Saturday

பங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள்

09-05-09 

நண்பர்களே எனது மின் அஞ்சலுக்கு தங்களின் பங்குச்சந்தை பற்றிய சந்தேகங்களை கேட்டு மின் அஞ்சல் அன்ப்பியவர்களின் கேள்விகளுக்கான எனது பதில்களின் முதல் தொகுப்பை இன்று பதிவிட்டுள்ளேன், இங்கு இவர்கள் கேட்ட கேள்விகள் மற்ற நண்பர்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கலாம் ஆகவே அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் இதை தொடர்ந்து அடுத்த கேள்வி பதில் பதிவில் மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பை வெளியிடுகிறேன். 

இதை படித்து உங்களின் கருத்தை கட்டாயம் சொல்லுங்கள் மேலும் இந்த பதிவை படித்தபின் கீழுள்ள “TAMILISH” மற்றும் “தமிழ்மனம்” ஆகிய ஒட்டுபட்டைகளிலும் ஓட்டளியுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும். 
(தமிழ் மனம் ஒட்டுப்பட்டை இந்த பதிவின் தலைப்பை CLICK செய்வதின் மூலம், பதிவின் தொடக்கத்தில் வரும்)


madhi arasu
வணக்கம்.

நான் ஆறாயிரம் சம்பாதிக்கிறேன். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன். ஆலோசனை கூறுங்கள். பங்குச்சந்தை பற்றி எதுவும் தெரியாது. தொடராக எழுதினால் நன்றாக இருக்கும்.


கண்டிப்பாக செய்யலாம், 

இன்னும் சில நாட்களில் பங்கு சந்தை என்றால் என்ன, பங்கு சந்தை ஏன் ஏறுகிறது ஏன் இறங்குகிறது அங்கு என்ன தான் நடக்கிறது, இது சாமனியவர்களும் சம்பாரிக்கும் இடமா, இல்லை என்ன என்ன தகுதி இருந்ததால் சம்பாரிக்கலாம், என்பன போன்ற விசயங்களை பங்குச்சந்தை பற்றிய அரிச்சுவடியே தெரியாதவர்களுக்காக தொடங்க உள்ளேன், மேலும் உங்களின் இந்த கேள்வி இன்னும் அந்த விசயங்களை விரைவாக செய்ய என்னை தூண்டுகிறது நன்றி விரைவாக செய்வோம், மேலும் அது போன்ற நபர்கள் இந்த தளத்திற்கு வரவேண்டும் அது முக்கியம், விரைவில் ஆரம்பிப்போம்.

********************************

baskaran p

Sir I am reading your web daily. It is fantastic. I lost atleast 2 lakhs in the market last year. I am an employee. I know moving averages candles etc... But i am unable to take a good position. I want short term calls in cash or option I can invest rs. 10000 now. Please help me. 
P.Baskaran 
Gingee.


"I know moving averages candles etc" 

கண்டிப்பாக MOVING AVERAGES சந்தைகளின் நகர்வுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது, எந்த எண்கள் உடைய MOVING AVERAGE இன் புள்ளிகளை பங்குகளின் விலைகள் கடந்தால் நல்ல உயர்வு கிடைக்கின்றது எந்த MOVING AVERAGE இன் புள்ளிகளை கடந்தால் கீழே வருகிறது எந்த MOVING AVERAGE இன் புள்ளிகளில் SUPPORT எடுக்கின்றது என்பதினை தொடர்ந்து கண்காணியுங்கள், உடனுக்குடன் எதையும் தீர்மானிக்காமல் பொறுமையாக ஒரு வெற்றிகரமான MOVING AVERAGE கலவைகளின் SET UP ஐ உருவாக்குங்கள், இதற்க்கு உங்களுக்கு தேவை பொறுமையும் ஆழ்ந்த கவனிப்பும், ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்துக்கொள்ளும் ஆர்வமும் வேண்டும் மேலும் அந்த குறிப்பிலிருந்து ஒரு இறுதியான SET UP ஐ கண்டு பிடித்து அந்த SET UP எல்லாவிதமான சந்தைகளிலும் வேலை செய்கின்றதா என்று கண்டு பிடியுங்கள், அப்படி இல்லை என்றால் அதை மேலும் சரியான முறையில் வடிவமைத்து இறுதி வடிவம் கிடைக்கும் வரை விடாமுயர்ச்சியுடன் HOME WORK செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள், மேலும் இதற்க்கு உறுதுணையாக இருக்கும் INDICATORS களையும் பயன்படுத்துங்கள், உங்களின் ஒவொரு சோதனைக்கும் PAPER TRADE செய்யாமல் 1 SHARE 2 SHARE என்று வாங்கி சோதனை செய்யுங்கள் (அதிகமாக வாங்கி விடாதீர்கள்), MOVING AVERAGE இன் எங்களை மாற்றி மாற்றி போட்டு பாருங்கள், பிறர் பயன் படுத்துவதை நீங்கள் பயன் படுத்துவதை விட நீங்களே HOME WORK செய்து கண்டு பிடிக்கும் SET UP களின் IN AND OUT உங்களுக்கு தெரியும் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள், சோர்ந்து மட்டும் போகாதீர்கள், இவளவையும் செய்து நீங்களே ஒரு வெற்றிகரமான ஒரு MOVING AVERAGE கலவைகளின் SET UP ஐ கண்டி பிடித்து விட்டால் உங்களால் தினமும் வெற்றிகரமான POSITION இல் இருந்து லாபம் ஈட்ட முடியும்.

