Friday

NIFTY ON FRIDAY

17-07-09

அமெரிக்க சந்தைகள் உயர்வுடனும் இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகள் சற்று உயர்வுடனும் இருந்தாலும் எந்தப்பக்கம் செல்வது என்று திணறி வருகிறது, DOW தனது முக்கியமான RESISTANCE புள்ளியான 8600 ஐ கடந்து முடிந்துள்ளது அடுத்து 8700, 8900 என்ற இந்த புள்ளிகளில் எப்படி நகர்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அடுத்த கட்ட நகர்வுகள் முடிவு செய்யலாம்,

தற்பொழுது SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை தொடக்கத்தில் 55 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி இதுவரை அந்த HIGH புள்ளிகளை கடக்க முடியாமல் கீழே வந்து வெறும் 20 புள்ளிகள் உயர்வு என்று இருந்து வந்த நிலையில் இருந்து முன்னேற முயற்சி செய்வதை நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும், இதன் தாக்கமாக நமது சந்தைகளில் திடீரென உயர்வு ஏற்ப்படும் சூழ்நிலைகள் வரலாம் மேலும் அமெரிக்க FUTURE MARKET உயர ஆரம்பித்தால் அனைத்து சந்தைகளும் உயர ஆரம்பித்து விடும் ஆகவே சற்று கவனமாக இருந்து வர்த்தகம் செய்யும் நாளாக இன்று இருக்கும், எது எப்படி ஆனாலும் 4266 TO 4277 என்ற புள்ளிகளை கடந்தால் நமக்கு உயர்வுகள் சாத்தியம், அதே போல் 4200 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் சாத்தியம்..

NIFTY கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காட்டியுள்ள படி தற்பொழுது CHANNEL என்ற அமைப்பின் BOTTOM LINE SUPPORT ஐ சற்று கீழே கடந்து நாம் எதிர்பார்த்தது போல மேலே உயர்ந்து வருகிறது, மேலும் தற்பொழுது இந்த சேனல் அமைப்பின் TOP LINE RESISTANCE 4370 என்ற புள்ளியில் உள்ளது மேலும் 4400, 4430 என்ற இந்த புள்ளிகள் FIBONACCI அளவுகளின் படி அடுத்த தடைகளை கொடுக்கும், NIFTY க்கு தற்பொழுது எந்தப்பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற சூழ்நிலைகள் இருப்பதால் இந்த புள்ளிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதனால் சொல்ல வேண்டியுள்ளது,

அப்படி உயருமானால் CHANNEL அமைப்பின் BOTTOM LINE ஐ சற்று கீழே கடந்தது மீண்டது போல மேலே TOP LINE RESISTANCE ஐ சற்று மேலே கடந்து திரும்புமா, இல்லை தொட்டு விட்டு திரும்புமா, அல்லது கடந்து தொடர்ந்து உயருமா என்பது இன்னும் 2, 3 வர்த்தக தினத்திற்குள் முடிவு செய்து விடும் என்றே தோன்றுகிறது, அது வரைக்கும் நாம் காத்து இருக்க வேண்டியது தான், மேலும் அந்த சூழ்நிலைகளில் அடுத்து நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கமாக பார்ப்போம், கீழே உள்ள படத்தை பாருங்கள்

NIFTY CHART


NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4237 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் நல்ல உயர்வு வேண்டுமானால் 4266 மற்றும் 4277 என்ற புள்ளிகளை கடக்கவேண்டும் அப்படி கடந்தால் அடுத்து 4300 TO 4310 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் மேலும் 4230 என்ற புள்ளியை கடந்தால் அடுத்து 4370 என்ற புள்ளியை நோக்கி நகரும், மற்றும் இந்த 4370 என்ற புள்ளி இன்றைக்கு முக்கியமானது இந்த புள்ளியை நிபிட்டி நல்ல சக்தியுடன் கடக்கும் சூழ்நிலை வருமானால் அடுத்த நேரிடையான இலக்காக 4480 என்ற புள்ளி இருக்கும்,

அதே நேரம் 4216 என்ற புள்ளிக்கு மேல் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் 4205 TO 4200 என்ற புள்ளிகளுக்கு கீழ் 4137 என்ற புள்ளியை அடையும் வாய்ப்புகள் NIFTY க்கு உள்ளது ஆனால் இந்த வீழ்ச்சி மிகவும் மெதுவாக FLAT மற்றும் VOLATILE என்ற முறையில் தான் வரும் என்ற சூழ்நிலைகள் வரைபடங்களில் தெரிகிறது, ஆகவே இந்த 4200 TO 4137 என்ற புள்ளிகள் சற்று TENSION மிகுந்த நிலையில் இருக்குமோ என்று தோன்றுகிறது, பொறுத்து இருந்து பார்ப்போம்....

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4237 TARGET 4249, 4254, 4266, 4300 TO 4310, 4324 TO 328, 4369 TO 370, 4484

NIFTY SPOT BELOW 4216 TARGET 4205, 4197 TO 4193, 4186, 4157 TO 4151, 4144 TO 4136, 4114, 4100, 4062

கவனிக்க வேண்டிய பங்குகள்

LUPIN

இந்த பங்கை 905 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 915, 920, 930, 946, 965, 980, இதன் S/L 892

MARUTI

இந்த பங்கை 1160 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 1170, 1178, 1186, 1197, 1210, 1230, S/L 1131 கண்டிப்பாக S/L ஐ கடை பிடியுங்கள், எந்தப்பக்கம் வேண்டுமானாலும் செல்லும் சந்தையில் நாம் இருக்கின்றோம் என்பதை தயவு கூர்ந்து மனதில் கொள்ளுங்கள்