Sunday

கேள்வி பதில் 2

17-05-09 SUNDAY

கேள்வி பதில் 2

Vijay renga open interest பற்றி நன்றாக அறிந்து கொண்டேன் நன்றி. மேலும் open interest விவரங்களை nseindia-வில் பார்க்கலாம் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலமாக அறிந்தேன்.ஆனால் அது பற்றிய விபரங்கள் கிடைக்க வில்லை.நானும் முயன்று பார்த்து விட்டேன்.தயவு செய்து link தர முடியுமா...? நன்றி. . . 

கண்டிப்பாக பார்க்கலாம் விஜய் ஆனால் நீங்கள் நினைப்பது போல் LINK கொடுத்து பார்ப்பது போல் NSEINDIA.COM இல்லை அதற்க்கு பதிலாக BHAVCOPY DOWNLOAD செய்து XL FORMATE இல பார்க்கலாம். இந்த BHAVCOPY DOWNLOAD செய்ய கீழ்க்கண்ட முறையில் www.nseindia.com சென்று பாருங்கள். 

www.nseindia.com - SELECT F&0 (MENU) - SELECT MARKET TODAY - DOUBLE CLICK THE "Bhavcopy Download | Archives" இவாறு செய்தால் ஒரு POP UP BOX OPEN ஆகும் அதில் கீழே படத்தில் காட்டியுள்ள படி DERIVATIVES தலைப்பின் கீழ் இருக்கும் BHAVCOPY என்பதினை SELECT செய்து கீழே எந்த தேதிக்கான OPEN INTEREST DETAILS வேண்டுமோ அந்த தேதியினை கொடுத்து GET என்று கொடுத்தால் அதே பக்கத்தின் மேலே CSV, DBF என்ற இரண்டு FORMATE இல் எதுவேண்டுமானாலும் DOWNLOAD செய்து கொள்ளும்படி இருக்கும் அதில் CSV என்ற FORMATE இல் உள்ளதை DOUBLE CLICK செய்யுங்கள் இப்பொழுது உங்கள் PC இல் DOWNLOAD ஆகிவிடும் இப்பொழுது உங்களுக்கு தேவையான OPEN INTEREST மற்றும் OPEN INTEREST DIFFERENCE போன்ற எல்லா விவரங்களும் கிடைத்து விடும், 

WATCH THIS HOW TO DO



DOWN LOAD ஆகி வரும் XL SHEET இப்படித்தான் இருக்கும்



Dear Saravana balaji, 
First i would like to thanks for your effort in Tamil. After going through your blog my clarity about the market improved a lot.First i read about fibonacci in your blog only. I have some confusion in that. what is the swing (high & low) we have to consider to find the support and resistance. Either previous day high & low or Last one hour high & low or when i have to use these two and what is the relevence. which is the best tool to calculate res & support. What is tool you employ to calculate this ( your calculation has been very precise.) .

I am doing day trading in mini nifty only ( not got the confidence to hold overnight position). But i feel in day trading tension is more and i am looking for swing trading (2-3 days). But i am not sure about how to arrive at conclusion to hold the position for overnight ( I think this may be problem faced by many people) or what is technique i have to follow for swing trading. 

I have another general doubt that when we can do the trading in nifty itself, why we have to thing of trading in stocks ( bcos we have monitor details of many stocks to arrive at right stock and also we have monitor that stock atleast for some time to understand the movement of that stock). which one better. What is the pros and cons of doing trading in nifty and stocks. I think these doubts are quite common and your answers will help me and as well others. In case any doubts ( it will be more of technical doubts), is it advisable to call you on your mobile. If yes what timing will be comfortable for you. (I requet you not to disclose my name in the blog) Thanks & Regards 



"what is the swing (high & low) we have to consider to find the support and resistance. Either previous day high & low or Last one hour high & low or when i have to use these two and what is the relevence. which is the best tool to calculate res & support." 