"I want short term calls in cash or option I can invest rs. 10000 now. Please help me" 

தின வர்த்தகர்களுக்காகவும், SHORT TERM (2 TO 10 DAYS) வர்த்தகர்களுக்காகவும் TRADING CALLS SERVICE ஐ ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கும் உள்ளது பார்ப்போம் காலமும் சூழ்நிலையும் சேர்ந்து வந்தால் அதைப்பற்றி யோசிக்கலாம்.

********************************


rajan r

SIR , with the help of open interst value how can we trade in futures, is there any clue from that. please explain. 
thank u 
with regards 
rajan. 

ராஜன் OPEN INTEREST பற்றி விளக்கமாகவே பார்த்து விடுவோம், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும், OPEN INTEREST என்றால் என்ன என்றே தெரியாதவர்களை மனதில் வைத்து எழுதி உள்ளேன் 

OPEN INTEREST என்பது பொதுவாக FUTURE & OPTION மற்றும் COMMODITY வர்த்தகத்தில் பயன் படுத்தப்படும் ஒரு சொல், இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் போக்குகளின் தொடர்ச்சி (STRENGTH OF THE TREND), முடிவு (END OF THE TREND) மற்றும் அந்த குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் அடுத்தக்கட்ட நகர்வு (TREND REVERSAL), ஆகியவைகளை தெரிந்து கொள்ள பயன் படுத்தப்படும் ஒரு முக்கியமான INDICATOR ஆகும். 

பொதுவாக OPEN INTEREST என்பது ஒரு குறிப்பிட்ட வர்த்தக் தினத்தின் முடிவில் அன்று நடந்த வர்த்தகத்தில் இன்னும் முடிக்கப்படாத (SQUARE OFF பண்ணப்படாத அதாவது இன்று வாங்கி இனிவரும் நாட்களில் விற்கலாம் என்ற வகையில்) CONTRACT களின் எண்ணிக்கையை காட்டும் ஒரு அளவுகோல். 

OPEN INTEREST எப்படி உயருகிறது எப்படி வீழ்கிறது என்று பார்ப்போம் 

பொதுவாக நாம் ஒரு பங்கினை வாங்குவது போல் அனைவரும் வாங்க வாங்க அந்த பங்கின் VOLUME உயரும் இல்லையா, அதே போல் தான் இந்த OPEN INTEREST லும் VOLUME உயரும் ஆனால் இதில் எப்படி நடை பெறுகிறது என்று பார்ப்போம் 

முதலில் OPEN INTEREST உயருவதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம் 

அதாவது 
ஒரு CONTRACT ஐ ஒருவர் உயரும் என்ற எண்ணத்தில், (ஏறியவுடன் லாபம் பார்க்கும் நோக்கத்தில்) வாங்குகிறார், இவர் வாங்கும் இந்த CONTRACT ஐ யாராவது ஒருவர் விற்று இருக்க வேண்டும் இல்லையா, அப்படி விற்பவர் ஏற்கனவே வாங்கி அதை லாபத்துடனோ அல்லது நட்டத்துடனோ விற்ப்பவராக இருக்கக்கூடாது , இறங்கும் என்ற எண்ணத்தில் புதிதாக SHORT SELL செய்பவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி உயரும், என்ன புரிய வில்லையா 

ஒரு புதியவர் விற்று / மற்றொரு புதியவர் வாங்கினால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி உயரும்.
 
