Friday

NIFTY ON FRIDAY

24-07-09

அமெரிக்க சந்தைகள் நல்ல முறையில் உயர்ந்து இருந்தாலும் முடிவடையும் நேரங்களில் சற்று சிறிய வீழ்ச்சியை சந்தித்து உள்ளது, மேலும் இதனை தொடர்ந்து நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET உம் தற்பொழுது சிறிய வீழ்ச்சிகளுடன் நடந்து வருவதன் தாக்கமாக தொடக்கத்தில் நல்ல உயர்வுடன் தொடங்கிய ஆசிய சந்தைகள் தற்பொழுது தொடர்ந்து முன்னேற முடியாமல் தடுமாறி வருகிறது, இருந்தாலும் அமெரிக்க FUTURE சந்தைகள் முன்னேற தொடங்கினால் ஆசிய சந்தைகளில் விரைவான மீட்ச்சிகள் இருக்கும், மேலும் ஆசிய சந்தைகளில் இன்னும் ஒரு 100 புள்ளிகளை மேலே கடந்தாலே நல்ல உயர்வுகள் அங்கு சாத்தியம்,

நாம் கடந்த தினங்களில் எதிர்பார்த்த DOW JONES இல் ஏற்படும் உயர்வு வர வர உருதிப்பட்டுக்கொண்டே இருப்பதால், ஒவ்வொரு வீழ்ச்சியிலும் நாம் நல்ல பங்குகளை பார்த்து வாங்கலாம் (நீண்ட கால முதலீட்டிற்காக), இன்றைய சந்தையை பொறுத்த வரை உலக சந்தைகளை பின் பற்றினாலும் நாம் கடந்த சில தினங்களாக VOLATILE என்ற நிலையில் இருப்பது தொடரும் என்றே தோன்றுகிறது, மொத்தத்தில் சந்தை உயர்வுகளை நோக்கி நடை போட காத்து இருக்கிறது, இருந்தாலும் அதற்க்கு முன் ஒரு CORRECTION இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது,

தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 60 புள்ளிகளை உயர்வாகவும் OPEN மாறும் HIGH என்ற நிலைகளை ஒரே புள்ளியாகவும் பெற்று OPEN செய்து தற்பொழுது தொடர்ந்து முன்னேற முடியாமல் தடுமாறி வெறும் 25 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருப்பது உலக சந்தைகளை பின் பற்றி நடந்து வருவதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் இன்றைய நமது சந்தைகளில் நேற்று போன்ற ஒரு தடுமாற்றம் காணப்படலாம் அதே நேரம் உலக சந்தைகளில் மீட்சி இருக்கும் சூழ்நிலை வந்தால் கட கட வென உயர ஆரம்பிக்கும் பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்

கீழே கொடுத்துள்ள NIFTY யின் வரை படத்தில் NIFTY சேனல் என்ற அமைப்பை BREAK செய்ய கடந்த இரண்டு மூன்று தினங்களாக முயன்று வருவதை வட்டமிட்டு காட்டியுள்ளேன், மேலும் இந்த 4620 என்ற புள்ளிகளுக்கு மேல் தொடர்ந்து நல்ல BUYING சக்தியுடன் முடிவடயுமானால் நமது சந்தைகளில் நல்ல உயர்வுகள் இருக்கும் அதாவது இந்த CHANNEL அமைப்பின் படி 5170 TO 5230 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரும் வாய்ப்புகள் இருக்கும்,

NIFTY CHART


அதே நேரம் 4620 என்ற புள்ளிக்கு மேல் 4820 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் 2252 TO 6357 என்ற புள்ளிகளுக்கு இடையேயான FIBONACCI அளவுகளில் முக்கியமான அளவான 61.8% என்ற அளவு வருவதால் இந்த புள்ளி STRONG ஆனா தடைகளை NIFTY கொடுக்கும் மேலும் இந்த புள்ளியில் இருந்து ஒரு சிறிய CORRECTION கொடுத்து மறுபடியும் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது, இதற்க்கு துணையாக உலக சந்தைகள் தொடர்ந்து முன்னேரி வருவதை நாம் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம், ஆகவே SHORT POSITION இல் இருப்பவர்கள் உங்கள் நிலைகளை முடித்துக்கொள்ளுங்கள்,

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4535 என்ற புள்ளிகளுக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகும் மேலும் தொடர்ந்து 4555, 4585, 4600 TO 4620 என்ற புள்ளிகளை நோக்கி நகரலாம். இன்று 4625 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் தொடர்ந்து உயருவதற்கான தடைகள் இருக்கும் வாய்ப்புகள் CHART களில் தெரிகிறது, இந்த புள்ளிகளை கடந்தால் உயர்வுகள் 4750, 4820 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், NIFTY இன்று கீழே வர வேண்டுமாயின் 4515 என்ற புள்ளியை கீழே கடக்க வேண்டும் மேலும் கீழ் நோக்கிய இலக்காக 4487, 4465, 4439 என்று அருகருகே சப்போர்ட் இருப்பதால், NIFTY யின் கீழே நோக்கிய நகர்வுகள் கடந்த மூன்று தினங்களாக நாம் பார்த்த FLAT WITH VOLATILE சந்தையாகவே இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4535 TARGET 4553 TO 4555, 4602, 4620 TO 623, 4765, 4820

NIFTY SPOT BELOW 4515 TARGET 4487, 4467, 4446, 4439, 4425, 4395, 4381, 4360, 4330, 4315

கவனிக்க வேண்டிய பங்குகள்

SUZLON

இந்த பங்கில் நல்ல உயர்வு இன்று வரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் தொடர்ந்து இனி வரும் நாட்களிலும் உயரும் வாய்ப்புகள் உள்ளதால் இந்த பங்கை 94 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு 98.5 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இலக்காக 106 TO 108, 114, 119 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள்

LIC HOUSING

இந்த பங்கில் 575 என்ற புள்ளி நல்ல சப்போர்ட் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளதால் இந்த புள்ளியை S/L ஆக வைத்து SWING TRADING முறையில் வாங்கலாம் இலக்காக 625, 650, 700 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம்