Tuesday

தூசி அடங்கட்டும் காத்திருங்கள்

19-05- 09 

இந்திய வரலாற்றில் இல்லாத நிகழ்ச்சிகள் 2 நிமிடத்திற்கும் குறைவான வர்த்தக நேரத்தில் மூன்று கட்ட CIRCUIT ஐயும் சந்தை தொட்டதால் நிறுத்தப்பட்டது, வெறும் 3000 கோடி ரூபாய் வர்த்தகத்தில் சந்தையின் சொத்து மதிப்பில் 4 லட்சம் கோடி உயர்ந்துள்ளது, இதில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது அதாவது SHORT SELLING இல உள்ளவர்கள் அனைவரையும் இலக்காக (பிழிந்து எடுக்க ) வைத்து இந்த உயர்வு நடத்தப்படுகிறது, இது ஏதோ திட்ட மிட்ட செயலாகவே தெரிகிறது, 

TECHNICAL CHART ஐ பார்க்கும் பொழுது NIFTY க்கு 4800 என்ற இலக்கு வரை இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாததே, இருந்தாலும் 6357 முதல் 2252 வரைக்குமான புள்ளிகளின் FIBONACCI அளவுகளில் 61.8% என்ற தடை நிலை சரியாக 4800 என்ற புள்ளியிலும் மேலும் முன்னர் ஏற்ப்பட்ட உயர்வுகளில் TOP எனப்படும் PREVIOUS HIGH POINT 4648 என்ற புள்ளியிலும் வருகிறது, ஆகவே 4650 அதை கடந்தால் 4800 இந்த இரண்டு புள்ளிகள் அடுத்தடுத்து தடைகளை NIFTY க்கு கொடுக்கும், 

ஆகவே இந்த இடங்களில் சந்தையை நிறுத்தி ஆட்டம் காண்பிக்க கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு, மேலும் ஒரு விஷயம் இந்த RALLY யில் சிறிய அளவிலான TRADER கள் யாரும் பங்கு கொண்டதுபோல் தெரியவில்லை, மாறாக FII, DII போன்ற பெரிய முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளியன்று அதிக அளவிலான முதலீடை செய்து இருக்கின்றார்கள் 

ஆகவே சந்தையை மேலும் உயர்த்தவே முயலுவார்கள், அப்படி இல்லை என்றால் FLAT MARKET என்ற முறையில் நகர்த்துவார்கள், SHORT SELL செய்தவர்களின் நிலை கவலை அளிப்பதாக இருக்கின்றது மேலும் EXPIRY க்கு இன்னும் 10 தினங்கள் உள்ளது, ஆகவே சந்தைகளில் PROFIT BOOKING, மற்றும் SHORT COVERING என்ற முறையில் உயர்வு தாழ்வுகள் வரும், நான் நேற்றே சொன்னது போல் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கி முடியட்டும் பிறகு நாம் நமது வேலைகளை சரியாக செய்வோம், 

சந்தை நேற்று செய்ததை 4, 5 குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாக இருக்கும் ஒரு வீட்டில் யாராவது ஒருவர் யாருக்கும் தெரியாமல் CAR வாங்கி வந்தால் என்ன நடக்கும் (நிறைய கூச்சல், குழப்பம், பொறாமை, பயம் (நாமும் CAR வாங்க வேண்டி வருமோ என்று)) அதுதான் நடந்து இருக்கிறது சந்தையில், அதை சரிப்படுத்த குடும்பத்தலைவர் அனைவரையும் கூப்பிட்டு இந்த CAR அனைவருக்கும் சொந்தம் இனி இது பொதுவில் இருக்கும் தேவையான போது தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், இதற்கான பணத்தை அனைவரும் சேர்ந்து CAR வாங்கி வந்தவரிடம் அவர் பங்கை கழித்துக்கொண்டு குடுத்து விடுவோம் சமாதானமாக இருங்கள் என்று கூறி சமாதானம் செய்தால் நன்றாக இருக்கும், அதுபோல் இங்கு நமது GOVERNMENT செய்யுமா அல்லது CAR வாங்க சொன்னதே GOVERNMENT தான ? (இனி எல்லாம் சுகமே என்று நம்புவோமாக), 

சரி மேலும் ஒரு முக்கியமான விஷயம் சந்தை 4800 க்கு மேல் போவதற்கான THECHNICAL விஷயங்கள் சரிவர இல்லாததால் 4650 க்கு மேல் 4800 க்குள் உங்கள் லாபங்களை உறுதி செய்துகொள்ள தவற வேண்டாம், மேலும் அடுத்த வாய்ப்புக்காக முதலீடை கையில் வைத்துக்கொள்வது சால சிறந்தது, 

இனி வரும் இந்த உயர்வுகள் அதிக அளவில் MIDCAP மற்றும் SMALL CAP பங்குகளில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே அவைகளில் உங்கள் கவனங்களை செலுத்துங்கள் உதாரணமாக கீழ்க்கண்ட பங்குகளை கவனியுங்கள் (இந்த பங்குகளின் விளக்கங்களை வரைபடத்துடன் விரைவில் தருகிறேன்) ELECTRO THERM, ETC NETWORK, IFGL REFRACTORIES, AURION PRO, AGRO TECH FOODS, DISHMAN PHARMA இது போன்ற பங்குகளில் நல்ல நகர்வுகள் இருக்கலாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள், 

இன்றும் NIFTY இன நிலைகள் தருவதற்கான வாய்ப்புகள் இல்லை, 

மேலும் ஒரு முக்கியமான விஷயம் இந்த RALLY யில் பங்கு கொள்ள முடியாதவர்கள் கவலை பட வேண்டாம் இது போன்ற உயர்வுகளில் பங்கு கொள்ளாமல் இருப்பது சிறந்த செயல் தான் அதை நினைத்து சந்தோசப்படுங்கள், தெளிவான உயர்வுகள் சந்தையில் இருக்கும் போது நாம் கண்டிப்பாக இதை விட அதிகம் வருமானம் பெறலாம் கவலையை விடுங்கள் சேர்ந்து கலக்கி விடலாம், 

இதில் LONG எடுத்து பங்கு கொண்டவர்கள் 4650 TO 4800 என்ற புள்ளிகளில் உங்கள் லாபங்களை உறுதி செய்துகொள்ளுங்கள், SHORT SELLING இல பங்கு கொண்டவர்கள் ஒவ்வொரு இறக்கத்திலும் உங்கள் POSITION ஐ முடித்துக்கொள்ளுங்கள் இறங்கும், இறங்கும் என்று காத்துக்கொண்டிருக்க வேண்டாம் EXPIRY க்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் FLAT MARKET மற்றும் உயர்வுகளில் ஆட்டம் இருக்கும் ஆகவே நடந்தது நடந்து விட்டது வெளியேறி விடுங்கள், இனி எல்லாம் சுகமாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன், 

சந்தைகளில் தெளிவான ஒரு போக்குகள் கிடக்கும் வரை இதுபோன்ற கதை தான் எழுத முடியும் என்ன செய்வது நான் எழுதுவதை எல்லாம் படிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு