Wednesday

NIFTY ON WEDNESDAY

NIFTY இன் அடுத்த கட்ட இலக்குகள் FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி எங்கெல்லாம் வருகிறது என்று விளக்கப் படங்களுடன் இந்த பதிவிற்கு கீழ் கொடுத்துள்ளேன் அதையும் படித்து விடுங்கள், பயனுள்ளதாக இருக்கும்................

15-04-09 – WEDNESDAY 

INTEL COMPANY இன் ரிசல்ட், RETAIL SALES DOWN, பயம், PROFIT BOOKING இந்த காரணங்களால் அமெரிக்க சந்தைகளில் நேற்று வீழ்ச்சி, கடந்த 2, 3 நாட்களாக இப்படித்தான் அவர்கள் நகர்ந்து வருகிறார்கள் மேலும் TECHNICAL ஆக 8100 என்ற புள்ளி DOW JONES க்கு தடையை கொடுக்கலாம் என்று நாம் முன்னரே பேசிக்கொண்டபடி அந்த புள்ளிகளில் இருந்து கீழ் வந்திருக்கிறது, இந்த வீழ்ச்சி தொடருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

TECHNICAL ஆக சொல்லவேண்டும் என்றால் DOW JONES 7900 என்ற புள்ளிகளுக்கு கீழ் தொடர்ந்து இரண்டு நாட்கள் முடிவடைந்தால் அங்கு வீழ்ச்சிகள் தொடரும். இந்த வீழ்ச்சியின் இலக்கு 7100 என்ற அளவில் இருக்கலாம். இருந்தாலும் இந்த வீழ்ச்சிகள் கீழ் கண்ட புள்ளிகளில் வரிசையாக SUPPORT உம் பெறலாம் அதாவது BELOW 7900 (IF CLOSE) TARGET 7750 TO 720, 7650, 7480 TO 450, 7300 TO 7250, 7100 TO 7050, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் தான் உள்ளது... 

இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகளிலும் இதே கதை தான் ஆனால் அங்கு ஆட்டங்கள் அதிகமாக காணப்படுகிறது, ஆகவே அதன் நிலைகளை கவனித்துக்கொண்டே இருங்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் (எச்சரிக்கையாய் இருப்பது நல்லது தானே). அடுத்து நம்ம SINGAPORE NIFTY 10 பாயிண்ட் GAP DOWN ஆக OPEN ஆகி அந்த நிலயை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது, (INFOSYS RESULT க்காக WAIT பண்ணுவாங்க போல)… 

நம்ம NIFTY ஐ பொறுத்த வரை உலக சந்தைகளின் போக்குகளை தொடர்ந்து OPEN ஆனாலும் RESULT காலமாக இருப்பதால் ஆட்டங்கள் அதிகமாகவே இருக்கும் என்று தான் நினைக்க தோன்றுகிறது, திங்கள் கிழமை கூட இதே கதை தான் நடந்தது. மேலும் NIFTY க்கு 3420, 3433 TO 36, 3448 TO 3451 இந்த புள்ளிகளில் எல்லாம் சரியான தடைகள் உள்ளது, இவைகளை கடந்தால் தான் அடுத்த உயர்வு தொடரும்…

என்னை பொறுத்த வரை ஒரு சிறிய CORRCTION 3450 TO 3540 என்ற புள்ளிகளில் இருந்து வந்தால் நல்லது என்றே தோன்றுகிறது, தின வர்த்தகர்கள் அடிக்கடி லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்… 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3418 TARGET 3433 TO 36, 3448 TO 52, 3472, 3489 TO 93, 3520, 3537, 3550 TO 55, 3565, 3573, 3600 TO 605, 3640 TO 650 

NIFTY SPOT BELOW 3334 TARGET 3307 TO 300, 3284, 3269 TO 72, 3257 TO 54, 3240 TO 34, 3211, 3198, 3180, 3161, 3147 TO 3140 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

DISHMAN PHARMA 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் DISHMAN PHARMA ஒரு நீண்ட TREND LINE RESISTANCE ஐ 4 முறை கடக்க முடியாமல் திணறி கீழ் வந்துள்ளதை கவனியுங்கள். மேலும் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள இரண்டு கோடுகள் தற்பொழுது DISHMAN PHARMA இல் ஒரு CHANNEL அமைப்பு 131 TO 135 என்ற இலக்குடன் முறையே 113 என்ற புள்ளியை BREAK OUT புள்ளியாக பெற்று இந்த அமைப்பை உருவாக்கி கொண்டு வருகிறது, இந்த அமைப்பின் தற்போதைய தாங்கு நிலை புள்ளியாக 95 உள்ளது. மேலும் இதற்க்கு கீழ் 93 என்ற புள்ளியில் நிறைய BOTTOM SUPPORT வேறு உள்ள்ளது. மேலும் இந்த பங்கில் கடந்த வாரத்தில் இருந்து VOLUME அதிகமாக உருவாகிவருகிறது, ஆகவே இந்த பங்கில் ஒரு நல்ல உயர்வு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது. RISK எடுப்பவர்கள் இந்த பங்கை 101 TO 98 என்ற புள்ளிகளில் வாங்கலாம் இதன் S/L ஆக 95 TO 93 என்ற புள்ளிகளுக்கு கீழ் முடிவடையாமல் இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த பங்கு 113 என்ற புள்ளியை மேலே கடந்தால் வேகமான நகர்வுகள் இருக்கும், அந்த நேரத்தில் தின வர்த்தகர்களும் இதில் இடுபடலாம்

DISHMAN CHART


REL INFRA
நாம் நேற்று பார்த்த REL INFRA பங்கில் ABOVE 680 BUY, அல்லது 680 என்ற புள்ளிகளுக்கு அருகில் வரும்போது SELL பண்ணவும் (விளக்கமாக நேற்றைய பதிவில் படித்துக்கொள்ளுங்கள்)