OPEN INTEREST வீழ்வதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம் 

அதாவது 
ஒரு CONTRACT ஐ ஏற்கனவே வாங்கியவரும் (உயரும் என்ற எண்ணத்தில் BUY செய்தவர்), அதே போல் இறங்கும் என்ற எண்ணத்தில் ஏற்கனவே விற்றவரும் (SHORT SELL செய்தவரும்), ஒருவருக்கொருவர் தங்கள் பரிமாற்றங்களை (POSITION ஐ முடித்துக்கொள்லுதல்) நிகழ்த்திக்கொண்டால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி கீழே வரும். 

பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும் OPEN INTEREST இல் எந்தவிதமான மாற்றங்களும் நிகழாமல் இருக்கும் அது எப்படி என்று பார்ப்போம் 

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட CONTRACT இல் POSITION இல் இருப்பவர் புதிதாக இந்த CONTRACT இல் வர்த்தகம் செய்ய வருபவரிடம் விற்றாலும் அல்லது வாங்கினாலும் OPEN INTEREST இல் எந்த விதமான மாற்றங்களும் நிகழாது, இன்னும் புரிய வில்லை என்றால் கீழே உள்ள அட்டவணையை பாருங்கள் புரியும் 

கீழ் கண்ட வகையில் வர்த்தகம் நடந்தால் 

NEW BUYER - NEW SELLER = OPEN INTEREST அதிகமாகும் 
OLD BUYER - OLD SELLER = OPEN INTEREST குறையும் 
NEW BUYER - OLD BUYER = OPEN INTEREST எந்த வித மாற்றங்களும் இல்லை 
NEW SELLER - OLD SELLER= OPEN INTEREST எந்த வித மாற்றங்களும் இல்லை 

(ஏற்கனவே வாங்கியவர் புதியவரிடம் விற்றாலும், ஏற்கனவே விற்றவர் புதியவரிடம் வாங்கிலும் எந்த மாற்றமும் இலலை).

இப்போ புரிகிறதா! 

சரி OPEN INTEREST ஐ பற்றி ஓரளவு திரிந்து கொண்டாகி விட்டது அடுத்து OPEN INTEREST இல் ஏற்ப்படும் மாற்றங்கள் அதனால் சந்தைகளில் ஏற்ப்படும் விளைவுகள் ஆகியவற்றை பற்றி பார்ப்போம் 

ஏதாவதொரு FUTURE CONTRACT கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த உயர்வு தொடருமா என்பதை நாம் OPEN INTEREST இல் ஏற்ப்படும் சில மாற்றங்களை வைத்து முடிவு செய்யலாம், 

அதாவது 
1- OPEN INTEREST தனது நிலையில் இருந்து மேலும் உயர்ந்து அதே நேரத்தில் அந்த FUTURE CONTRACT இன் விலைகளிலும் உயர்வு இருந்தால், இந்த FUT CONTRACT தொடர்ந்து உயரும் (அதாவது நிறைய புதியவர்கள் தொடர்ந்து இந்த FUT CONTRACT ஐ இன்னும் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் புதிய முதலீடுகள் இங்கு நடக்கின்றது என்று அர்த்தம்), ஆகவே இந்த உயர்வு தொடரும், இப்படி இருக்கும் போது நாமும் வாங்கி விற்று வர்த்தகம் செய்யலாம். 

ஏதாவதொரு FUTURE CONTRACT கடந்த சில நாட்களாக வீழ்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த வீழ்ச்சி தொடருமா என்பதை நாம் OPEN INTEREST இல் ஏற்ப்படும் சில மாற்றங்களை வைத்து நாம் முடிவு செய்யலாம், 
அதாவது 

2- OPEN INTEREST தனது நிலையில் இருந்து மேலும் உயர்ந்து அதே நேரத்தில் அந்த FUTURE CONTRACT இன் விலைகளிலும் வீழ்ச்சிகள் இருந்தால், இந்த FUT CONTRACT தொடர்ந்து கீழே வரும் (அதாவது நிறைய புதியவர்கள் தொடர்ந்து இந்த FUT CONTRACT ஐ இன்னும் விற்றுக்கொண்டு (SHORT SELL) தான் இருக்கின்றார்கள் என்று அர்த்தம்), ஆகவே இந்த வீழ்ச்சி தொடரும், இப்படி இருக்கும் போது நாமும் விற்று வாங்கி (SHORT SELL) வர்த்தகம் செய்யலாம் 

ஏதாவதொரு FUTURE CONTRACT இல் குறிப்பிட்ட அளவுக்கு உயர்வு ஏற்ப்பட்ட பிறகோ, அல்லது குறிப்பிட்ட அளவு வீழ்ச்சிகள் ஏற்ப்பட்ட பிறகோ OPEN INTEREST இல் ஏற்ப்படும் கீழ் கண்ட மாறுதல்களை வைத்து, அந்த CONTRACT இன் அடுத்த கட்ட நகர்வுகள் (TRENT REVERSAL) எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கலாம், 

அதாவது 
OPEN INTEREST இல் எந்த பெரிய மாற்றங்களும் (FLAT) இல்லாமலோ அல்லது சற்று குறைந்தோ இருந்து அந்த CONTRACT இன் விலைகளில் நிறைய மேலும் கீழுமான ஆட்டங்கள் (VOLATILE) இருந்தால் அந்த CONTRACT இது வரை தான் இருந்த TRENT இல் இருந்து தனது நிலையை வெகு விரைவில் மாற்றப்போகிறது என்று அர்த்தம், (அதாவது ஏற்கனவே POSITION இல் இருப்பவர்கள் தங்களது POSITION ஐ SQUARE OFF செய்கிறார்கள் என்று அர்த்தம், இப்படி இருக்கும் போது நாமும் நமது POSITION ஐ முடித்துக்கொள்ளலாம். 

இந்த அட்டவணையை பாருங்கள் இன்னும் புரியும்

PRICE -               O.I -                               RESULT 

UP                        UP                           MARKET STRONG 

UP                    DOWN                        MARKET WEAK 

DOWN                 UP                           MARKET WEAK

DOWN          DOWN OR FLAT         TREND REVERSAL 

என்ன ராஜன் உங்களுக்கு OK யா

********************************


s.eswaran eswar 
வணக்கம் சார் உங்களின் இந்த தமிழ் சேவைக்கு எனது பாராடுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ... இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் சரவணன் சார் ... எனது சந்தேகங்களையும் தாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறேன் , 

1. நீங்கள் தினமும் ஒரு பங்கின் வரைபடத்தை எடுத்து அதன் மேல்நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய தடுப்பு என இரண்டையும் கூறுகிறேர்கள் அவை நூற்றுக்கு என்பது சதம் சரியாக உள்ளது இந்த ரகசியத்தை எனக்கும் சொல்லித்தாருங்களேன் ஒரு எடுட்டுக்காடின் வாயிலாக .. 
2.வோல்டாஸ் பங்கின் அடுத்தவார நிலை என்ன என்பதையும் தயவுகூர்ந்து கூறவும். 

"இந்த ரகசியத்தை எனக்கும் சொல்லித்தாருங்களேன்" 

இது ஒன்னும் கம்ப சித்திரம் இல்லை திரு ESWARAN பழக பழக வருவது தான் (வாங்க பழகலாம்) நாம் எந்த விசயத்தில் அதிக காதல் கொள்கிறோமோ அதில் அதிக ஆர்வம் காட்டுவோம் இல்லையா, அப்படி எனக்கும் ஒரு காதல் நிட்பக்கூறு ஆய்வுகளில் வந்தது, இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் இந்த துறைக்கு வந்தது ஒரு EGO வினால் தான் ஒரு முறை ஒரு INVESTOR, STOCK MARKET பற்றி உனக்கெல்லாம் என்ன தெரியும் என்று என்னை அவமான படுத்தினார், அதுவும் நான் அதிகம் விரும்பும் மனிதர்களின் மத்தியில், அங்கிருந்து ஆரம்பித்த வெறி பின் காதலாக மாறியது, எனக்கே ஒரு ஆத்மா திருப்தி இதிலிருந்து கிடைத்தது, இதனால் எப்பொழுதும் நான் CHART இன் முன்னாள் தான், என் மனைவியிடம் என்னை பற்றி கேட்டீர்களானால் என்னை முறைத்து பார்ப்பார்

வோல்டாஸ் பங்கின் அடுத்தவார நிலை

VOLTAS ஐ பொறுத்த வரை 61 என்ற புள்ளி தற்பொழுது நல்ல SUPPORT ஆக இருக்கும் இந்த புள்ளியை கீழே உடைத்தால் 57 TO 56 என்ற புள்ளிகளுக்கு வரலாம், இந்த புள்ளிகளுக்கு அடுத்து 55 அடுத்த SUPPORT ஆக இருக்கும், 55 க்கு கீழ் 50 , 48.5 நல்ல SUPPORT அதற்கும் கீழ் 45 , 40 வரைக்கும் வரலாம், ஆனால் 57 TO 55 இல் நல்ல SUPPORT இருக்கும் அந்த நிலையில் வாங்கலாம் (S/L 54.5), அதே போல் மேலே உயருவதற்கு 70 TO 71 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம் இந்த புள்ளிகளை நல்ல VOLUME உடன் கடந்து முடிவடயுமானால் அதாவது 72 க்கு மேல் இதன் இலக்கு 80, 82 TO 85 என்ற வகையில் இருக்கும். 

