எனது மினஞ்சல் முகவரிக்கு அநேக நண்பர்கள் தின வர்த்தக பரிந்துரை வேண்டி கேட்டு வருகிறார்கள் அவர்களுக்காகவும் மேலும் இந்த சேவை வேண்டியவர்களுக்காகவும் DAY TRADING AND SHORT TERM CALLS SERVICE ஐ YAHOO MESSENGER மற்றும் SMS வழியாக CASH, F&O (NIFTY, SCRIPTS), COMMODITY போன்ற SEGMENT களுக்கு வழங்க உள்ளோம்,
விருப்பம் உள்ளவர்கள் எனது மின் அஞ்சலுக்கு தங்களது விவரங்களையும் (பெயர், முகவரி, தங்களது CELL நம்பர்) தங்களுக்கு விருப்பமான சேவைகளையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சேவைகளின் மேல் விவரங்கள் தங்களது மின் அஞ்சல் கிடைத்தவுடன் அனுப்பி வைக்கப்படும். முதலில் வரும் 10 நபர்களுக்கு சலுகைகளாக ஒரே திட்டத்தில் அனைத்து சேவைகளும் வழங்கப்படும். (IF U SELECT PLAN A OR PLAN B, ALL A, B, C PLAN WILL COME AS OPENING OFFER)
இனி எல்லாம் சுகமாக நடக்கட்டும் இறைவன் துணையுடன் வெற்றிப்பாதையில் நடப்போம்,
நன்றி சரவணபாலாஜி
இந்த வாரத்தின் கேள்வி பதில்
1வணக்கம் சரவணன் சார்
சென்ற வாரம் என்னுடைய கேள்விக்கு பதில் அளித்திருந்தீர்கள் நன்றி சார்
இந்த வாரம் option market பற்றி சற்று விரிவாக கூர முடயுமா சார். நன்றி ஈஸ்வரன் .ஜெ (உங்களின் போன வார கேள்வி
2வணக்கம்சார். இந்த வார கேள்வி
ஒரு பங்கை வாங்கும் பொழுது இந்த இடத்தில்தான் வாங்க வேண்டும் என தீர்மானிக்க சில யோசனைகளை கூறவும் ஏதாவது நல்ல indicators பற்றி கூறவும் தினவர்த்தகதிர்க்கு பயன்படுமாறு இருந்தால் மிகவும் நல்லது சார்
(ஒரு பங்கை வாங்க ஒருகாரணம் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்)
(மன்னிக்கவும் போனவாரத்து கேள்விக்கான பதிலையும் (option market)
தயவு செய்து கூறவும் ) நன்றி. ஈஸ்வரன்.
உங்களுக்கு TECHNICAL KNOWLEDGE சிறிதளவு இருந்தால் கூட போதும் திரு ஈஸ்வரன் ஒரு பங்கை எந்த இடத்தில் வாங்க வேண்டும் என்று முடிவு செய்யலாம், வேறு மாதிரியான விசயங்களை எல்லாம் வைத்துக்கொண்டு (MOVING AVERAGE CROSS OVER, OVER SOLD, INDICATORS சாதகமான நிலையில் இருப்பது இன்னும் பல விஷயங்கள்) வாங்குவது உதவியாக இருந்தாலும் TECHNICAL KNOWLEDGE சிறிதளவாவது இருப்பது முக்கியம்,
மேற்கண்ட விசயங்களில் எல்லாம் இந்த பங்கு ஏன் ஏறுகிறது (TECHNICALLY) ஏன் இறங்குகிறது இன்னும் எவளவு தூரம் ஏறும்/இறங்கும் (அதாவது அதன் TARGET) என்பதை எல்லாம் அறிந்து கொள்ளமுடியாது, ஆனால் உங்களுக்கு TECHNICAL தெரிந்து இருந்தால் இந்த உயர்வுக்கு அல்லது வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்ளலாம் அதாவது என்னவிதமான PATTERN BREAK OUT அல்லது BREAK DOWN ஆகியுள்ளது இதன் இலக்கு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்,
ஆகவே நீங்க TECHNICAL தெரிந்தவராக இருந்தால் முதலில் கவனிக்க வேண்டியது என்ன மாதிரியான PATTERN ஐ அந்த பங்கு கடந்துள்ளது என்பதை கவனித்து அதன் இலக்கு என்ன என்பதையும் கவனித்து குறித்துக்கொள்ளுங்கள் பிறகு இந்த உயர்வுக்கான S/L ஆக எந்த புள்ளியை எடுத்துக்கொள்ளலாம் என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள், பிறகு நான் மேலே சொன்ன INDICATORS ஐ பயன்படுத்தி எந்த இடத்தில் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள், அதாவது RSI ஐ பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட பங்கின் OVER SOLD/OVER BOUGHT சூழ்நிலையை கண்டு பிடிக்கலாம், MACD ஐ பயன்படுத்தி அதன் தொடர்ச்சியான உயர்வையும் வீழ்ச்சியையும் தெரிந்து கொள்ளலாம், இது போன்ற INDICATOR களை பயன்படுத்துங்கள்,
INTRA DAY CHART ஐ பொறுத்தவரை ஏகப்பட்ட INDICATOR கல் உள்ளன பொதுவாக நான் அதிகமான அளவில் INDICATOR களை 100 % நம்பி வர்த்தகம் செய்வது இல்லை இருந்தாலும் அவ்வப்பொழுது அவைகளை பார்க்காமலும் இருப்பதில்லை, கீழே உள்ள INDICATOR களை கவனிக்கலாம் (STOCHASTIC OSCILLATOR, RSI, MACD, BOLLINGER BANDS, TRIX, VOLUME, PARABOLIC SAR, DIRECTNL MOVEMENT D+ AND D-),
நீங்கள் OPTION MARKET ஐ பற்றி முழு விவரம் கேட்டுள்ளீர்கள் முழு விளக்கத்துடன் OPTION பற்றி இங்கு சொல்வது சாத்தியம் இல்லை மேலும் உங்களுக்கும் பொறுமையாக படிப்பது கஷ்டமாக இருக்கும் ஆகவே நான் கீழே ஒரு LINK கொடுத்துள்ளேன் அதை CLICK செய்து படியுங்கள் F&O பற்றி முழு விளக்கங்கள் உள்ளது இன்னும் நிறைய விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாகவும் இருக்கும், ஆகவே உங்கள் தேடுதல் வேட்டையை இங்கு ஆரம்பியுங்கள்
FOR DETAIL ABOUT WHAT IS F&O CLICK THIS LINK
3 Dear saravana balaji,
Thank you for your response for my queries. "what is technique i have to follow for swing trading"
பொதுவாக அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு சந்தை தொடர்ந்து உயரம் என்று இருந்தால் நீங்கள் SWING TRADING செய்யலாம், அதற்க்கு BREAK OUT மற்றும் BREAK DOWN என்ற வகையில் EOD OR INTRADAY CHART இல் ஏதும் அமைப்புகள் உள்ளதா என்று பாருங்கள் (அது சின்ன சின்ன PATTERN BREAK OUT/DOWN ஆக இருந்தாலும் சரிதான்) முக்கியமான விஷயம் அடுத்த நாள் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகள் CHART இல் உள்ளதா என்பதினை கவனிப்பது மட்டும் தான்,
உதாரணமாக ஒரு CUP FORMATION அமைந்து இன்னும் 50 புள்ளிகள் உயரும் என்று BREAK OUT பெற்றுள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள் தாராளாமாக நீங்கள் அடுத்த நாள் உங்கள் POSITION ஐ தொடரலாம், ஆனால் இதற்கான S/L ஐ கண்டிப்பாக பயன்படுத்துங்கள், CHART உடன் அதிக அனுபவமும் வேறு சில மிக்கியமான விசயங்களையும் நீங்கள் பயன்படுத்தினால் S/L இல்லாமலேயே உங்கள் வர்த்தகத்தை செய்யலாம்.
