Thursday

NIFTY ON THURSDAY

21-05-09 

அமெரிக்க DOW JONES வெறும் 50 புள்ளிகள் வீழ்ந்ததுபோல் தெரிந்தாலும் அதன் உயரங்களில் இருந்து கிட்ட தட்ட 200 புள்ளிகளை இழந்துள்ளது, இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகளிலும் இதே நிலை தான் தெரிகிறது, மேலும் SINGAPORE NIFTY FLAT OPEN ஆகி தற்பொழுது 35 புள்ளிகள் இழந்து மேலும் கீழும் ஆடி வருவது (நான் இதை எழுதும்போது) நமது சந்தைகளில் VOLATILE எனப்படும் நிச்சயமற்ற போக்கு இறப்பதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம், இருந்தாலும் சில புள்ளிகளை மேலே கீழே கடந்தால் தான் NIFTY ன் நகர்வுகளை நாம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியும் அப்படியான புள்ளிகளை கீழே கொடுத்துள்ளேன், அதனை வைத்து உங்கள் வர்த்தகத்தை மேற்க்கொள்ளுங்கள். 

நமது NIFTY ஐ பொறுத்தவரை TECHNICAL ஆக கீழ் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது நாம கவனிக்க வேண்டிய ஒன்று மேலும் நேற்று நாம் எதிர்பார்த்தது போல் 4273 க்கு கீழ் முடிவடைந்து இருப்பது யோசிக்க வேண்டிய விஷயம், அதே நேரத்தில் முக்கியமான சில புள்ளிகளை கீழே கடந்தால் தான் வீழ்ச்சிகளை உறுதியாக சொல்லமுடியும், அவ்வாறான புள்ளிகள் முறையே 4233, 4220, 4217, ஆகவே 4215 TO 4200 என்ற புள்ளிகளை NIFTY கீழே கடக்குமானால் அதன் வீழ்ச்சிகள் உறுதிப்படும் மேலும் கீழ் நோக்கிய இலக்காக 4133, 4050 TO 4030 என்ற புள்ளிகள் அமையலாம், 

ஆகவே LONG இல் இருப்பவர்களும் அதே நேரத்தில் SHORT SELLING இல் இருப்பவர்களும் கவனிக்க வேண்டிய புள்ளி 4215 TO 4200 இதனை வைத்து உங்கள் வர்த்தகத்தை முடிவு செய்யுங்கள், மேலும் சந்தை தொடர்ந்து உயர வேண்டுமானால் 4350 என்ற புள்ளியை கடக்க வேண்டும், அப்படி கடக்கும் பட்சத்தில் 4500 மற்றும் புதிய உயரங்களை தொடும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை, இன்றைக்கு பொறுத்தவரை 4283 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த உயர்வுகள் தொடரும், 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 4283 TARGET 4318 TO 4325, 4343-48-50, 4363, 4385, 4421, 4468, 4505, 4550 

NIFTY SPOT BELOW 4233 TARGET 4220 TO 4215, 4172 TO 4166, 4135 TO 4125, 4100, 4035 TO 4050, 4017 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

நேற்றய சந்தையின் இறக்கத்திலும் நாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிக்கொண்டது போல் MIDCAP, SMALL CAP பங்குகளில் நல்ல உயர்வுகள் இருந்ததை கவனித்து இருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் இந்த உயர்வுகள் தொடரும், ஏனெனில் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள உயர்வுகளில் அதிகமான இதுபோன்ற பங்குகள் பங்குபெறவில்லை அதேநேரம் அவைகளில் நல்ல VOLUME நடந்து வருவது கவனிக்க வேண்டிய விஷயம், ஏற்கனவே நாம் கொடுத்து இருந்த (ELECTRO THERM, ETC NETWORK, IFGL REFRACTORIES, AURION PRO, AGRO TECH FOODS, DISHMAN PHARMA) இந்த பங்குகளில் எல்லாம் குறைந்தது 10% TO 15% உயர்வு ஏற்ப்பட்டுள்ளது, 

சரி இதுபோன்ற அடுத்த ஒரு தொகுப்பை பார்ப்போம் (PTC AROUND 77 TO 71, GODAWARI POWER ISPAT AROUND 90 TO 84, BANK OF RAJASTAN AROUND 47, AND INDO WIND ENERGY, GDL, FORTIES, ABG SHIPYARD, AGRO TECH FOOD, BHUSEN STEEL, CINIMAX, DISHMAN PHARMA, ENGINEER INDIA, ESSAR OIL ) இது போன்ற பங்குகள் நல்ல உயர்வை காட்டலாம், இறக்கத்தில் வாங்குங்கள் மேலும் 15% TO 25% RETURN கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. 

மேலும் ROLTA, NDTV, ZEE NEWS இது போன்ற பங்குகள் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் நல்ல உயர்வுகளை கொடுக்கலாம் கீழே வரும்பொழுது வாங்குங்கள்.

இன்று சில அவசர வேலையாக வெளியே செல்ல வேண்டி இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை - நன்றி