********************************


selvakumar rathinam 
IFCI பங்கினை தின மற்றும் குறுகிய காலம் வணிகம் செய்யலாம் என்றிருக்கிறேன். FIBONACCI RETRACEMENTடை பயன்படுத்தி IFCI பங்கின் தின உயர்வு தாழ்வு கணக்கிட முடியுமா? முடியும் என்றால் பங்கின் விலை அளவு எது என்பதை படத்துடன் தயவுசெய்து விளக்கவும். FIBONACCI RETRACEMENT தவிர வேறு முறை இருந்தால் க்ஷறவும். 
செல்வகுமார் ரத்தினம் 

IFCI பற்றி முதலில் பார்ப்போம் IFCI இல 30 என்ற புள்ளி தற்பொழுது இரண்டு விதமான TREND LINE RESISTANCE என்ற முறையில் தடைகளை சந்திக்க உள்ளது, இந்த 30 என்ற புள்ளியை நல்ல VOLUME உடன் கடந்து முடிவடயுமானால் அதன் மேல் நோக்கிய இலக்காக (FIBONACCI அளவுகளின் படி) 34, 38, 40, 45, இப்படி வரிசையாக சொல்லலாம், 

அதே நேரத்தில் 30 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்து கீழே வருமானால் கீழே (FIBONACCI அளவுகளின் படி) 24.7, 22.5, 20, 18 TO 17 என்ற புள்ளிகளில் SUPPORT எடுக்கலாம்,  இதை பொறுத்து உங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள். 

"FIBONACCI RETRACEMENTடை பயன்படுத்தி IFCI பங்கின் தின உயர்வு தாழ்வு கணக்கிட முடியுமா?" 

IFCI என்று இல்லை எண்களின் எந்த விதமான புள்ளி விவரங்களினால் உருவாக்கப்பட்ட CHART லும் FIBONACCI ஐ பயன் படுத்தலாம், இந்த வலை தளத்திலே FIBONACCI பற்றி விளக்கமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளேன், இந்த தளத்தின் TOP RIGHT SIDE CORNER இல் "முக்கியமான பதிவுகள்" என்ற தலைப்பில், FIBONACCI பற்றி விளக்கம் இருக்கிறது அதை CLICK செய்து படித்து விடுங்கள், மேலும் FIBONACCI RETRACEMENT ஐ பயன் படுத்துவதை பற்றி வெறும் வரைபடத்தை மட்டும் காண்பித்து விளக்க முடியாது, நான் TECHNICAL CLASS எடுக்கும் போது VIDEO பதிவுகளின் மூலம் வகுப்புகளை நடத்துவேன் அப்பொழுது உங்களுக்கு விளக்கமாக புரிந்து விடும் அதுவரை சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்.

********************************

வணக்கம் பாலாஜி, 
முதலில் தங்களது சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி. 
Elliot Wave புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வணிகத்திற்கு எவ்வாறு உபயோகப்படுத்து என்று தெரியவில்லை. சில விளக்கப் படங்களுடன் எளிமையாக விளக்கினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். தங்களின் தனித்தன்மையே படங்களுடன் பட்டையை கிளப்புவதுதானே! விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். 
-விக்னேஷ் குமார். 

