Thursday

NIFTY ON THURSDAY

16-07-09

அமெரிக்க சந்தைகளின் உற்சாகம் ஆசிய சந்தைகளின் தொடக்கங்களில் தென்பட்டாலும் தொடர்ந்து முன்னேற முடியாமல் மேலும் கீழும் ஆடி வருகிறது, மேலும் இவைகளின் முக்கியமான RESISTANCE புள்ளிகளை கீழே கொடுத்துள்ளேன் இந்த புள்ளிகளை எல்லாம் நல்ல சக்தியுடன் கடக்கும் சூழ்நிலை வந்தால் உலக சந்தைகள் தொடர்ந்து முன்னேற முயற்சி செய்யும் அதே நேரம் முடியாமல் திணறினாள் வீழ்ச்சிகள் திடீரென வரலாம் எதற்கும் தயாராக இருங்கள்,

உலக சந்தைகளின் போக்கை பின்பற்றி SINGAPORE NIFTYயும் தொடக்கத்தில் 85 புள்ளிகள் உடன் தொடங்கி தொடர்ந்து உயர முடியாமல் தற்பொழுது 53 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் நடந்து வருகிறது அந்த வகைகள் பார்க்கும் போது நமது NIFTY க்கு 4270, 4310 TO 4327 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது, ஒரு விஷயம் மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும், இறக்கம் வரும் என்ற சூழ்நிலையில் நல்ல சக்தியற்ற உயர்வுகள் வந்தால் நான் கண்ணை மூடிக்கொண்டு ஒரு விஷயம் செய்வேன் அதாவது அடுத்து சரியான நல்ல சக்தியுடன் கூடிய வாய்ப்புக்காக காத்து இருப்பேன், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?, புதிய நிலை எடுப்பதும் பழைய நிலைகளில் தொடர்ந்து லாபம் பார்க்காமல் இருப்பதும் யோசிக்க வேண்டிய விசயங்களில் ஒன்று

நேற்றைய சந்தை நாம் எதிர்பார்த்தது போல் 4146 கடந்தவுடன் 4220 நோக்கி நகர்ந்து அடுத்து நமது தடைப்புள்ளியான 4250 க்கு சென்று சற்றேறக்குறைய அதே நிலையில் முடிவடைந்தது, மேலும் நேற்றைய உயர்வு முழுக்க முழுக்க உலக சந்தைகளின் தாக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது என்றே கருதுகிறேன், ஆகவே நமது சந்தைகளின் நிலையை பார்க்கும் முன் உலக முக்கியமான சந்தைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை மிக சுருக்கமாக பார்ப்போம்,

அதாவது DOW JONES 8600 என்ற புள்ளியை கடந்தால் தான் தொடர்ந்து உயர்வுகள் அங்கு சாத்தியப்படும், ஆசிய சந்தையான NIKKEI ஐ பொறுத்தவரை 9500, 9550, 9600 இந்த புள்ளிகளை கடந்தால் தான் உயர்வுகள் தொடரும், அடுத்து HANG SENG ஐ பொறுத்த வரை 18770, 18900, 19000 இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் மேற்க்கொண்டு இருக்கும், அதே நேரம் இவை அனைத்தும் தற்பொழுது இந்த புள்ளிகளின் அருகே இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம், மேலும் இந்த புள்ளிகளை கடந்து இவைகள் உயர முற்ப்பட்டால் நாமும் விதி விலக்கல்ல அவர்களை தொடருவோம், அதே நேரம் இவைகள் தடைகளை மேற்க்கொண்டு இறங்க ஆரம்பித்தால் நாமும் அப்படித்தானே,ஆகவே உலக சந்தைகள் எந்தப்பக்கம் போகலாம் என்று தவிக்கும் இந்த சூழ்நிலையில் முடிவுகளை பாதுகாப்பாக எடுப்பதே சிறந்தது,

சரி TECHNICAL ஆக நமது NIFTY யின் நிலை என்ன என்று பார்ப்போம் கீழே ஒரு படம் கொடுத்துள்ளேன் பாருங்கள் இந்த படத்தில் NIFTY 4220 என்ற முக்கியமான தடையை உலக சந்தைகளின் உதவியினால் எளிதாக கடந்து அதற்க்கு மேல் முடிவடைந்துள்ளது, ஆகவே அடுத்து FIBONACCI அளவுகளின் படி 4270, 4310, 4380, 4400, 4427 TO 4430 இந்த புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம் மேலும் இதில் TREND LINE RESISTANCE மற்றும் 61.8% தடைகள் முக்கியமானது அதாவது 4380 TO 4400,இந்த நிலைகளுக்கு மேல் போக வாய்ப்புகள் இல்லையோ என்று என் மனது உறுத்திக்கொண்டு உள்ளது நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதுபடி செய்யுங்கள்

NIFTY CHART


NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4277 என்ற புள்ளியை கடந்தால் மேலே உயர்வுகள் தொடரும் மேலும் அடுத்து வரும் ஒவ்வொரு புள்ளிகளும் நல்ல தடைகளையும் FLAT மற்றும் அதிகமான VOLATILE என்ற நிலையை உருவாக்கும் சூழ்நிலைகளும் வரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது, மேலும் NIFTY கீழே இறங்க வேண்டும் என்றால் 4230 என்ற புள்ளியை கடக்கவேண்டும் என்றாலும் அருகருகே SUPPORT இருப்பதால் 4178 என்ற புள்ளியை கடந்தால் கொஞ்சம் விரைவான வீழ்ச்சியும் அதை அடுத்து 4043 என்ற புள்ளிக்கு கீழ் சற்று அதிகமான வீழ்ச்சியும் இருக்கும் வாய்ப்புகளும் தெரிகிறது...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4267 TO 4277 TARGET 4320 TO 4327, 4333, 4358 TO 360, 4365, 4381, 4400, 4420, 4437 TO 4444 - 446

NIFTY SPOT BELOW 4230 TARGET 4226, 4210, 4198 TO 4185, 4178*, 4153, 4145 TO 4138 - 131, 4110 TO 4097, 4060, 4054 TO 4043*, 4003, 3987 TO 980, 3970 TO 3947

கவனிக்க வேண்டிய பங்குகள்

ACC

815 என்ற புள்ளிக்கு மேல் இந்த பங்கை வாங்கலாம் இதன் இலக்காக 825, 840, 860, S/L 806

HERO HONDA

இந்த பங்கில் அதன் CHART அமைப்புகள் மேலும் உயர்வுக்கு உறுதி செய்வதால்1489 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இதன் இலக்கு 1508, 1518, 1525, 1560, 1585 அல்லது 1525 என்ற புள்ளிக்கு மேல் வாங்கினால் விரைவான உயர்வுகள் இருக்கும்