Monday

NIFTY ON MONDAY

20-04-09 – MONDAY 

கடந்த வாரம் அமெரிக்க சந்தைகள் FLAT CLOSE ஆனாலும் 5 வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது போன்ற நேரங்களில் அனைவரும் ஒருவித பதட்டத்துடன் தான் இருப்பார்கள், ஏதாவது ஒரு சின்ன காரணம் கிடைத்தால் கூட அதற்க்கு தகுந்தார்ப்போல மேலேயோ அல்லது கீழேயோ நகர்த்தி விடுவார்கள். இவர்களை தொடர்ந்து அனைவருக்கும் இந்த பிரச்சனை இருப்பது தெளிவாக தெரிகிறது......... 

தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மேலே கீழே ஆட்டங்களுடன் காணப்படுகிறது. இவர்களை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது(இறக்கத்துடன் கூடிய ஆட்டங்கள்), SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி 20 புள்ளிகளை இழந்து வர்த்தகம் நடந்து வருகிறது, நமது NIFTY யும் உலக சந்தைகளை தொடர்ந்து OPEN ஆனாலும், நாம் முன்னரே பேசிக்கொண்டது போல ஆட்டங்கள் தொடரும், ஆகவே உங்கள் லாபங்களை எந்த நிலைகளிலும் உறுதி செய்துகொள்ள தவறாதீர்கள்… 

நமது NIFTY ஐ பொறுத்த வரை TECHNICAL ஆக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தான் VOLATILE என்ற முறையில் நகரும் போல் உள்ளது, இந்த நகர்வு மேலே 3520 என்ற புள்ளியை தடையாகவும், கீழே 3300 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் பெற்றுள்ளது, மேலும் NIFTY 3160 என்ற புள்ளியில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் CHANNEL BREAK OUT ஆகியுள்ளது மேலும் இதன் இலக்காக 3800 இருக்கும் என்று நாம் முன்னரே பேசிக்கொண்டோம், 

மேலும் NIFTY தற்பொழுது 3520 க்கு அருகில் சென்று திரும்பி உள்ளது, மேலும் இந்த இலக்கை அடைய NIFTY க்கு 300 புள்ளிகள் தேவைப்படுகிறது, ஆகவே இந்த 300 புள்ளிகளை அடைய அந்த அளவிற்கு கீழே செல்ல வேண்டும் அதாவது 3500 லிருந்து 3200 வரை, ஆகவே 3300 என்ற புள்ளி தற்பொழுது முதல் SUPPORT நிலையாக இருக்கும்,

இந்த புள்ளியை கீழே கடந்தால் அதன் அடுத்த இலக்கு 3200 TO 3148 இந்த நிலைகளுக்கு சென்று திரும்பலாம் என்று தோன்றுகிறது, ஆகவே மிகப்பெரிய வீழ்ச்சிகள் 3150 ஐ கீழே கடந்து தொடர்ந்தார்ப்போல் முடிவடைந்தால் தான் சாத்தியமாகும், இந்த நிலைகள் வரும்பொழுது நல்ல பங்குகளாக பார்த்து வாங்கலாம் இதை தொடர்ந்து 3800 என்ற இலக்கை நோக்கி NIFTY நகரும்….. 

இன்றைய NIFTY ஐ பொறுத்த வரை 3354 TO 3334 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆகவும் 3456, 3476, 3490 என்ற புள்ளிகள் நல்ல RESISTANCE ஆகவும் அமையலாம்,(ஆகவே இந்த நிலைகள் வரும்பொழுது உங்களின் POSITION கலீல் கவனமாக இருக்கவும், இந்த நிலைகளுக்கு மேலேயோ கீழேயோ உயர்வு தாழ்வுகள் தொடரும், இந்த நிலைகளுக்கு அடுத்த SUPPORT மற்றும் RESISTANCE நிலைகளை NIFTY இன் நிறைய நிலைகளில் பார்த்துக்கொள்ளுங்கள்


NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3402 TARGET 3418, 3446 TO 56, 3476, 3482, 3490 TO 3500, 3512 TO 520, 3537, 3555 TO 560, 3582, 3602 TO 608, 3620 

NIFTY SPOT BELOW 3380 TARGET 3369, 3358 TO 54, 3342 TO 40, 3334, 3325, 3311, 3303 TO 3295, 3255, 3228, 3211, 3189, 3150 TO 148 

கவனிக்க வேண்டிய பங்குகள்

POWER GRID 

POWER GRID ஐ பொறுத்த வரை கடந்த சில நாட்களாக நல்ல VOLUME உருவாகி வருவதை படத்தில் பாருங்கள், மேலும் 102 என்ற புள்ளியில் TOPS எனப்படும் RESISTANCE உள்ளதையும் பாருங்கள், ஆகவே 103 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்கு 110, 115 என்ற அளவில் இருக்கும், ஆனால் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சந்தைகளின் போக்கை பொறுத்து நாம் உயரங்களில் வாங்குவது மிகச்சரியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே, ஆகவே இந்த பங்கு 93 என்ற புள்ளிக்கு அருகில் வரும்பொழுது வாங்குங்கள் இலக்குகள் முன்னர் சொன்னதே இதன் S/L ஆக 92 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள், 92 ஐ கீழே உடைத்தால் விற்று விடுங்கள், மறுபடியும் 86 என்ற புள்ளி வரும்பொழுது வாங்கிக்கொள்ளலாம் இதன் S/L 85

POWER GRID CHART