Wednesday

NIFTY ON WEDNESDAY

22-04-09 – WEDNESDAY 

U.S. Treasury Secretary Timothy Geithner அமேரிக்காவின் அனைத்து வங்கிகளுக்கும் புதிதாக கடன்களை வழங்கும் அளவுக்கு தேவையான Capitalize இருப்பதாக அறிவித்ததனால் அமேரிக்காவில் வங்கிப்பங்குகள் (FINANCIAL SECTORS) உயர்வை கண்டு அமெரிக்க சந்தைகளை உயரத்தில் முடித்துள்ள, ஆனால் TECHNICAL ஆக 7770, 7750, 7700 என்ற புள்ளிகளில் DOW JONES க்கு நல்ல SUPPORT உள்ளது இந்த புள்ளிகளை கீழே கடந்தால் 7200 என்ற நிலைக்கு வந்து விடும்….

தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று இறக்கத்துடன் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகள் அமெரிக்க FUTURE MARKET ஐ ஒட்டியே ஆடிக்கொண்டு சற்று கீழே வருகிறது HANG SENG மட்டும் சற்று உயரத்தில் உள்ளது, SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி தற்பொழுது 23 புள்ளிகள் உயர்வுடன் நடந்து வருகிறது…

நமது NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகும் பிறகு மேலும் கீழும் ஆடும் என்றே தோன்றுகிறது, தற்பொழுது 3300 மற்றும் 3520 என்ற இரண்டு புள்ளிகள் தான் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்யும், அது வரை எழுதியதையே திரும்பி திரும்பி எழுத வேண்டி வரும் என்ன செய்வது பொறுத்துக்கொள்ளுங்கள்….

நமது NIFTY ஐ பொறுத்த வரை TECHNICAL ஆக இன்று 3425, 3441 TO 3450 இந்த புள்ளிகள் நல்ல தடைகளை கொடுக்கலாம் இந்த புள்ளிகளை மேலே கடந்தால் அடுத்து 3472, 3490 என்ற புள்ளிகள் அடுத்த தடைகளை கொடுக்கும் இந்த புள்ளிகளையும் மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் சரி இப்பொழுது இந்த படத்தை பாருங்கள்இது NIFTY இன் INTRADAY 1 HOUR CHART 

NIFTY INTRADAY 1 HOUR CHART



இதில் NIFTY இல் HEAD & SHOULDER அமைப்பு உருவாக்கி வருவதை பாருங்கள் தற்பொழுது 2 ஆவது SHOULDER உருவாகி வருகிறது இந்த அமைப்பின் NECK LINE 3307 TO 3300 என்ற புள்ளிகளில் உள்ளது, இந்த புள்ளிகளை கீழே கடந்தால் இந்த அமைப்பின் படி NIFTY இன் இலக்கு 3150 TO 3124 அதே நேரம் NIFTY 3300 ஐ கீழே கடக்காமல் 3450 என்ற புள்ளியை மேலே கடந்து தொடர்ந்தார்ப்போல் முடிவடையுமானால் இந்த HEAD & SHOULDER அமைப்பு உருக்குலைந்து விடும்…. 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3390 TARGET 3401, 3415 TO 18, 3425 TO 28, 3435, 3442 TO 3450, 3465 TO 72, 3480 TO 3492, 3512 TO 3520, 3537, 3555 TO 60 

NIFTY SPOT BELOW 3354 TARGET 3337 TO 34, 3324, 3311, 3307 TO 3300, 3274, 3264, 3255, 3228, 3198, 3173, 3148, 3093 

கவனிக்கவேண்டிய பங்குகள் 

HDFC BANK 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள HDFC BANK இன் படத்தில் சிகப்பு நிறத்தில் வரையப்பட்ட நீண்ட கோடு HDFC BANK க்கு நல்ல தடையை தருகிறது ஆனால் இந்த RESISTANCE கோட்டை HDFC BANK மேலே கடப்பதற்கு முயற்சி செய்து வருகிறது, மேலும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 1010 TO 1020 என்ற புள்ளிகளில் HEAD & SHOULDER அமைப்பை இந்த பங்கு BREAK OUT செய்துள்ளது இதன் படி HDFC BANK இன் இலக்கு 1200 TO 1220 என்ற அளவில் இருக்கும், மேலும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த ஏற்ற இறக்க சந்தைகளில் HDFC 1040 TO 1115 என்ற புள்ளிகளுக்கு இடையே வர்த்தகம் செய்துவருகிறது ஆகவே 1115 க்கு மேலேயோ அல்லது 1125 க்கு மேலேயோ வாங்கலாம் இதன் இலக்கு 1170, 1200, 1220 என்ற புள்ளிகளில் இருக்கும் இதன் S/L ஆக 1082 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று விடுங்கள், பிறகு 1040 என்ற புள்ளிக்கு திரும்பி வரும்பொழுது வாங்குங்கள் இதன் S/L 1030…….. 

HDFC BANK CHART


CIPLA 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள CIPLA வின் இரண்டு படங்களையும் பாருங்கள், இதில் ஒரு படம் DAILLY VIEW, மற்றொரு படம் MONTHLY VIEW, இந்த இரண்டு படங்களிலும் CIPLA MEDIUM TERM INVESTMENT க்கு ஏற்ற பங்காக உருவாக்கி வருகிறது, மேலும் தற்பொழுது 245 TO 248 என்ற புள்ளிகளில் முறையே TREND LINE RESISTANCE AND TOP RESISTANCE என்ற வகையில் தடைகளை பெற்றுள்ளது இந்த தடைகளை எல்லாம் கடந்து 250 என்ற புள்ளிக்கு மேல் வந்தால் வாங்கலாம் இதன் இலக்கு 280, 304, 360 என்ற அளவில் இருக்கும், சந்தைகள் ஒத்துழைத்தால் விரைவாகவே இந்த இலக்கை அடையும் சரி இரண்டு படங்களையும் பார்த்துவிடுங்கள்


CIPLA DAILLY CHART

CIPLA MONTHLY CHART

PLEASE KEEP EYE ON POWER GRID TOO