Monday

NIFTY ON MONDAY

27-07-09

அமெரிக்க சந்தைகளின் வெள்ளியன்றைய முடிவின் வெளிப்பாடாக ஆசிய சந்தைகள் உயரங்களில் உள்ளது, இருந்தாலும் அமெரிக்க சந்தைகளின் FUTURE MARKET இன் மேலும் கீழுமான ஒரு சிறிய ஆட்டம் ஆசிய சந்தைகளிலும் இதே போன்ற சிறிய ஆட்டத்தை தந்து கொண்டுள்ளது, இருந்தாலும் ஆசிய சந்தைகள் தொடர்ந்து முன்னேற முயற்சி செய்யும் வாய்ப்புகள் இருப்பதையும் கவனிக்க வேண்டும்,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY OPEN மற்றும் HIGH ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக வைத்து தொடங்கி அந்த புள்ளிகளை தொடர்ந்து மேலே கடக்க முடியாமல் மேலும் கீழும் ஆடி வருகிறது, இருந்தாலும் இன்னும் அதன் சக்தியை இழக்க வில்லை என்றே தோன்றுகிறது, அதே நேரம் உலக சந்தைகளின் வழியை அப்பட்டமாக பின் பற்றும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதினால் அந்த பக்கமும் நமது கவனம் இருக்க வேண்டியது அவசியமாகிறது,

EXPIRY வாரமாகவும், கடந்த ஒரு வாரமாக சந்தை பதற்றமான நிலையில் இருப்பதினாலும் சற்று பொறுமையாக நிலைகளை எடுக்கும் முன் யோசித்து செயல் படுங்கள் பொதிவில் சந்தை உயர்வுகளை நோக்கி இருப்பதையும் அதே நேரம் வீழ்ச்சிகள் சிறிய அளவில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளத்தையும் மனதில் கொண்டு அதற்க்கு ஏற்றார்ப்போல் கீழே வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்

NIFTY நாம் எதிர்பார்த்தது போல மேலும் தொடர்ந்து உயருவதற்கு முயற்சி செய்வது உலக சந்தைகளின் வழியை பின் தொடர்ந்தே ஆகும் மேலும் DOW JONES மீண்டும் மீண்டும் அதற்க்கு சாதகமான சூழ்நிலைகளில் முடிவடைந்து வருவதும், அமெரிக்க FUTURE MARKET களின் போக்குகளால் நமது சந்தைகளில் ஒரு தெளிவற்ற போக்குகள் காணப்படுவதும் நாம் அறிந்ததே, இனி வரு தினங்களில் என்றாவது ஒரு நாள் திடீரென்று நமது சந்தைகளில் ஒரு நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது,

மேலும் தற்பொழுது NIFTY க்கு 4640 TO 4650 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கும் மேலும் 4700 என்ற புள்ளியையும் கடந்து முடிவடையும் பட்சத்தில் நாம் எதிர்பார்க்கும் நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, மேலும் தற்பொழுது F&O EXPIRY வாரமாக இருப்பது நமது சந்தைகளில் தெளிவற்ற போக்கை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரலாம், RIL RESULT சந்தையின் எதிர்பார்ப்பிற்கு கீழ் இருப்பது சற்று உறுத்தலாக உள்ளது, ஆகவே சந்தையின் தொடக்கம் உலக சந்தைகளை ஒட்டி இருந்தாலும் அதன் பிறகு ஒரு 30 நிமிடங்கள் சந்தையின் போக்குகளை கவனித்து பின் வர்த்தகம் தொடங்குவது சிறந்ததாக படுகிறது

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4575 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியம் இருந்தாலும் அருகருகே சில தடைகள் இருப்பது கடந்த சில தினங்களாக நாம் நினைத்தது போல் நடந்து வரும் VOLATILE மற்றும் FLAT MARKET ஐ இன்னும் தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தோன்றுகிறது, NIFTY 4550 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் 4394 என்ற புள்ளிகள் வரை ஒவ்வொரு 20 புள்ளிகளிலும் SUPPORT இருப்பது VOLATILE நிலைமையை நமக்கு உணர்த்துவதாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் 4394 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று விரைவாக இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, பொதுவாக நாம் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உலக சந்தைகளை அப்படியே பின் பற்றுவதால் அவர்களின் வழியையே நாம் தொடரும் வாய்ப்புகள் அதிகம் அங்கு உயர்வு என்றால் இங்கும், வீழ்ச்சி என்றாலும் அப்படியே தான்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4575 TARGET 4598, 4612, 4620 TO 4630, 4655 TO 4660, 4690, 4757

NIFTY SPOT BELOW 4550 TARGET 4523, 4497, 4472 TO 4463, 4448 TO 4442, 4411, 4400 TO 4394, 4337

கவனிக்க வேண்டிய பங்குகள்

INFOSYS

இந்த பங்கை 2035 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 2060, 2100, 2120 என்ற புள்ளிகளை கொள்ளலாம், S/L 2029

AUTO SECTOR பங்குகளில் கவனம் கொள்ளலாம், உதாரணமாக

BHARAT FORGE, MUNJAL AUTO, CLUTCH AUTO இது போன்ற பங்குகளை SHORT TERM முறையில் வாங்கலாம், விளக்கமாக வரைபடங்களுடன் விரைவில் தருகிறேன்