Friday

A VIEW OF GOLD

03-04-09- FRIDAY

G20 நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தற்பொழுது நடந்து வரும் பொருளாதார தேக்க நிலைகளை சரி செய்ய கூடியதாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் உலகசந்தைகள் முன்னேறி உள்ளன…

நான் பார்த்த வரையில் பங்கு வர்த்தகமும், தங்க வர்த்தகமும் எப்பொழுதும் எதிர் மறையாக தான் இருக்கும், தற்பொழுது பங்கு சந்தைகளில் ஏற்ப்பட்டு இருக்கும் இந்த உயர்வு தங்கத்தில் வீழ்ச்சியினை கொடுக்கும் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தும், ஆகவே TECHNICAL ஆக தங்கத்தின் நிலைமை என்ன, தங்கத்தில் வீழ்ச்சிகள் வருமா என்பதினை வரைபடம் மூலம் பார்த்துவிடுவோம்,

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பாருங்கள் இது தங்கத்தின் EOD DAY VIEW CHART, இதில் இரண்டு ஜோடி பச்சை நிற கோடுகளும், ஒரு நீண்ட சிகப்பு நிற கோடும், நான்கு வைலட் நிற கோடுகளும் கொடுத்துள்ளேன், முதலில் எந்த கோடு எதனை குறிக்கின்றது என்பதினை பார்த்துவிடுவோம், அப்பொழுதுதான் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்…

பெரிய இரண்டு பச்சை நிறக்கோடு = பெரிய CHANNEL ஐ குறிக்கும் (இது 950 என்ற புள்ளியை RESISTANCE ஆகவும் 845 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் கொண்டுள்ளது), சிறிய இரண்டு பச்சை நிறக்கோடு = சிறிய CHANNEL ஐ குறிக்கும் (இது 935 என்ற புள்ளியை RESISTANCE ஆகவும் 880 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் கொண்டுள்ளது),

அடுத்து ஒரு சிகப்பு நிறக்கோடு TREND LINE SUPPORT ஆகவும் , அந்த TREND LINE நே HEAD & SHOULDER PATTERN நின் NECK LINE ஆகவும் உள்ளதை பாருங்கள், (இதில் HEAD, SHOULDER அமைப்புகளையும், NECK LINE இடத்தையும் படத்தில் குறிப்பிட்டுள்ளேன்),

அடுத்து நான்கு வைலட் நிற HORIZONTAL (படுக்கை வச) கோடுகள் வரைந்துள்ளேன், இந்த கோடுகள் அனைத்தும் கடந்த அக்டோபர் மாத LOW விலிருந்து (680), பிப்ரவரி மாத HIGH ஆனா 1006 என்ற இரண்டு புள்ளிகளுக்கும் இடையேயான FIBONACCI RETRACEMENT LEVEL களை குறிக்கும் கோடுகள், ஒவ்வொரு கோட்டிற்கும் மேலே அதன் % களையும், அந்த இடம் குறிக்கும் புள்ளிகளையும் குறித்துள்ளேன்,

சரி இப்பொழுது படத்தை பாருங்கள், (பொறுமையாக ஒவ்வொரு கோடாக பாருங்கள் )

GOLD DAY VIEW CHART


இந்த படத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்ப்பட்ட HIGH ஆனா 1006 என்ற புள்ளியில் இருந்து இறங்க ஆரம்பித்த தங்கமானது 880 என்ற புள்ளிகள் வரைக்கும் (இந்த 880என்ற புள்ளி FIBO RETRACE இல் 38.2% ஐ குறிக்கும் படத்தில் குறித்துள்ளேன் பாருங்கள் ) கீழே வந்து பிறகு 970 என்ற புள்ளிகள் வரைக்கும் உயர்ந்து (இந்த 970TO 980 என்ற புள்ளிகள் 880 மற்றும் 1006 என்ற புள்ளிகளுக்கு இடையேயான 61.8%FIBONACCI RETRACEMENT இடமாகும் ) மீண்டும் கீழே இறங்கிக்கொண்டுள்ளது,

சரி இந்த ஏற்ற இறக்கங்களில் உள்ள TECHNICAL PATTERNS என்ன, என்ன என்று பார்ப்போம்…

முதலில் 2 CHANNEL அமைப்பு உள்ளதை பாருங்கள், இதில் சிறிய CHANNEL அமைப்பு 935 என்ற புள்ளியை RESISTANCE ஆகவும், 880 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் பெற்றுள்ளது, இந்த CHANNEL அமைப்பு கீழே உடைபட்டால் அதாவது 880என்ற புள்ளியை GOLD கீழே கடந்து சென்றால் இந்த CHANNEL அமைப்பின்படி அதன் கீழ் நோக்கிய இலக்கு 845 ஆகும்…

இதே போல் பெரிய அளவில் இருக்கும் CHANNEL அமைப்பு 950 என்ற புள்ளியை RESISTANCE ஆகவும், 845 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் பெற்றுள்ளது, இந்த CHANNEL அமைப்பு கீழே உடைபட்டால் அதாவது 845 என்ற புள்ளியை GOLD கீழே கடந்து சென்றால் இந்த CHANNEL அமைப்பின்படி அதன் கீழ் நோக்கிய இலக்கு 770TO 757 ஆகும்…

அடுத்து சிகப்பு நிறத்தில் உள்ள TREND LINE ஐ பாருங்கள் இந்த கோடானது மூன்று முறை GOLD க்கு SUPPORT LINE ஆக இருந்து நேற்று 900 TO 905 என்ற புள்ளிகளுக்கு இடையில் கீழே உடைபட்டுள்ளது, மேலும் இந்த கோடானது GOLD க்கு ஒரு HEAD & SHOULDER அமைப்பை கொடுத்துள்ளதை பாருங்கள்,
இந்த HEAD & SHOULDER அமைப்பிற்கு 900 என்ற புள்ளி தற்பொழுது NECK LINE ஆகவும் உள்ளது, மேலும் நேற்று இந்த புள்ளியை GOLD கீழே உடைத்து மீண்டும்900 என்ற புள்ளிகளுக்கு மேலே முடிவடைந்துள்ளது (கீழ் இறங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக 900 க்கு கீழே முடிவடைய வேண்டும்),

அடுத்து ஒரு உதா நிற கோடு உள்ளதை பாருங்கள், இந்த கோடு 890 என்ற இடத்தில் GOLD க்கு ஒரு SUPPORT ஐ கொடுக்கும்…

அடுத்து வைல்ட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள கோடுகள் FIBONACCI RETRACE அளவுகளின் படி GOLD 880 என்ற புள்ளியை கீழே கடந்தால், அடுத்து எந்த எந்த இடங்களில் SUPPORT எடுக்கலாம் என்ற புள்ளிகளை விளக்குகிறது…

அடுத்து 880, மற்றும் 873 என்ற புள்ளிகளில் PREVIOUS LOW உள்ளது …

மேற்க்கண்ட அனைத்தையும் படத்தில் மறுபடியும் பாருங்கள்

சரி மேற்கண்ட அனைத்து விஷயங்களாலும் நாம் அறிவது என்ன? GOLD 900என்ற புள்ளியை உடைத்தாளே கீழ் இறங்குவதற்கான வாய்ப்பை பெறுகிறது, ஆனால் 890, 880, 873 என்ற புள்ளிகளில் வரிசையாக நிறைய SUPPORT உள்ளதால் GOLD 870 என்ற புள்ளியை கீழே கடந்தால் அதன் இலக்கு 845, 820, 800, 770, 760 TO 757, என்ற அளவுகளில் இருக்கும்…

மேலும் படத்தில் குறிப்பிட்டுள்ள சிறிய CHANNEL அமைப்பின் TOP RESISTANCE புள்ளியாக 935 உள்ளது ஆகவே இந்த புள்ளிகள் GOLD க்கு நல்ல தடை நிலையை கொடுக்கலாம், நீங்கள் RISK எடுக்கும் COMMODITY TRADER ஆக இருந்தால் 930 TO 935 என்ற புள்ளிகளுக்கு GOLD வந்தால் SHORT SELL பண்ணலாம் இதனுடைய S/L940 என்று வைத்து கொள்ளுங்கள் கொஞ்சம் இன்னும் RISK எடுப்பவராக இருந்தால் 950 ஐ S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள்…

சரி இதிலிருந்து நமது பங்கு சந்தைக்கான விஷயம் என்னவென்றால் GOLD 880 TO 870 என்ற புள்ளிகளை கீழே கடந்து தொடர்ந்து முடிவடைந்தால், அதன் கீழ் நோக்கிய பயணம் தொடரும், நாம் முன்னாள் பேசிக்கொண்டது போல, பங்கு வர்த்தகமும், தங்க வர்த்தகமும் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருக்கும், அதன் அடிப்படையில் பார்த்தால் இங்கு தங்கம் 870 என்ற புள்ளியை கீழே கடந்து செல்லும் பொது நமது பங்குசந்தைகள் மேலே உயரும் சரிதானே ….

இந்த படம் GOLD இன் FULL VIEW இதையும் சும்மா பாருங்கள்


GOLD FULL VIEW CHART


உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்
நன்றி