14-05-09 – THURSDAY
அமெரிக்க சந்தைகள் வீழ்ந்ததை அடுத்து அனைத்து உலக சந்தைகளும் வீழ்ந்து கொண்டுள்ளது, தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க FUTURE MARKET சற்று இறக்கத்தில் ஆடிக்கொண்டுள்ளது, SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 40 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்து மேலும் 40 புள்ளிகள் இறங்கி 80 புள்ளிகள் இறக்கம் என்ற நிலையில் வர்த்தகம் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து நமது சந்தைகளிலும் GAP DOWN OPEN இருக்கும், மேலும் 3550 TO 3530 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரிகிறது, 3530 க்கு கீழ் 3500 TO 3470, 3460 என்ற புள்ளிகளில் SUPPORT இருக்கும் அதே நேரம் NIFTY நேற்று 3770 என்ற புள்ளிகளை அடைவதற்கு சில ஏற்பாடுகளை செய்துள்ளது, ஒரு வேலை 3530 என்ற புள்ளியை கீழே கடந்தால் அந்த ஏற்பாடுகள் முற்றிலும் களைந்து விடும் ஆகவே 3530 என்ற புள்ளி முக்கியமானதாக இருக்கும் ….
இந்த நேரத்தில் நேற்றய சந்தையை பற்றி வழ வழ வென கதையாக சொல்ல வேண்டியது அவசியமாகிறது, கதை தான் இருந்தாலும் பயனுள்ளதாக இருக்கும்...
நேற்றைய சந்தை தின வர்த்தகர்களுக்கு VOLATILE பற்றி பாடமே எடுத்தது, மிகச்சரியாக TECHNICAL ஐ பயன்படுத்துபவர்கள் இந்த ஆட்டங்களில் இருந்து நட்டம் இல்லாமலோ அல்லது லாபத்துடன் வர்த்தகம் செய்து இருக்கலாம், நேற்று சந்தையில் நடந்த ஒரு விசயத்தை சொல்லுவது மிக சரியாக இருக்கும் NIFTY 3610 என்ற புள்ளியை தொட்டு திரும்பி 3710 வரைக்கும் சென்றது அப்படி செல்லும்போது சந்தையின் நகர்வுகளில் பங்கெடுத்தது ஒரு சில பங்குகளே அதாவது BHARATI AIRTEL, L&T, BHEL, மற்றபடி RIL, ONGC போன்ற முக்கியமான பங்குகள் அதில் பங்குகொள்ளவில்லை பதிலாக SHORT BUILD செய்து கொண்டிருந்தார்கள், மேலும் MIDCAP பங்குகள் சுத்தமாக பங்குகொள்ளவில்லை, இந்த RALLY இல் சந்தேகம் ஏற்ப்பட்டு நாங்கள் வெளியில் வந்துவிட்டோம், அடுத்த 10 TO 15 நிமிடங்களில் சந்தை விறு விறுவென அன்றைய கடை நிலை புள்ளிக்கு வந்தது.
ஆகவே தின வர்த்தகர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு இதைப்பற்றி ஒரு நண்பர் எனது மின் அஞ்சலுக்கு கேள்வி அனுப்பியுள்ளார் ஆகவே தின வர்த்தகர்கள் வர்த்தகம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த வார கேள்வி பதில் பதிவில் விரிவாக பார்ப்போம்.
நாம் பதிவில் எதிபார்த்ததுபோல் நேற்றைய தினம் தின வர்த்தகர்களுக்கு மிகப்பெரிய சாவாலாகவே இநருந்து இருக்கும், காரணமாக நமது தேர்தல் முடிவுகளை தான் சொல்லவேண்டும், சந்தைக்கு ஒரு குணம் உண்டு அதாவது INVISIBLE ஆக இருக்கும் எந்த ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் மிகவும் ஆர்வமாக இருக்கும், அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பார்கள் அப்படியும் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் சட்ட விரோதமாக சிலவிசயங்களை கமுக்கமாக செய்து தெரிந்து கொள்ள முற்படுவார்கள் அப்படியும் முடியவில்லை என்றால் ஒரு IF CLAUSE போட்டு இப்படிதான் இருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்வார்கள் (சில சில உத்தேசமான செய்திகளின் அடிப்படையில்).
தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று IF CLAUSE முடிவுகளை சந்தை எடுத்துக்கொண்டிருக்கிறது இதனால் தான் நேற்று ஆட்டங்கள் இருக்கும் கவனமாக இருங்கள் என்று சொல்லி இருந்தேன், இது கண்டிப்பாக தொடரும் ஆகவே RESULT வந்து விட்டாலும் சந்தையில் ஒரு அமைதியான போக்குகள் திசைகள் கிடைக்கும் வரை தின வர்த்தகர்கள் வர்த்தகமே செய்யாமல் இருங்கள் அல்லது உங்கள் QUANTITY களையாவது குறைத்துக்கொள்ளுங்கள் சரி சரி அதிக கதை பேசி விட்டோம் இனி இன்றைய விசயத்திற்கு வருவோம்
நமது NIFTY ஐ பொறுத்த வரை இன்று 3608 TO 3600 என்ற புள்ளி மிக்கியமானதாக இருக்கும் இந்த புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 3580, 3560, 3545, 3533 TO 3530, 3520, 3500, 3475 TO 3460 இந்த புள்ளிகள் வரை நகரும் அதே போல் 3647 என்ற புள்ளியை கடந்து SUSTAIN ஆனால் 3660, 3677, 3690, 3711, 3720, 3733 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் 3740 என்ற புள்ளிகளுக்கு மேல் கண்டிப்பாக உயர்வுகள் தொடரும், நேற்று NIFTY இல் ஒரு INVERTED HEAD & SHOULDER PATTERN BREAK OUT செய்தது ஆனால் இந்த உயரங்களை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் கீழ் இறங்கி உள்ளது, அதே சமயம் 3530 என்ற புள்ளியை கீழே கடந்தால் இந்த H&S அமைப்பு உருக்குலைந்து போகும்,
ஆகவே இந்த நிலைகளுக்கு சென்று மீண்டும் 3720, என்ற புள்ளியை மேலே கடக்குமானால் இதன் உடனடி இலக்காக 3770 TO 3780 என்ற புள்ளிகள் இருக்கும், மேலும் தொடர்ந்து உயரவும் செய்யும், ஆகவே 3720 என்ற புள்ளி உயர்வுக்காகவும் 3500 TO 3460 என்ற புள்ளிகள் வீல்ச்சிக்காகவும் முக்கியமான புள்ளிகள் ஆகும், இந்த புள்ளிகளை நிபிட்டி என்ன செய்கிறது என்பதினை பொறுத்து உங்கள் வர்த்தகங்களை மேற்க்கொள்ளுங்கள், எந்த புள்ளிகளை கடந்தாலும் மேற்கொண்டு 150 TO 200 புள்ளிகள் நகரலாம், பொறுத்து இருந்து அவசரப்படாமல் உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் வர்த்தகம் செய்யுங்கள் அல்லது தொலைவில் இருந்து வேடிக்கை பாருங்கள்
NIFTY இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 3647 TARGET 3660, 3677, 3687 TO 3690, 3712 TO 3720, 3733, 3770 TO 3775, 3810, 3840 ++++
NIFTY SPOT BELOW 3608 TO 3600 TARGET 3580 TO 3570, 3560 TO 3555, 3540 TO 3530, 3520, 3500, 3475, 3460 TO 3450
கவனிக்க வேண்டிய பங்குகள்
HIGH RISK TRADERS CAN DO THIS, BUT RISKY SO BETTER TO AVOID
GNFC ABOVE 75 TARGET 85, 90, S/L 70
GMR INFRA ABOVE BUY 123 TARGET 139 TO 140, S/L 117
GMR INFRA BELOW 106 SELL TARGET 100, 90, S/L 111