விக்னேஷ் நான் முழுமையாக பயன்படுத்துவது CLASSICAL TECHNICALS தான், Elliot Wave வை பொறுத்த வரை நான் ஏட்டுச்சுரக்காய் தான், முதலில் அதை பயன் படுத்தும் போது எனக்கு நிறைய குழப்பங்கள் இருந்தது, மேலும் அதில் ஒவ்வொரு விசயங்களையும் உள்ளார்ந்து சென்று பார்க்க வேண்டி இருந்தது, இதனால் எனக்கு அதிக குழப்பங்கள் தான் மிஞ்சியது , இதனால் எனது வெற்றிகளில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன், மேலும் எனது சொந்த என்னகளை இதில் புகுத்தி பார்க்க நிறைய தடைகள் இருந்தது (என் மாற மண்டைக்கு ஏறவில்லை போல ) ஆகவே அதை பயன்படுத்துவதை நிறுத்தி வெகு காலம் ஆகிவிட்டது ஆகவே நான் ஏட்டுச்சுரக்காய் தான் கறிக்கு உதவாது, படித்ததை வாந்தி எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் இதில் என் சொந்த அனுபவம் எனக்கே உதவ வில்லை, பின் நான் எப்படி உங்களுக்கு, CLASSICAL ANALYZING பத்தி கேளுங்கள் நீங்கள் சொன்னது போல் பட்டையை கிளப்பி விடுவோம்.

********************************


senthi; kumar 

Hello sir i am fine, how r u . I feel market is fully based on emotional decision of share holders. so how it possible the market obey the graph.( candle chart, etc, etc ) please explain, can u teach me or guide about technical analysis 

செந்தில் நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை, சந்தை உணர்ச்சிகளின் ஒட்டுமொத்த அழுக்கு மூட்டை தான், ஆனால் அந்த அழுக்கு மூட்டைகளை அடித்து துவைத்து கிழித்து காயப்போடும் புத்திசாலி வன்னாங்களும் தேவையான விகிதத்தில் சந்தையில் இருக்கின்றார்கள், எல்லாம் கலந்தது தான் சந்தை, 
உணர்ச்சிகளினால் உந்தப்பட்டு இடையே BUS இல் இருந்து கீழே இறங்குபவர்களும், தாவிக்குதிப்பவர்களும், பிறரால் தள்ளி விடப்படுபவர்களும் உண்டு, இதெல்லாம் கூட்ட நெரிசலாலும், போகும் பாதையில் சில மேடு பள்ளங்களை சந்திப்பதினாலும் BUS இல் ஏற்ப்படும் குலுங்கல்கள் ஆனால் ஓட்டுனரும் வசதியாக போகும் இடம் தெரிந்து TICKET எடுத்து அமர்ந்து இருப்பவர்கள் அமைதியாக சென்று சேர வேண்டிய இடம் வரை சேர்ந்து விட்டுத்தான் இறங்குவார்கள், இடையில் ACCIDENT நடந்தால் (SATYAM SCAM ) யார் தான் என்ன செய்வது. 

இப்பொழுது சொல்லுங்கள் CHART WORK ஆகுமா, ஆகாதா (TECHNICAL ஐ பொறுத்த வரை நாம் தான் தவறு செய்வோம், நன்றாக மறுபடியும் உற்று பார்த்தால் நாம் செய்த தவறுகள் நம் கண்ணுக்கு தெரியும் எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு )

********************************

Dear Mr.Saravana Balaji,

How r u?, I thank with my whole heart for your dedicated and valuable service to, the Trading Tamil people.. Each n every article in very simple language & explain with a chart helps everybody understand what u want to say and help them to learn lot..
Through ichart fellow trader i got your blog link and i was amazed the way you pick the breakout scrip at a right time like GMDC, HEG, SUZLON, NAGARFERT. that i was used.


..
இது அவரின் PERSONAL விஷயங்கள்

When i start read your blog my mind asked few thing about you. In the past you also searched lot to learn about market and technical and faced many struggle then only your mind intuit you to write blog. am I right?

Today you mention about you plan to start a technical session in your blog once you get a good number of support. One humble request once you start please allocate a section in your blog for late comer to go through the page and learn what was thought earlier. Like a forum type you create this learning section it help the session go with smooth manner.

Please create one link for do and don't to save their hard earn money for day traders mainly and how to develop the day trading skill...

Thanks & Regards,
S.Saravanan.

கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல் தனிப்பட்ட LINK கொடுத்து விடுகிறேன் MR சரவணன், நடந்ததை விடுங்கள் PAST IS PAST இனி எல்லாம் சுகமே

********************************
ஜி ஆர் சந்திரகுமார் 
கோவை 
பங்கு வணிகம் பற்றிய டெக்னிகல் வகுப்பு ஆரம்பம் முதல் அறிந்து கொள்ள விருப்பம் 

விரைவில் ஆரம்பித்து விடுவோம் திரு சந்திரக்குமார், இன்னும் கொஞ்சம் நிறைய நபர்கள் வந்து விடட்டும் 

********************************