SUPPORT RESISTANCE ஐ பொறுத்த வரை ஒவ்வொரு HIGH யும் ஒவ்வொரு LOW வும் முக்கியம் தான், ஆனால் நீங்கள் INTRADAY CHART இல் 1 HR TIME FRAME பயன் படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் 1 நாளைக்கு 6 BAR கிடைக்கும், இதில் ஒரு குறிப்பிட்ட BAR இன் LOW OR HIGH தான் SUPPORT AND RESISTANCE ஆக இருக்கும் என்பதினை கண்டு பிடிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றது, அதில் முக்கியமானவைகளை பார்ப்போம், 

முதலில் TREND LINE SUPPORT / RESISTANCE முக்கியம் அடுத்து இதற்க்கு முன் (YESTERDAY, DAY B4 YESTERDAY) உருவாகியுள்ள HIGH மற்றும் LOW புள்ளிகள் முறையே SUP / RES ஆக இருக்கும் (பொதுவாக முன்னர் ஏற்ப்பட்ட HIGH மற்றும் LOW புள்ளிகள் DOUBLE TOP, TRIPLE TOP என்று இருந்தால் இன்னும் வழுவான RESISTANCE யும், அதே போல் கீழே DOUBLE BOTTOM, TRIPLE BOTTOM என்று இருந்தால் வழுவான SUPPORT யும் கொடுக்கும் ஆகவே முக்கியமாக அவைகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்) 

அடுத்து FIBONACCI அளவுகளை பயன் படுத்தி நாம் SUPPORT, RESISTANCE களை எளிதாக அறிந்து கொள்ள முடியும், FIBONACCI க்கு தேவை ஒரு LOW மற்றும் ஒரு HIGH அது 1DAY CHART, 1 HR CHART, 5MIN CHART, 1 MIN CHART OR DOTS எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உங்களின் பயன்பாட்டில் உங்களுக்கு எளிதாக இருக்கும் முறையை பயன்படுத்துங்கள், நான் இந்த மூன்றையும் தான் பயன்படுத்துகிறேன் 

"what is technique i have to follow for swing trading" 
பொதுவாக அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு சந்தை தொடர்ந்து உயரம் என்று இருந்தால் நீங்கள் SWING TRADING செய்யலாம், அதற்க்கு BREAK OUT மற்றும் BREAK DOWN என்ற வகையில் EOD OR INTRADAY CHART இல் ஏதும் அமைப்புகள் உள்ளதா என்று பாருங்கள் (அது சின்ன சின்ன PATTERN BREAK OUT/DOWN ஆக இருந்தாலும் சரிதான்) முக்கியமான விஷயம் அடுத்த நாள் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகள் CHART இல் உள்ளதா என்பதினை கவனிப்பது மட்டும் தான், உதாரணமாக ஒரு CUP FORMATION அமைந்து இன்னும் 50 புள்ளிகள் உயரும் என்று BREAK OUT பெற்றுள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள் தாராளாமாக நீங்கள் அடுத்த நாள் உங்கள் POSITION ஐ தொடரலாம், ஆனால் இதற்கான S/L ஐ கண்டிப்பாக பயன்படுத்துங்கள், CHART உடன் அதிக அனுபவமும் வேறு சில மிக்கியமான விசயங்களையும் நீங்கள் பயன்படுத்தினால் S/L இல்லாமலேயே உங்கள் வர்த்தகத்தை செய்யலாம்.

"I have another general doubt that when we can do the trading in nifty itself, why we have to thing of trading in stocks ( bcos we have monitor details of many stocks to arrive at right stock and also we have monitor that stock atleast for some time to understand the movement of that stock). which one better. What is the pros and cons of doing trading in nifty and stocks" 

MINI NIFTY, NIFTY இதில் வர்த்தகம் செய்வது எளிமையானது தான் தொடரலாம் ஆனால் முக்கியமான விஷயம் நீங்கள் கவனிக்க வேண்டியது, என்றுமே தொடர்ந்து 20 புள்ளிகளுக்கோ 50 புள்ளிகளுக்கோ வர்த்தகம் செய்யக்கூடாது எதற்கு வாய்ப்புகள் உள்ளதோ அதை செய்து வாருங்கள், உதாரணமாக நீங்கள் தினமும் NIFTY இல் 30 புள்ளிகள் கிடைத்தால் போதும் என்று வர்த்தகம் செய்து வருகின்றீர்கள் என்று வைத்துக்கொண்டால் தினமும் உங்கள் நோக்கம் எப்பொழுதுமே 30 புள்ளிகளை மட்டுமே எதிர் நோக்கம் பழக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு, NIFTY 200 புள்ளிகள் உயரப்போகிறது என்ற சூழ்நிலை வரும்போது NIFTY 30 புள்ளிகள் ஏறிய பின்பு பழக்க தோஷம் வந்து நம்மை கொஞ்சம் தடுமாற வைக்கும் ஆகவே உங்களுக்கென்று ஒரு பாதை வைத்துக்கொள்ளாமல் CHART என்ன சொல்கிறது என்று பார்த்து வாய்ப்புகளுக்கு மட்டும் நீங்கள் உங்கள் வர்த்தகத்தை மேற்கொண்டால் NIFTY மிகவும் அருமையான வாய்ப்பு தான் நன்றாக செய்யுங்கள், மற்றும் தினமும் வர்த்தகம் செய்யவேண்டும் என்ற கட்டாயத்தை வைத்துக்கொள்ளாதீர்கள், வாய்ப்புக் கிடைத்தால் பயன் படுத்துங்கள்.

