Friday

வெள்ளிக்கிழமை NIFTY இன் நிலை

15-05-09 

உலக சந்தைகள் அனைத்தும் உயரங்களில் இருப்பது, நமது சந்தைக்கு சாதகமான விஷயம் தான், மேலும் SINGAPORE NIFTY யும் அதே நிலையில் உயர்ந்து கொண்டிருப்பது நமக்கு இன்னும் சாதகமான விஷயம். ஆகவே நமது சந்தைகளில் உலக சந்தைகளின் போக்குகள் பிரதிபலிக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 3625 என்ற புள்ளிக்கு மேல் நமது சந்தையில் ஒரு உயர்வு இருக்கும், பயன் படுத்திக்கொள்ளுங்கள்.கீழே NIFTY ஐ பற்றி விரிவாக அதன் EOD CHART இன் நிலை மற்றும் INTRADAY CHART இன் நிலைகளை விளக்கி யுள்ளேன் படியுங்கள் 

நமது நிபிட்டி ஐ பொறுத்தவரை 3720 மற்றும் 3530 என்ற இரண்டு புள்ளிகளுக்கு இடையே மிகத்தெளிவாக நகர்ந்து வருகிறது இந்த ஆட்டமெல்லாம் இன்றுடன் முடிந்து விடும் என்றே தோன்றுகிறது வரும் திங்ககள் அன்று சந்தைகளில் தெளிவான ஒரு பாதை தேர்ந்தெடுக்கப்படும் 

என்னை பொறுத்தவரை (TECHNICAL ஐ பொறுத்தவரையும் தான்) சந்தைகளில் உயர்வுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதுகிறேன், ஆகவே RISK எடுப்பவர்கள் 3530 என்ற புள்ளிகளுக்கு அருகில் NIFTY வரும்போது 3600, 3700 போன்ற CALL OPTION அல்லது NEAR NIFTY FUTURE CONTRACT போன்ற POSITION களை எடுக்கலாம் (வரும் திங்கள் அன்று GAP UP, OR GAP DOWN என்ற வகையில் தான் சந்தைகள் ஆரம்பிக்கும் என்று நான் நினைக்கின்றேன், ஆகவே பயன்படுத்திக்கொள்ளுங்கள்), இதற்கான S/L 3520 கண்டிப்பாக S/L ஐ கடைபிடியுங்கள், இந்த படத்தை பாருங்கள் NIFTY MOMENTUM TREND LINE மற்றும் CHANNEL நிலைகளில் நின்று வர்த்தகம் செய்வதை நாம் கவனிக்கலாம் 

NIFTY EOD CHART


NIFTY இன் இன்றைய நிலைகளை பார்ப்போம் TECHNICAL ஆக NIFTY இல ஒரு HEAD & SHOULDER அமைப்பு உருவாகியுள்ளது மறுபடியும் 3710 என்ற புள்ளிகளுக்கு மேல் செல்லும் போது இதன் உடனடி இலக்கு 3775 என்ற புள்ளியில் இருக்கும் என்று நேற்று பார்த்தோம் இல்லையா அதற்கான வரைபடம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள் மேலும் நேற்று நாம் எதிர்பார்த்ததுபோல் 3534 என்ற புள்ளிகளில் SUPPORT எடுத்து நிபிட்டி மேலே திரும்பி இருப்பது இந்த H&S PATTERN க்கு மேலும் வழு சேர்ப்பதாக இருக்கிறது, 

ஆகவே குழப்பம் இல்லாமல் LONG POSITION எடுக்கலாம் ஆனால் கண்டிப்பாக அதற்கான S/L ஐ கடைபிடிக்க வேண்டும், ஏனென்றால் இது கத்தியின் மேல் நடப்பது போல், கீழே உள்ள படத்தை பாருங்கள் NIFTY இன் H&S PATTERN மற்றும் SUPPORT TREND LINE மேலே TRIPLE TOP கீழே TRIPLE BOTTOM போன்ற அமைப்புகள் அமைந்து வருவது தெரியும், ஆகவே இதற்க்கு மேல் எப்படி TECHNICAL CHART தன்னை வெளிப்படுத்தும் நான் LONG SIDE, அதே நேரம் 3520 மிக மிக முக்கியமான S/L ஆகவே 3530 க்கு அருகில் வந்தால் வாங்கலாம் 

NIFTY INTRADAY CHART

சரி இன்று என்ன நடக்கும் என்று பார்ப்போம் NIFTY 3620 TO 3625 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தால் தொடர்ந்து 3660, 3680, 3710 என்று உயர வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் கீழே 3585 TO 3580 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் 3550, 3535 என்று கீழே வரும், அதே நேரம் 3530 என்ற புள்ளி மிக முக்கியமான SUPPORT POINT

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3625 TARGET 3640, 3658 TO 3660, 3677 RO 3683, 3705 TO 3710, 3718, 3733, 3775 

NIFTY SPOT BELOW 3585 TO 3580 TAR 3555 TO 3550, 3540, 3534 TO 530, 3478, 3440 TO 430 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

நேற்று கொடுக்கப்பட்ட GNFC 75 என்ற புள்ளியை கடந்து இருப்பது நல்லதாகவே தெரிகிறது 73.5 என்ற புள்ளியை கடந்தால் 72 TO 71.5 வரைக்கும் கீழே வரலாம் அப்படி வந்தால் 71 என்ற புள்ளியை S/L ஆக வைத்து வாங்கலாம் இலக்காக 81, 85, 90 இருக்கும் 

அதே போல் நேற்று கொடுக்கப்பட்ட GMR INFRA வும் 107 TO 105 என்ற புள்ளிகளில் இருந்து மீண்டு வந்து இருப்பது நல்லதே ஆகவே அதையும் கவநியுங்கள் 

மேலும் ABAN OFF இன் இலக்கு 535 TO 540 ஆகவே 485 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு கீழ் வரும்போது வாங்கலாம் (506, 500, 496, 487 இந்த புள்ளிகளில் எல்லாம் நல்ல SUPPORT இருக்கு இந்த புள்ளிகள் வரும்போது வாங்கலாம் ) 

CENTURY TEXT இல் TRIPLE TOP என்ற தடைகள் 274 என்ற புள்ளியில் உள்ளது, ஆகவே இந்த புள்ளியை நல்ல VOLUME உடன் மேலே கடந்தால் வாங்கலாம் இதன் இலக்கு 290, 300, 310 என்ற புள்ளிகளில் இருக்கும், ஒருவேளை கீழே வந்தால் 264, 259, 255, என்ற புள்ளிகளில் நல்ல SUPPORT எடுக்கலாம், ஆகவே கீழே வந்தால் இந்த புள்ளிகளில் வாங்குங்கள், இதன் S/L 254