In above reply , in last two lines, you have mentioned along with exp in chart , if we follow few important points, we can do the trading even without stoploss. Can u pls explain those "few important points" as it will be very useful to me as well for trading community. to give more details about my trading background, i am doing online trading in indiabulls platform (provides best of charting tools),use the charts extensively (particularly last 4 months) from indiabulls & yahoo charts.mostly use candle stick formation for trading.
Note: Pls do not disclose my name in the blog
அண்ணா ஆஆஆஆஆ எல்லாத்தையும் கேக்காதீங்கன்னஆஆஆஆஆஆஆஆ
4 Hai sir
My name is Surenther.For the Previous 1 year i am watching Market and i have done some trading. First i have bought some shares like DLF,RELCAP,RNRL,JKlakshmi but i have bought all the shares @ 16000 level after that i am not able to invest.After market reaching 12000 i came again at this time i have done day trading i did not follow any strategy but based on the news i have earn some much of money.But after 3 months i have lost all of my capital nearly 50K.Now i planned to invest again but i am not interested in doing day trading,before knowing technical analysis
Brother i need to know which chart i have to follow for day trading and also for short term investment?
Is there any book for technical analysis tamil or english?
Is registering any advisory service for intraday is good? if yes which is better? is it possible for u to start this kind of advisory service?
Waiting for your reply.. Thanks S.Surenther
Mr சுரேந்தர் எந்த CHART என்றால் எனக்கு புரியவில்லை ஒருவேளை EOD OR INTRA DAY CHART பற்றி கேட்கின்றீர்களா அப்படி என்றால் உங்களுக்கான பதில் நீங்கள் தினமும் சிறிய சிறிய லாபத்துக்காக வர்த்தகம் செய்பவராக இருந்தால் INTRA DAY CHART ஐ பயன்படுத்தலாம் நீங்கள் SWING TRADER ஆகவோ அல்லது SHORT TERM வகையில் வர்த்தகம் செய்பவராக இருந்தால் EOD CHART ஐயும் சேர்த்து தான் கவனிக்க வேண்டும்,
தமிழில் எனக்கு தெரிந்து TECHNICAL ANALYZING BOOK இல்லை ஒருவேளை யாருக்கும் தெரிந்தால் பின்னூட்டம் மூலம் சொல்லுங்கள் நண்பர்களே, அப்படியும் இல்லை என்றால் நான் எழுத தயார் நீங்கள் வெளியிடுகிறீர்களா Mr சுரேந்தர். BOOKS படித்து TECHNICAL கற்பதை விட CLASS ATTEND பண்ணுங்க Mr சுரேந்தர் பயனுள்ளதாக இருக்கும், இங்கு தான் நிறைய நண்பர்கள் கற்று தருகிறார்களே! ஆங்கிலத்தில் எண்ணற்ற புத்தகங்கள் உள்ளன ஆனால் முதலில் CLASS ATTEND பண்ணுங்க USE FULL ஆ இருக்கும் .
ADVISORY SERVICE ஆரம்பிச்சாச்சு நீங்கள் இன்னும் மின் அஞ்சல் அனுப்ப வில்லையா!
5 Dear Mr.Saravanabalaji,
Good day.
I am Ganesan from chennai. I have been reading your blog regularly, and finding it very useful for understanding the market. I would like to know if you have services for trading ideas. I am more interested in Option trading (or nifty futures). I would be thankful to you if you reply to my mail. If you have service, kindly send me the details or inform me over phone whenever you are free.
Thank you. Best regards. Ganesan
ADVISORY SERVICE ஆரம்பித்தாகிவிட்டது நண்பரே எனக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள் விவரங்கள் அனுப்புகிறேன்
6skumar4777's message in tamil – செந்தூர் வேலன்
online trading செய்ய எந்த company platform சிறந்தது . Technique chart பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறான் . அதன் பயன் பற்றி சொல்லவும். நன்றி.
எந்த COMPANY PLATFORM சிறந்தது என்று சொல்வதைவிட என்னென்ன விஷயங்கள் இருந்தால் நல்லதாக இருக்கும் என்று சொல்கிறேன் வேலன் இது போன்ற விசயங்கள் இருக்கிறதா என்று பார்த்து சேர்ந்து கொள்ளுங்கள்,
முதலில் ODIN MARKET WATCH அல்லது அதற்க்கு இணையான TERMINAL தருகிறார்களா என்று பாருங்கள், அதாவது நீங்கள் ஏதாவது ஒரு BROKER OFFICE சென்றீர்களேயானால் அங்கு அவர்கள் பயன்படுத்தும் MARKET WATCH TERMINAL எப்படி உள்ளதோ அதேபோல் உங்களுக்கும் ONLINE TERMINAL தருவார்களா என்று கேட்டுக்கொள்ளுங்கள் (சில COMPANY களில் டப்பா டப்பாவா ஒரு PAGE OPEN ஆகும் அதில் நீங்கள் வர்த்தகம் செய்யவேண்டு அதுபோல் இருந்தால் அது வேலைக்கு ஆகாது)
அடுத்து BACK OFFICE S/W ஐ பற்றி விளக்கம் கற்று தருவார்களா என்று கேட்டுக்கொள்ளுங்கள், A/C OPEN செய்வதற்காக எல்லாத்துக்கும் ஆமா சாமி போடுவாங்க அங்கவுள்ள CLIENT ஐ தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள், ஏன் என்றால் BACKOFFICE மூலமாகத்தான் உங்களுக்கான CONTRACT DETAILS, STATEMENT OF
ACCOUNT DETAILS, LEDGER BALANCE, TRADE DETAILS, FUND PAY IN, PAY OUT, SHARE SHORTAGE, SCRIPT PAY IN AND PAY OUT, AUCTION DETAILS, இது மாதிரி எல்லா விசயமும் பார்க்க வேண்டி வரும் ஆகவே நீங்கள் அணுகும் BROKER அவற்றை எல்லாம் உங்களுக்கு கற்று தருகிறாரா என்று பார்த்துக்கொள்ளுங்கள்
நீங்கள் FUND PAY OUT செய்தவுடன் அடுத்த நாளுக்குள் உங்கள் BANK A/C க்கு பணம் வந்து விடுமா என்று அங்குள்ள CLIENT யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இங்குள்ள நபர்களால் முடியவில்லை என்றால் அந்த COMPANY உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேடுக்கொள்ளலாமா என்பதினையும் உறுதி செய்துகொள்ளுங்கள், உதாரணமாக உங்கள் MARKET WATCH திடீரென்று OPEN ஆகவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள் இங்குள்ளவர்களை தொடர்பு கொண்டு அதை சரி செய்யமுடியவில்லை என்றால் அந்த COMPANY யின் IT DEPARTMENT நபர்களை உங்களால் எளிதாக தொடர்புகொள்ள முடியுமானால் உங்களுக்கு எளிதாக உங்கள் பிரச்சனை முடியும் இல்லை என்றால் நீங்கள் அவரை தொடர்புகொள்ள அவர் IT ஐ தொடர்புகொள்ள என்று இழுத்துக்கொண்டே இருக்கும், ஆகவே உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளதா என்று தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்,
CONTRACT NOTE EMAIL லில் வந்தாலும் உங்கள் முகவரிக்கு HOT COPY அனுப்புவார்களா என்று அறிந்து கொள்ளுங்கள், முக்கியமாக ONLINE TERMINAL லுக்கு ஏதும் பணம் வசூல் செய்யாமல் இருக்க வேண்டும் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள், மேலும் உங்களுக்கான BROKERAGE குறைவாக இருக்கும் படி அவர்களிடம் கேளுங்கள் இவளவையும் கேட்டு அவர்கள் உங்களிடம் எவளவு முதலீடு செய்வீர்கள் என்று கேட்டால் 5000, 10000 என்று சொல்லிவிடாதீர்கள் அவளவுதான் அதற்க்கு மேல் நடப்பவைகளுக்கு நான் பொறுப்பில்லை…
TECHNICAL ANALYSING என்பது TECHNICAL CHART மூலமாக ஒவ்வொரு பங்குகளின் போக்குகள் எப்படி இருக்கும், எந்த புள்ளியை கடந்தால் உயரும் அல்லது வீழ்ச்சி அடையும், பங்குகளின் இலக்குகள் S/L கள் என்ன என்பன போன்ற விவரங்களை CHART இல் உள்ள படங்களின் மூலம் அறிந்து கொள்ளும் ஒரு முறை, இதற்க்கென்று விதி முறைகள் உண்டு அந்த விதி முறைகளின் படிதான் நான் அறிந்த வரையில் அனைத்தும் நடந்து வருகிறது, ஆகவே அனைவரும் இந்த TECHNICAL விதி முறைகளை கற்றுக்கொண்டால் சந்தையில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இல்லாமல் சற்று தெளிவாக வர்த்தகம் செய்யலாம், அதே நேரம் THECHNICAL ஐ முழுவதும் கற்றுக்கொள்ளாமல் தெளிவாக தொடர்ந்து பயிற்ச்சி எடுக்காமல் மேம்போக்காக பயன்படுத்தினால் ஆபத்தையும் விரக்தியையும் தான் உண்டாக்கும் உங்களால் தெளிவாக DEDICATED ஆக TECHNICAL ஐ பயன்படுத்த முடியுமானால் கற்றுக்கொள்ளுங்கள்.
6 ஹலோ சார், உங்களது கேள்வி-பதில் விபரங்கள் நன்றாக உள்ளது.நன்றி. தயவு செய்து nifty அல்லது scrip-ல் option வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விவரித்து கூறுங்கள். அத்துடன் put/call ratio என்பதைப் பற்றியும்,அதை எங்கு பார்க்கலாம் என்பதையும் தயவு செய்து விளக்கி கூறுங்கள். விஜயன்
விஜயன் முதலில் நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு மிகத்தெளிவாக சொல்லிவிடுகிறேன் பொதுவாக F&O SEGMENT முழுக்க முழுக்க HEDGING என்ற பயன்பாட்டுக்காக தான் சந்தையிகளில் ஆரம்பிக்கப்பட்டது நமது சந்தை என்று இல்லை உலக சந்தைகள் அனைத்திற்கும் F&O என்ற ஒரு வர்த்தகம் அறிமுகமாக HEDGING தான் காரணம்,
இது முதலில் விவசாயிகளை மனதில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது அதாவது உதாரணமாக ஒரு விளைச்சல் ஆகும் பொருளுக்கான விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தது அதாவது கோதுமையின் விலை இன்று ஒரு விலை மறுபடியும் மூன்று மாதம் கழித்து வேறு ஒரு விலை என்று இருந்தது இது மாதிரியான ஏற்ற இறக்கங்களால் விவசாயிகளுக்கு லாபத்தில் நிச்சயமற்ற ஒரு போக்கு இருந்தது இதை சரி செய்வதற்காக விவசாயிகளிடம் அவர் ஒரு பொருளை விளைச்சலில் இருக்கும் போதே அந்த விளை பொருளுக்கான விலை இவளவுதான் என்று ஒரு வியாபாரியிடம் உறுதிப்பத்திரம் எழுதிக்கொள்வார்கள்,
இந்த உறுதியின் பேரில் இருவரும் நியாயமாக நடந்து கொள்வார்கள் அதாவது அந்த பொருள் விளைந்து வந்த பின் அதன் விலை சந்தையில் இவர்கள் உறுதி செய்துகொண்ட விலையை விட அதிகமாக இருந்தாலும் விவசாயி அவர் உறுதி எடுத்துக்கொண்ட விலைக்கே கொடுப்பார், அதேபோல் அந்த பொருளின் விலை சந்தையில் குறைந்து விட்டாலும் வியாபாரி அவர் சொன்ன விலைக்கே வாங்கிக்கொள்வார், இதற்க்கு பெயர் தான் FUTURE CONTRACT, இது முதலில் COMMODITY பொருளுக்காக மட்டுமே சிக்காக்கோ BOARD OF EXCHANGE என்ற அமைப்பின் மூலம் 1850 வாக்கில் உருவாக்கப்பட்டது என்று நினைக்கின்றேன்,
பிறகு பங்குசந்தைக்கு இது வந்ததின் காரணம் பங்கு சந்தைகளில் ஒரு நிச்சயமற்ற போக்குகள் இருந்ததனால் அதாவது உலக போர், இயற்க்கை சீற்றம் மேலும் பல வகையான காரணங்களால் சந்தைகளில் திடீர் திடீர் என்று வீழ்ச்சிகள் வந்தது நாமெல்லாம் 1 லட்சம் அல்லது 10 லட்சத்திற்கு முதலீடு செய்வோம் அதாவது 2000, 5000 அளவுள்ள பங்குகள் வைத்து இருப்போம் இது போன்ற வீழ்ச்சிகள் நன்றாக சென்று கொண்டிருக்கும் சந்தைகளில் திடீர் என்று வந்தால் நாம் என்ன செய்வது, நமது முதலீடு இதுவரை நமக்கு ஈட்டித்தந்த லாபத்தை நாம் பாதுகாக்க முடியாமலே போய் விடுமே, அதே நேரம் அந்த வீழ்ச்சியின் முடிவில் நாம் எங்கு இருந்து ஆரம்பித்தோமோ அங்கு வந்து விடுவோம் இல்லையா,
சிறிய முதலீட்டாலர்களான நமக்கே இப்படி என்றால் பெரிய அளவில் முதலீடு செய்தவர்களின் நிலை, MUTUAL FUND, அந்த FUND இந்த FUND என்று மக்களிடம் இருந்து பணம் வாங்கி முதலீடு செய்பவர்களின் நிலை, அவர்களிடம் முதலீடு செய்து இருக்கும் மக்களின் நிலை, யோசித்து பாருங்கள் நாம் கூட 2000, 5000 பங்குகளை சந்தை இறங்குவதாக தெரிந்தால் குறைந்த நட்டத்தில் விற்று விட்டு வந்து விடலாம், ஆனால் பெரிய அளவில் முதலீடு செய்தவர்கள் என்ன செய்வது, ஒரே பங்கில் லச்சக்கணக்கான பங்குகளை வைத்து இருப்பார்களே அவர்கள் நினைத்தால் குறைந்த நட்டத்தில் விற்று விடலாம் என்று விற்க முடியுமா அப்படி அவர்களும் விற்றால் சந்தைகளில் என்ன நடக்கும், யோசித்து பாருங்கள் !
