Tuesday

NIFTY ON TUESDAY

21-04-09 TUESDAY 

BANK OF AMERICA வால் கொடுக்கப்பட்ட கடன்களை திரும்பி பெறுவதில் சிக்கல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்று அறிவிப்புகள், இதை தொடர்ந்து அமெரிக்காவின் முக்கியமான நிறுவனமான IBM இன் RESULT சரி இல்லாதது, போன்ற காரணங்களால் அமெரிக்க சந்தைகள் நல்ல இறக்கத்தை கண்டது. இதை தொடர்ந்து நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET உம் சற்று கீழ் இறங்கியே காணப்படுகிறது…

ஆசிய சந்தைகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது, SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 60 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்து மேலும் கீழே செல்லலாமா வேண்டாமா என்று ஆடிக்கொண்டிருக்கிறது, இதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் நமது சந்தைகளிலும் இந்த GAP DOWN இருக்கும் ஆனால் அந்த நேரங்களில் உலக சந்தைகள் மற்றும் SINGAPORE NIFTY இன் நிலைகளை பொறுத்து நமது சந்தைகளின் தொடக்கம் நிர்ணயிக்கப்படும், என்னை பொறுத்த வரை இதே நிலைகளில் உலக சந்தைகள் நின்று கொண்டிருந்தாள் நமது NIFTY 3334 TO 3300 என்ற புள்ளிகளில் SUPPORT எடுக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, 3300 க்கு கீழ் தான் வீழ்ச்சிகள் உறுதிப்படும், அகவே அவசரப்பட்டு SHORT SELLING இல் இறங்க வேண்டாம் பொறுத்து இருந்து செயல்படுங்கள்... 

நமது நிபிட்டி ஐ பொறுத்த வரை TECHNICAL ஆக CHART இல் உள்ள CHANNEL இன் SUPPORT 3300 என்ற புள்ளிக்கருகில் உள்ளதை படத்தில் பாருங்கள் 

NIFTY CHART

NIFTY இந்த புள்ளியை கீழே கடந்து முடிவடையுமானால் இதன் இலக்கு FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி வரிசையாக 3285, 3143, 3030, 2914, என்ற புள்ளிகளில் இருக்கும், இதில் 3143 என்ற புள்ளி மிகவும் நல்லதொரு SUPPORT ஐ NIFTY க்கு கொடுக்கலாம் 

இந்த 3143 என்ற புள்ளியையும் கீழே கடந்தால் NIFTY இன் இலக்கு 2800 க்கு அருகில் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது, ஆனால் எனது எதிர்பார்ப்பு 3140 என்ற இடத்தில் SUPPORT எடுக்கும் என்று எண்ணுகிறேன், பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று இந்த புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும், இன்றைக்கு NIFTY க்கு 3334 TO 3300 முக்கியமான புள்ளிகள் 

NIFTY இன் இன்றைய நிலைகள் 

NIFTY ABOVE 3385 TARGET 3400 TO 406, 3418, 3427 TO 30, 3442, 3447 TO 3453, 3470, 3483 TO 90, 3498 TO 3512, 3520, 3547, 3571 

NIFTY BELOW 3354 TARGET 3339 TO 3334, 3319, 3311 TO 3300, 3264, 3255, 3240, 3233 TO 28, 3198, 3189, 3173, 3149, 3093 

கவனிக்க வேண்டிய பங்குகள்

HCL INFOSYS

HCL INFOSYS இந்த பங்கில் திடீர் என்று VOLUME ஏறி வருகிருகிறது மேலும் இதில் CHANNEL என்ற அமைப்பு 65 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் 98 என்ற புள்ளியை RESISTANCE ஆகவும் பெற்றுள்ளதை படத்தில் பாருங்கள், இந்த அமைப்பின் படி 99 TO 100 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்கு 120, 130 என்ற அளவில் இருக்கும், மேலும் இன்று கண்டிப்பாக GAP DOWN OPEN ஆக தான் நமது சந்தைகள் துவங்கும் ஆகவே அந்த சந்தர்ப்பத்தில் 85 TO 83 என்ற புள்ளிகள் வந்தால் வாங்கலாம் கண்டிப்பாக இதன் S/L ஆக 82 ஐ கடந்து கீழே போனால் விற்று விடுங்கள், S/L ஐ அலட்ச்சியமாக நினைத்து வர்த்தகம் செய்வது தவறானது கவனமாக இருங்கள்……..

HCL INFO CHART


POWER GRID GOOD BUY AT LOW 95 TO 93 S/L 92