3kumar4777's message in tamil – 
வணக்கம் சார் செந்தூர் வேலன் நான் முதலில் offline trading செய்தேன். இப்போ புதிதாக online trading nse equity reliance money இல் செய்யவுள்ளேன். online trading ன் வீதி முறைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி சொல்லவும். 

ONLINE இல் வர்த்தகம் செய்வது தான் நல்லது அதையே செய்யுங்கள், அதில் உள்ள பிரச்சனை நமக்கு சரியான முறையில் விரைவாக ORDER PLACE பண்ண தெரிந்து இருக்க வேண்டும், மற்றும் MODIFY, S/L ORDER, DISCLOSER QTY இது போன்ற முக்கியமான விசயங்களை கையாள தெரிந்திருந்தால் எந்தப்பிரச்சனையும் இருக்காது 

மேலும் அனைவருக்கும் COMPUTER, BROAD BAND CONNECTION போன்ற முக்கியமான பிரச்சனைகளால் தான் இந்த ONLINE வர்த்தகம் பரவலாக அனைவராலும் பயபடுத்தமுடியாமல் இருக்கின்றது, கண்டிப்பாக இதுவும் ஒருநாள் CELL PHONE ஐ போல அனைவரும் பயன்படுத்தும் சாதாரணமான விஷயமாகிவிடும். மேலும் நீங்கள் பயன்படுத்தும் RELIANCE MONEY இல் அவர்களின் TRADING PLATFORM என்னை பொறுத்த வரையில் சரியில்லை என்றே சொல்லுவேன்.


Ps I need your advise to manage my money to get some target returns after certain period. please find the excel sheet attached. I am not good in money management. please advise me the financial instruments to be used for my needs. 
Thank you in advance 
Thanks & Regards M.Vijayan 

Mr. விஜயன் உங்களின் XL SHEET பார்த்தேன் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றீர்கள் வாழ்த்துகள் சரியான திட்ட மிட்ட வாழ்க்கை பயணம், நீங்கள் கையில் வைத்திருக்கும் பணத்தில் முதல் பாதியை சந்தையில் முதலீடு செய்யுங்கள் தேவைப்படின் மீதமுள்ள பாதியில் ஒரு 25% பின்பு முதலீடு செய்யலாம், 25% வங்கியிலே இருக்கட்டும் மேலும் உங்கள் மாத சேமிப்பு என்று சொல்லி இருந்தீர்கள் இல்லையா அந்த பணத்தில் 50% ஐ மாத மாதம் SIP முறையில் சந்தையில் முதலீடு செய்யுங்கள் அவ்வாறு நீங்கள் செய்யும் முதலீடு SHORT TERM GAINS என்ற முறையில் லாபம் பார்ப்பதற்காக பயன்படுத்தலாம் (நான் SHORT TERM என்று சொல்வதற்கு காரணம் சந்தைகள் BOTTOM OUT பெற்று புது BREAK OUT பெற்று உயர செல்ல முற்படும்போது அனைத்து வகையான பங்குகளும் விரைவாக உயரும் அப்படி உயரும்போது அதில் நல்ல பங்குகளை பார்த்து நாம் குறைந்த கால லாபங்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது அதையும் பயன்படுத்தலாம் (உங்களுக்கு ஒரு செய்தி வரும் 2018 TO 2020 க்குள் நமது SENSEX குறைந்தது 50000 புள்ளிகளுக்கு மேல் இருக்கும், எனது இலக்கு 70000 ) 

ஆகவே தற்பொழுது உங்களிடம் உள்ளத்தில் 50% நீண்ட கால முதலீடு, மாத சேமிப்பில் வரும் பணத்தில் 50% குறைந்தகால முதலீடு என்று வகை படுத்தி லாபம் செய்யலாம் அனைத்தையும் சந்தையிலா என்று என்ன வண்டாம் சந்தைய போக வேண்டிய பயணம் அதிகமாக இருக்கின்றது அதான் அப்படி சொல்ல வேண்டிய சூழ்நிலை, சந்தையை பார்த்தும், எந்த பங்கில் முதலீடு செய்வது என்றும் பயப்பட வேண்டாம், தொடர்ந்து நமது வலைத்தளத்தை படித்து வாருங்கள், அதில் குறிப்பிட்டு வரும் கவனிக்க வேண்டிய பங்குகளின் செயல்பாடுகளையும் கவனியுங்கள், அவைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு ஒரு நிதானத்தை ஏற்ப்படுத்தும்.


Thank you. In which website ema values available? I want to buy stocks at 20 ema support. Please don't give my name and place. Thank you sir... 

நண்பரே EMA DATA வுக்கென்று தனியாக WEBSITE இருப்பதாக எனக்கு தெரியவில்லை, DMA க்கு நிறைய WEBSITE இருக்கு உதாரணமாக www.vfmdirect.co.in/stocks/A.html இந்த WEBSITE அந்த விஷயங்கள் உள்ளது, வேறு யாருக்கும் தெரிந்தால் பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள், அப்படியும் கிடைக்க வில்லை என்றால் நான் பொதுவாக EMA DETAIL எல்லாம் CHART இல் EMA SET பண்ணுவதன் மூலம் தெரிந்து கொள்வேன், நீங்கள் பணம் கட்டத்தயாராக இருந்தால் ICHART ஐ பயன்படுத்துங்கள், இல்லை என்றால் YAHOO வின் LINK தருகிறேன் அங்கு நீங்கள் விரும்பும் EMA, SMA போன்ற விவரங்கள் கிடைக்கும் 

இது இலவசமான சேவை இந்த LINK ஐ CLICK www.finance.yahoo.com/q?s=ABAN.NS செய்து வரும் பக்கத்தில் LEFT SIDE இல் இரண்டாவதாக இருக்கும் CHARTS என்ற தலைப்பின் கீழ் இருக்கும் INTERACTIVE என்ற LINK MENU ஐ CLICK செய்யுங்கள் CHART OPEN ஆகும் இல்லை என்றால் இந்த LINK ஐ CLICK செய்யுங்கள் www.finance.yahoo.com/echarts?s=ABAN.NS#symbol=ABAN.NS;range=1d பிறகு உங்களுக்கு தேவையான பங்குகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம், (PLS COPY THIS LINK AND PASTE IN YOUR BROWSER )


பாலாஜி சார் உங்களின் சேவை மிகவும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது, கண்டிப்பாக தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துகள், நான் தினவர்த்தகம் செய்து வருகிறேன் என்ன பண்ணாலும் LOSE தவிர்கமுடியாததாகிவிடுமோ என்ற பயம் இருக்கு, நான் என்ன என்ன விஷயங்கள் செய்தால் பயமின்றி தினவர்த்தகம் செய்யலாம், இது எனக்கு மட்டும் இல்லை அனைவருக்கும் அடிக்கடி ஏற்படும் கேள்வி என்றே நினைக்கின்றேன் , 
நன்றி சண்முகநாதன் 
தேனீ 

Sir, Thanks for your wonderfull Q&A session last week and eagerly waiting for next one. Todays news letter you given a clue that this week discussion about day trading. Hope it fulfill my question. In this day trading discussion please add a feature that how to earn Rs.500 with a stop loss. Instruct strictly to trade in mini nifty to understand them. Many free chart avail for us so its easy for all fellow trader to obey what you have to say. You are an expert to simplify everything so you guide with a simple indicator to earn. In coming days i need your guidence in Swing trade.... 
Regards, S.சரவணன் 

கண்டிப்பாக நண்பர்களே, தின வர்த்தகம் செய்வது சாதாரண விசயமில்லை தான், நான் இந்த விசயத்துக்காக எனது நேரத்தை அதிகம் செலவு செய்து தினமும் தயார் ஆகி வருகிறேன் அதனால் தான் என்னை சார்ந்து இருப்பவர்களுக்கு நம்பிக்கையான பங்குகளை கொடுக்க முடிகிறது , எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்,
 