ஆகவே தான் சந்தைகளில் இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் தங்களது லாபத்தினை சந்தை கீழே இறங்கினாலும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது தான் இந்த F&O எனப்படும் வர்தகமுறை, ஆனால் இதில் எல்லாம் நாம் தினவர்த்தகம் செய்கிறோம் காரணம் அதில் நிறைய லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், உண்மைதான் ஆனால் பெரிய முதலீட்டாளர்கள் F&O வில் 70% இன்றுவரை HEDGING க்காக மட்டுமே பயன் படுத்துகிறார்கள், ஆதலால் இந்த வர்த்தகங்களில் அதிகளவான ஆட்டங்கள் இருக்கின்றது அதனால் நமக்கு ஆசை வருகிறது என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன், ஆகவே இந்த வர்த்தகத்தை நாம் பயன் படுத்தும்போது கவனமாக பயன் படுத்த வேண்டும், இந்த வர்த்தகத்தில் நாம் நுழையும் போது கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என்ற நிலையினை உறுதி செய்து கொண்டு பின் வர்த்தகத்தை ஆரம்பிக்க வேண்டும்,
எவ்வாறு உறுதி செய்து கொள்வது அதற்க்கு தற்பொழுது நமக்கு இருக்கும் ஒரே வழி TECHNICALS தான், SO TECHNICAL ஆக ஒரு பங்கில் அல்லது INDEX இல் BREAK OUT / BREAK DOWN கிடைத்தால் நாம் நமது நிலைகளை எடுக்கலாம். (அட என்னங்க எப்ப பாத்தாலும் BREAK OUT, BREAK DOWN ன்னு உதார்விட்டுக்கிட்டே இருக்கீங்க ன்னு கேக்காதீங்க அதை கவனித்தால் தான் நாம் நிலையான லாபமான வர்த்தகம் செய்ய முடியும், ஒரு BUS எங்க போகுதுன்னே தெரியாம உங்களால பயணம் செய்ய முடியுமா, சும்மா BUS ல ஏறினா போதும் என்று நினைத்தால் சரி, இலக்கை அடைய வேண்டும் என்றால் கவனித்து தானே ஏற வேண்டும்),
ஆகவே ஒரு பங்கின் விலையில் 100 க்கு மேல் கடந்தால் அதன் இலக்கு 120 வரைக்கும் செல்லலாம் என்று ஒரு BREAK OUT கிடைத்தது என்றால் நீங்கள் OUT OF MONEY CALL OPTION வாங்கலாம் அதாவது 105 என்ற STRICK PRICE இல் என்ன PREMIUM RATE உள்ளதோ அந்த RATE இல் நீங்கள் ஒரு LOT வாங்கலாம், ஏனெனில் இதன் இலக்கு 120, ஆனால் நாம் வாங்கிய STRICK PRICE 105, அதாவது அந்த பங்கு 102 ரூபாயில் வர்த்தகம் செய்து கொண்டு இருக்கும் போது நீங்கள் 105 போகும் என்ற இலக்காக வைத்து அந்த 105 ரூபாய்க்கு என்ன PREMIUM RATE உள்ளதோ அதாவது 105 STRICK PRICE இன் விலை 15 என்று வர்த்தகம் ஆகிறதென்றால் நீங்கள் இந்த விலையில் 1 LOT வாங்கி இருப்பீர்கள், SO நீங்க எதிர்பார்த்து போல் அந்த பங்கு 105 கடந்து 120 ஐ நோக்கி நகருகிறது என்று வைத்துக்கொண்டால் உங்களின் STRICK PRICE க்கு உடைய PREMIUM RATE டும் உயரும் அதாவது நீங்கள் வாங்கிய 15 ரூபாய்க்கான CONTRACT 20, 25, 30 இப்படி உயர்ந்து கொண்டே இருக்கும், இதற்கான S/L ஆக CASH MARKET இல் அந்த பங்கு BREAK OUT ஆகும் பொது என்ன S/L புள்ளியாக நாம் எடுத்துக்கொண்டோமோ அந்த புள்ளியை CASH MARKET இல் அந்த பங்கு கீழே கடந்து முடிவடைந்தால் நீங்கள் உங்கள் OPTION POSITION லிருந்து வெளியே வந்து விடலாம்,
நான் கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாமல் ஏதேதோ சொல்றீங்களேன்னு கேக்குற மாதிரி தெரியுது, அதுக்கான பதில் OPTION ஐ பொறுத்த வரை நான் CASH MARKET இல் ஒரு பங்கு BREAK OUT ஆனால் தான் வாங்குவேன், ஏனெனில் CASH MARKET தான் ORIGINAL, MOTHER எல்லாம், அந்த பங்கின் CASH MARKET க்கான CHART இல் BREAK OUT கிடைத்தால் நான் யார் தடுத்தாலும் விடேன் SORRY வாங்காமல் விடேன், (இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருந்தால் என்னை வருத்தேடுக்கலாம் அல்லது கிழித்தும் எடுக்கலாம் , ஏனெனில் இதன் படி நான் மேற்கொண்ட வர்த்தகத்தில் நிம்மதியான லாபம் அடைந்து இருக்கின்றேன்), ஆகவே நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் எனது அனுபவத்தை தான் சொல்ல முடியும், சொல்லி விட்டேன்,
அடுத்து PUT/CALL RATIO வைப்பற்றி கேட்டு உள்ளீர்கள்
PUT/CALL RATIO என்பது வேறொன்றும் இல்லை ஒரு குறிப்பிட்ட STRICK PRICE இல் PUT OPTION மற்றும் CALL OPTION இல் நடக்கும் VOLUME ஐ வைத்து கணக்கிடப்படும் ஒரு முறை, அதாவது இன்று அந்த PUT OPTION இல் நடந்த TOTAL VOLUME அதாவது TOTAL NO OF TRADED CONTRACT IN PUT OPTION DIVIDED BY TOTAL NO OF TRADED CONTRACT IN CALL OPTION (VOL OF PUT OPTION / VOL OF CALL OPTION) இந்த முறையில் கணக்கிட்டு வரும் RATIO வை வைத்து நாம் சந்தையின் உயர்வு தாழ்வுகளை முடிவு செய்யலாம்,
அதாவது PUT இல் அதிக VOLUME நடக்கும் போது இந்த RATIO 1 க்கு மேல் இருக்கும் அப்படி வரும்போது சந்தை தொடர்ந்து இறங்கும் என்று உறுதி செய்து கொள்ளலாம், அதே நேரம் PUT OPTION அதிகமாக வாங்கப்பட்டு இந்த RATIO 1.30, 1.40 இப்படி எல்லாம் சென்றால் சந்தை தொடர்ந்து கீழ் இறங்கும் என்று இல்லாமல் TREND REVERSAL ஆவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம், இதை பொதுவாக எதிர்மறையான வர்த்தகம் செய்வதற்கு இந்த RATIO வை பயன் படுத்துவார்கள், அதாவது அதிகளவு PUT OPTION வாங்கப்பட்டு இந்த RATIO அதிகமாக உயர்ந்தால் இந்த RATIO வின் படி சந்தை தொடர்ந்து இறங்கும், ஆனால் OVER SOLD என்ற நிலை வந்து சந்தை மீளும் என்று வாங்க ஆரம்பிப்பார்கள், ஆகவே இந்த RATIO உயர உயர உங்கள் SHORT POSITION ஐ முடித்துக்கொள்ள வேண்டும்,
அதே போல் அதிகளவு CALL OPTION வாங்கப்பட்டால் இந்த RATIO கீழ் இறங்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் சந்தை உயரும் அதே நேரம் 0.60 என்ற நிலைக்கு கீழ் இந்த RATIO வந்தால் சந்தையில் எதிர் மறையான போக்குகள் இருக்கும், மேலும் இந்த RATIO 0.80 TO 1.00 என்ற புள்ளிகளில் இருக்கும் போது சந்தை NEUTRAL ஆக இருக்கும் அதாவது தற்பொழுது என்ன TREND அந்த பங்கில் நடந்து வருகிறதோ அது அமைதியாக தொடர்ந்து நடக்கும் என்று அர்த்தம்,
நமது பங்குகளுக்கான இந்த PUT/CALL RATIO வை அறிய கீழ்க்கண்ட LINK ஐ CLICK செய்யுங்கள் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும், அல்லது COPY செய்து உங்கள் BROWSER இல் பாருங்கள்
http://contentlinks.asiancerc.com/Bestbull/derivatives/derivativeframe.asp?FileType=K
7Dear Sir ,
First i would like to thanks for your valuable effort, sir in which website we have see the U.S.Future Market trading
DOW JONES FUTURE MARKET க்காக நான் பயன்படுத்தும் LINK வேறு யாருக்கும் இதை விட நல்ல LINK கிடைத்தால் பின்னோட்டத்தில் தெரிவியுங்கள்
WITH CHART
Thank you
P.Vinoth Kumar
மீதமுள்ள கேள்விகளுக்கு அடுத்த பதிவில் பதில் தருகிறேன்