03-07-09
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகளின் வீழ்ச்சி ஆசிய சந்தைகளில் பிரதிபலிக்கிறது இருந்தாலும் மீள்வதற்கு ஆசிய சந்தைகள் முயற்சி செய்து வருவதும் அவைகளுக்கு உதவுவது போல அமெரிக்க FUTURE MARKET சற்று உயரங்களில் இருப்பதும் சற்று நம்பிக்கையை தருகிறது, இருந்தாலும் உலக சந்தைகள் இன்னும் சில 100 புள்ளிகளை தொடர்ந்து இழந்தால் பெரிய வீழ்ச்சிகளை சந்திக்கும் சூழ்நிலைகள் உருவாகிவிடும், ஆகவே மிகவும் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும்,
அடுத்து SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 30 புள்ளிகளை இழந்து தொடங்கி தற்பொழுது 50 புள்ளிகளுக்கு மேல் இழந்து FLAT என்ற நிலையில் நடந்து வருகிறது, இவைகளின் வெளிப்பாடாக நமது சந்தைகளில் தொடக்கத்தில் GAP DOWN இருந்தாலும் மீள முயற்சி செய்யும் அந்த முயற்சி வெற்றி பெறுமா என்பது உலக சந்தைகள் மற்றும் இங்குள்ள பெரிய ஆட்களின் கைகளில் தான் உள்ளது மொத்தத்தில் இன்றைய சந்தை தெளிவற்று இருக்கும் வேடிக்கை பார்ப்பது சிறந்தது அல்லது NIFTY இன் முக்கியமான SUPPORT புள்ளிகள் வரும்போது வாங்கி உடனே லாபம் பார்க்கலாம்...
NIFTY இல் நாம் பார்த்த 4520 என்ற இலக்கு வருமா அல்லது 4440 என்ற புள்ளியையே TOP ஆக கொண்டு தொடர்ந்து கீழ் இறங்குமா என்பது 4170 என்ற புள்ளிகளில் NIFTY எவ்வாறு செயல்படுகிறது என்பதினை பொறுத்து முடிவு செய்யலாம் அதே போல் இன்று 4413 என்ற புள்ளிக்கு மேல் தான் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் இருப்பதினாலும், TECHNICAL ஆக நான் முன்னர் சொன்ன HNS அமைப்பு 4215 என்ற புள்ளிகளை கடந்தால் வலுவிழந்து போகும் வாய்ப்புகள் இருப்பதினாலும் இனி நாம் சந்தைகளில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய எதார்த்தத்தை உணர்ந்து செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்,
மேலும் உலக சந்தைகள் இன்னும் ஒரு சில 100 புள்ளிகளை இழந்தால் தொடர்ந்து வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் தெளிவாக வரைபடங்களில் தெரிவதும் நமக்கு மேலும் எச்சரிக்கை செய்கின்றது, எது எப்படி ஆனாலும் பொருளாதார அறிக்கையை பொறுத்து தான் அடுத்த கட்ட நகர்வுகளை தெளிவாக முடிவு செய்ய முடியும், அதே நேரம் இன்று GAP DOWN OPEN இருந்தாலும் மீள்வதற்கு முயற்சி செய்யும், உலக சந்தைகள் இங்குள்ள பெரிய ஆட்கள் இவர்கள் எல்லாம் உதவி செய்தால் முயற்சி வெற்றி பெறலாம், அதே நேரம் 4215 க்கு கீழ் சென்று முயற்சி செய்தாலும் பயனிருக்காது என்று தான் நினைக்கின்றேன், மொத்தத்தில் இன்று ஒரு போராட்டமான சந்தையாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது தெளிவாக தெரிகிறது ,
NIFTY யின் 1 HOUR CHART ஐ பாருங்கள்
NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4280 TO 4270 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 4230, 4215, 4170 TO 4160 என்ற இந்த புள்ளிகள் நல்ல SUPPORT ஐ குடுக்கலாம், இந்த 4140 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் பெருமளவில் இருக்கும் அதே நேரம் 4090 என்ற புள்ளி முந்தய LOW என்ற அளவில் ஒரு SUPPORT யும் கொடுக்கும், அதே போல் 4413 என்ற புள்ளிக்கு மேல் தான் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது
NIFTY இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4413 TARGET 4445 TO 450, 4470, 4500, 4530
NIFTY SPOT BELOW 4336 TARGET 4313, 4300, 4280, 4265 TO 255,
4245 TO 4240, 4206 TO 4200, 4170, 4155, 4090, 4070, 4030
கவனிக்க வேண்டிய பங்குகள்
NTPC
இந்த பங்கை 189 என்ற புள்ளிகளுக்கு அருகில் வந்தால் வாங்கலாம் S/L 187 CLOSING BASIS இலக்காக 197, 200, 220 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள்