Friday

NIFTY ON FRIDAY

22-05-09 

அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் தொர்ச்சியாக ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடி வருகிறது, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET ஒரு சிறிய உயர்வுடன் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து வரும் SINGAPORE NIFTY 25 புள்ளிகள் இறக்கத்துடன் OPEN ஆகி மேலும் 25 புள்ளிகள் இறங்கி மறுபடியும் மீண்டு தற்பொழுது 15 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் நடந்து வருவது நமது சந்தையில் ஒரு மேடுபள்ளமான போக்குகள் நடப்பதற்க்கான் வாய்ப்புகளை இன்றும் உருவாக்கலாம், வாரத்தின் இறுதிநாள் கவனமாக செயல்படுங்கள்…. 

NIFTY ஐ பொறுத்த வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டது போல INVERTED CUP WITH HANDEL, CHANNEL என்ற இரண்டு விதமான TECHNICAL அமைப்புகள் அமைந்து வருகிறது இதில் INVERTED CUP WITH HANDEL நேற்று 4240 என்ற புள்ளியில் BREAK DOWN செய்துள்ளது இந்த அமைப்பின் படி இதன் கீழ் நோக்கிய இலக்கு 4005, அதே நேரம் இரண்டாவதாக அமைந்து வரும் CHANNEL என்ற அமைப்பு இன்று 4195 TO 4160 என்ற புள்ளிகளுக்கிடையில் தனது SUPPORT ஐ பெற்றுள்ளது, இந்த புள்ளிகளையும் கீழே கடந்தால் இந்த CHANNEL அமைப்பின் படி கீழ் நோக்கிய இலக்கு 4090. மேலும் NIFTY இல SHORT SELL செய்ய நினைப்பவர்கள் 4255 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு செய்யலாம், முழுவதும் இந்த வீழ்ச்சிகள் TURN BACK ஆகவேண்டும் என்றால் NIFTY 4320, 4362 என்ற புள்ளிகளை கடக்க வேண்டும், கீழே உள்ள படத்தை பாருங்கள் 

NIFTY INTRA MIN CHART


இன்றைக்கு பொறுத்த வரை NIFTY இன் முக்கியமான SUPPORT புள்ளியாக 4194 இருக்கும் இந்த புள்ளியை கீழே கடந்தால் 4172 TO 4162, 4137 TO 4131, இந்த 4130 என்ற புள்ளியை கீழே கடந்தால் NIFTY இல விரைவான வீழ்ச்சிகள் இருக்கும் அதேபோல் NIFTY இல் உயர்வு ஏற்பட வேண்டுமாயின் 4255 என்ற புள்ளியை கடக்க வேண்டும் 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 4245 TO 4255 TARGET 4270 TO 273, 4319 TO 4325, 4384 TO 88, 90, 4430, 4480, 4500 TO 4510, 4554 

NIFTY SPOT BELOW 4194 TARGET 4172 TO 4166, 4158 TO 4151, 4137 TO 4130, 4060 TO 4050, 4025 TO 4020, 3944, 3917, 3906 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

நேற்று நாம் பேசிக்கொண்ட MID CAP பங்குகளாக இங்கு கொடுத்த அனைத்தும் சந்தை இறக்கத்தில் இருந்தபோதும் நல்ல முன்னேற்றத்தை அடைந்ததை கவனித்து இருப்பீர்கள், மேலும் ROLTA, ZEE NEWS போன்ற பங்குகளும் நல்ல முறையில் உயர்ந்தது, NDTV தொடக்கத்தில் உயர்ந்தாலும் சந்தையின் வீழ்ச்சியில் கீழ் வந்துள்ளது அந்த பங்கை வாங்கி இருந்தால் 120 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள் 

REL CAPITAL SELL BELOW 833 TARGET 807, 790, 745 S/L 846 (FOR RISKY TRADER 858) 

SELL L&T BELOW 1220 (IF SUSTAINS) TARGET 1186 TO 1179, 1140, S/L 1244 
BUY L&T ABOVE 1245 TARGET 1269, 1285, 1300 S/L 1220 

GT OFFSHORE 

இந்த பங்கில் விரைவில் ஒரு நல்ல உயர்வு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது, மேலும் H&S, CHANNEL என்ற இரண்டுவிதமான அமைப்புகள் அமைந்து வருவதுவும் கவனிக்க வேண்டிய விஷயம், அதில் H&S அமைப்பு நேற்று BREAK OUT புள்ளிக்கு மிக அருகில் முடிந்து இருப்பதும் அதனுடன் நல்ல VOLUME நடந்து இருப்பதும் சாதகமான விஷயம், மேலும் அடுத்த அமைப்பான CHANNEL இன் RESISTANCE சரியாக 352 என்ற புள்ளிக்கருகில் வருகிறது, அப்படி மேலே கடக்க முடியாமல் கீழே வந்தால் 314, 301, 290, 280 இந்த புள்ளிகளில் எல்லாம் SUPPORT உள்ளது முக்கியமாக 314, 301 என்ற புள்ளிகளுக்கு அருகில் வரும்போது வாங்க முற்படலாம் இதன் S/L 279, 353 என்ற புள்ளியை மேலே கடந்தால் இதன் இலக்கு 370, 450, 470 சந்தையில் இறக்கம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கீழ் இறங்கி வரும்போது வாங்கலாம்