18-05-09
உலக சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் உள்ளது, ஆனால் SINGAPORE NIFTY 280 புள்ளிகளுக்கு மேல் தொடங்கி தற்பொழுது 400 புள்ளிகளுக்கு அருகில் நடந்து வருகிறது, நாம் வெள்ளிக்கிழமையே எண்ணியது போல் மிகப்பெரிய GAP UP சந்தைகளில் வரப்போகிறது மேலும் 3600, 3700 CALL OPTION வாங்கியவர்கள் இன்று நல்ல லாபம் பார்க்கலாம் நான் கூறியதை வைத்து யாரும் வாங்கி இருந்தால் உங்கள் சந்தோசங்களை பின்னூட்டம் மூலம் வெளிப்படுத்துங்கள்.
இவளவு பெரிய உயர்வு வருவதற்கான வாய்ப்புகளை TECHNICAL CHART நமக்கு நன்றாகவே உணர்த்தியதை நான் உங்களுக்கு தெளிவாக வெள்ளிக்கிழமை அன்று சொல்லி இருந்தேன் (TECHNICAL ANALYSING ஐ நாம் மிகவும் தெளிவாகவும், சரியாகவும் பயன்படுத்தினால் சந்தையின் அடுத்த நகர்வுகளை மிகத்துள்ளியமாக நான் என்று இல்லை யார் வேண்டுமானாலும் கண்டு பிடிக்கலாம்), மேலும் வெள்ளிக்கிழமை உங்களை CALL OPTION வாங்க சொல்லி இருந்தேன் வாங்கியவர்கள் இன்று உங்கள் லாபங்களை உறுதி செய்துகொள்ளுங்கள்.
சந்தைகளில் உயரங்களில் SELLING PRESSURE வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது, அதாவது 4060, 4150, 4280, 4300 TO 4335 இந்த புள்ளிகளில் எல்லாம் NIFTY க்கு நல்ல RESISTANCE உள்ளது மேலும் INDEX பங்குகள் எல்லாம் ஏறக்குறைய CORRECTION னிலிருந்து கிட்ட தட்ட 50% உயர்வை அடைந்து வருகிறது மேலும் சில MIDCAP பங்குகள் VOLUME இல்லாமல் உயர்வை சந்தித்துள்ளன ஆகவே இந்த உயர்வுகளில் தின வர்த்தகம் செய்பவர்களை S/L களையும், லாபம் கிடைத்தால் TRIALLING S/L OR PROFIT BOOKING செய்து கொள்ளுங்கள்.
இது நிதானமாக லாபம் பார்க்கும் சந்தை என்று சொல்ல முடியாது ஆகவே சந்தைகளில் ஒரு வித பதற்றம், பயம், தெளிவின்மை கண்டிப்பாக இருக்கும் பார்த்து லாபங்களில் உறுதியாக இருங்கள், இன்று NIFTY இன் நிலைகள் சொல்வது கடினம்.
கவனிக்க வேண்டிய பங்குகள்
எந்த பங்குகளை கவனித்தாலும் தற்பொழுது இருக்கும் புள்ளிகளை விட மிக உயரத்தில் தான் OPEN ஆகும், ஆதலால் எந்த பங்குகளை பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கும் என்ன செய்வது இரண்டு நாட்கள் போகட்டும் சந்தையில் இந்த தூசிகள் அடங்கட்டும் நிதானமாக பார்த்துக்கொள்ளலாம்.
நான் இன்று எனது CALL OPTION ஐ மட்டும் லாபம் பார்க்க போகிறேன் வேறு ஏதும் செய்ய விருப்பம் இல்லை, இந்த நேரத்தில் என்னுடன் சேர்ந்து நான் சொன்னதினால் CALL OPTION வாங்கியவர்களுக்கு எனது மகிழ்ச்சி யையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன், வாங்கியவர்கள் உங்கள் சந்தோசங்களை பின்னோட்டம் மூலம் தெரிவியுங்கள்.