முதலில் நம் கவனிக்க வேண்டியது நமது சந்தையின் நகர்வைத்தான் நமது சந்தை இன்று எப்படி ஆரம்பித்து எப்படி நகரும் என்பதை கணிக்க வேண்டும், இதை கணிக்க நமக்கு கீழ்க்கண்ட காரணிகள் உதவியாக இருக்கும் அதாவது முதல் நாள் முடிவடைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் நிலைமை, இதை தொடர்ந்து நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET தற்போதைய நிலைமை, பிறகு இதை ஒட்டி ஆசிய சந்தைகள் நடந்து வருகிறதா இல்லை வேறு திசையில் உள்ளதா என்ற கவனிப்பு, அப்படி வேறு திசையில் இருந்தால் அதற்கான காரணம் அந்த காரணம் நமது சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சரியான கணிப்பு, மேலும் மிக முக்கியமான SINGAPORE NIFTY இன் நிலைமை ஆகியவற்றை பற்றி எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து சரி இன்று சந்தை இப்படித்தான் ஆரம்பிக்கும் என்ற முடிவுக்கு வரலாம், 

பிறகு நமது சந்தைகளின் TECHNICAL MOVE எப்படி இருக்கும் என்பதினை உங்கள் CHART உதவி கொண்டு முடிவு செய்யலாம், மேலே சொன்னதெல்லாம் சந்தையின் பொதுவான போக்குகள் எப்படி இருக்கும் என்பதினை கணிக்க உதவும் காரணிகள், 

சந்தை ஆரம்பித்த பின் நீங்கள் வர்த்தகம் செய்யப்போகும் பங்கின் நகர்வுகளை கவனித்து சரியான BREAK OUT மற்றும் BREAK DOWN கிடைத்த பிறகு அந்த பங்கில் உங்களின் ENTRY இருக்க வேண்டும், அதே நேரம் நீங்கள் கவனிக்க வேண்டிய மேலும் சில விஷயங்கள் இருக்கின்றது, அதாவது அந்த பங்கை என்ன காரணத்திற்காக வாங்குகிறோம் அதன் TARGET என்ன இதன் S/L என்ன அந்த பங்கில் நேற்று நடந்த VOLUME ஐ விட அதிகமாக இன்று நடக்க வாய்ப்பு உள்ளதா, BREAK OUT பெற்ற பின் VOLUME BUILD UP ஆகின்றதா, கொஞ்சம் கொஞ்சம் இறங்கினாலும் இறக்கத்தில் நல்ல VOLUME BUILD UP ஆகிறதா எனபன போன்ற விசயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும், 

நீங்கள் BUY POSITION எடுக்கலாம் என்று மேற்கண்ட காரணங்களால் முடிவு செய்தால் அதற்க்கு SUPPORT ஆக கீழ் கண்ட விஷயங்கள் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் அதாவது NIFTY தொடர்ந்து உயருமா அதற்கான ஏற்பாடுகள் NIFTY இன் CHART இல் உள்ளதா என்றும், அடுத்து முக்கியமான INDEX HEAVY WEIGHT SCRIPT ஆனா RELIANCE IND இன் நிலைமை எவ்வாறு உள்ளது என்றும் பார்த்துக்கொள்ளுங்கள், RIL உதவாவிட்டாலும் கீழ் இறங்கும் நிலைமை RIL CHART இல் உருவாக்கி இருந்தால் RIL தெளிவான நிலைக்கு வந்த பின் உங்கள் POSITION ஐ எடுக்கலாம், NIFTY யும் RIL லும் SUPPORT செய்தால் தாராளமாக நாம் POSITION எடுக்கலாம்.

மேலும் நீங்கள் SHORT POSITION எடுக்க வேண்டும் என்றால் நான் கூறிய நிலைமைக்கு எதிர்பதமாக இருக்க வேண்டும், வெறும் RIL ஐ மட்டும் பார்க்காமல் (ONGC, NTPC, INFOSYS, BHEL) போன்ற பங்குகளின் நிலைமைகளையும் ஒரு பார்வை பார்த்தால் நல்லது, அனைத்து பங்குகளும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றில்லை ஒன்று இரண்டு இருந்தால் போதும் முக்கியம் RIL SUPPORT ஆக இருக்க வேண்டும், இதற்க்கு மேல் சொல்வது குழப்பத்தை தான் உருவாக்கும்


OPEN INTEREST மற்றும் OPTION TRADING பற்றி சில கேள்விகள் சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள் அவைகளை அடுத்த வாரம் காண்போம்