்கொள்ளுங்கள்…
நமது சந்தைகளும் உலக சந்தைகளின் அடி ஒட்டியே Open ஆகும், திங்கள் அன்று நாம் எதிர்பார்த்தது போல் 3300 என்ற இடத்தில் உள்ள Channel Top Resistance இல் தடையை பெற்று கீழ் வந்துள்ளது, இன்று அந்த Channel Top Resistance 3320 to 3340 என்ற புள்ளிகளில் உள்ளது இதற்க்கு மேல் நல்ல volume உடன் உயர்ந்தால் தான், தொடர்ந்து முன்னேற வாய்ப்புகள் உண்டு,
மேலும் நமது Nifty க்கு இந்த Channel அமைப்பின் Support 3040 to 3030 என்ற புள்ளிகளில் உள்ளது, மேலும் இந்த புள்ளிகள் Fibonacci Retracement படியும் (76.4%), support கிடைக்கின்றது, ஆகவே இந்த வீழ்ச்சி 3050 to 3030 என்ற புள்ளிகளில் Support எடுக்க வாய்ப்புகள் உள்ளது…
இந்த புள்ளிகளை கீழே உடைத்தால் இந்த channel அமைப்பின் படி Nifty Technical ஆக 2750 to 2700 என்ற புள்ளிக்கு செல்ல வேண்டும், ஆகவே 3050 to 3030 என்ற புள்ளிகள் வரும்பொழுது, தாராளமாக அடுத்த உயர்வுக்கான பங்குகளை வாங்கலாம், இதற்கான s/l ஆக Nifty Spot இல் 3000 க்கு கீழ் Close ஆனால் நீங்கள் வாங்கிய பங்குகளை விற்று விடுங்கள்….
Nifty Spot இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 3276 TARGET 3300 TO 304, 3338 TO 3345, 3363 TO 72, 3042, 3412, 3420, 3450
NIFTY SPOT BELOW 3234 TARGET 3211, 3198, 3185 TO 178, 3152, 3142, 3125 TO 117, 3103 TO 3099, 3055, 3035 TO 30, 2972, 2926 -----
கவனிக்க வேண்டிய பங்குகள்
BANKING SECTOR ரொம்ப WEAK காக உள்ளது போல் CHART இல் தெரிகிறது, ஆகவே உயரங்களில் SHORT SELL பண்ணலாம், மேலும் BANK NIFTY யில் 4200 TO 4135 என்ற அளவில் GAP உள்ளது அதை FILL பண்ண வரும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே உயரங்களில் SHORT SELL பண்ணலாம்,
மேலும் ICICI BANK, AXIS BANK, HDFC (BOTH), SBI, அனைத்து BANK களும் TOP TREND LINE RESISTANCE என்ற வகையில் தடை பெற்று உள்ளது, இவைகளையும் SELL பண்ணலாம், இதற்க்கு S/L ஆக MONDAY HIGH ஐ வைத்துக்கொள்ளலாம்