Monday

NIFTY ON MONDAY

13-07-09

உலக சந்தைகள் அனைத்தும் இறக்கத்தில் இருப்பதும், இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் இருந்தாலும் மீள்வதற்கு முயற்சி செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது, மேலும் முன்னர் நாம் சொன்ன சில SUPPORT புள்ளிகள் ஆசிய சந்தைகளுக்கு இன்னும் 100 , 200 புள்ளிகளில் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும், அதே நேரம் அந்த புள்ளிகளையும் கீழே கடந்தால் வீழ்ச்சிகள் வெகு விரைவாக இருக்கும்,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY யின் நிலைமை கவலை தருவதாக இருக்கிறது, தொடக்கம் முதல் கிட்ட தட்ட 60 புள்ளிகளை இழந்து வர்த்தகம் செய்வது நல்லது இல்லை அதே நேரம் இது உலக சந்தைகளின் பாதிப்பு என்பதில் சந்தேகம் இல்லை மேலும் 60 புள்ளிகளை இழந்து அப்படியே நிலை கொண்டது போல இருப்பதும் மீள்வதற்கு வாய்ப்புகள் தனக்கு இருப்பதாக SINGAPORE NIFTY சொல்வதாகவே எடுத்துக்கொள்ளலாம்,

மேலும் நாம் முன்னரே சொன்னது போல இனி வரும் நாட்களில் நமது சந்தைகள் உலக சந்தைகளை அப்பட்டமாக பின் தொடரும் வாய்ப்புகள் உள்ளது ஆகவே நமது தொடக்கம் உலக சந்தைகளை ஒட்டி இருக்கும் எது எப்படி இருந்தாலும் 3950 TO 3938, 3900 இந்த புள்ளிகள் முக்கியமானது அதிலும் 3950 TO 3938 ரொம்ப முக்கியமாக நான் கருதுகிறேன் இந்த புள்ளிகள் உடைபட வில்லை என்றால் சந்தைகளில் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் வலுப்படும்

NIFTY SPOT ஐ பொறுத்த வரை இன்று 3938 என்ற புள்ளி முக்கியமானதாக இருக்கும் மேலும் இந்த புள்ளியை கடந்தால் கீழே அடுத்து 3900 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு வரைபடங்கள் தென்படுகிறது, மேலும் கீழே கொடுத்துள்ள NIFTY இன் படத்தை பாருங்கள் அதில் அருமையான ஒரு CHANNEL அமைப்பு இருப்பதையும் அந்த அமைப்பின் BOTTOM SUPPORT LINE இல் NIFTY நேற்று தொட்டு திரும்பி இருப்பதையும் கவனியுங்கள், மேலும் இந்த SUPPORT LINE இன்று 3950 என்ற புள்ளியில் இருப்பதால் இந்த புள்ளியை NIFTY கீழே கடக்காமல் இருந்து முக்கியமான சில பங்குகள் உயரும் வாய்ப்புகளை பெறுமாயின் நமது சந்தைகளில் ஒரு சிறிய உயர்வுகள் இருக்கும்

NIFTY CHART


இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் இதற்க்கு S/L ஆக NIFTY 3938 என்ற புள்ளியை கடக்க வேண்டும் அதாவது CLOSE ஆக வேண்டும், இப்படி SUPPORT எடுத்து திரும்பினால் 4100, 4200 CALL OPTION வாங்கலாம், மேலும் இதற்க்கு துணையாக RIL இருக்கும் வாய்ப்புகள் அதன் வரைபடங்களில் தெரிகிறது, ஆனால் உலக சந்தைகள் இதற்க்கு கை கொடுக்க வேண்டும், அப்படி கொடுக்கும் என்ற சூழ்நிலை வருமாயின் அது இன்றே கூட வரலாம், அதாவது நமது சந்தை தொடங்குவதற்கு முன்னாள் உலக சந்தைகள் உயருவதற்கு முற்ப்பட்டால் போதும், பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று...

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4016 க்கு மேல் உயர்வுகள் தொடரலாம் என்றாலும் 4107 வரைக்கும் வெகு அருகருகே தடைகள் இருப்பதின் காரணமாக 4107 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சற்று அதிகமாக இருக்கும், அதே நேரம் 3999 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் வரும் வாய்ப்புகள் இருந்தாலும் 3938 என்ற புள்ளிக்கு கீழ் சற்று வேகமான வீழ்ச்சிகள் இருக்கும்,

NIFTY SPOT யின் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4107 TARGET 4123, 4166 TO 169, 4183, 4218, 4270, 4292, 4318

NIFTY SPOT BELOW (3999 TARGET 3984, 3974 TO 970, 3958 TO 954, 3941 TO 3947, 3939, ) BL 3939 TARGET 3902, 3895, 3873 TO 870, 3861, TO 3822, 3803, 3754, 3722, 3706, 3696, 3640 TO 3613

கவனிக்க வேண்டிய பங்குகள்

RELIANCE IND

இந்த பங்கில் FIBONACCI RETRACEMENT அளவுகளின் 50% SUPPORT இன் படி 1730 என்ற புள்ளி முக்கியமான SUPPORT குடுக்கலாம் மேலும் இந்த நிலயை வலு சேர்க்கும் விதமாக ஒரு CHANNEL அமைப்பும் சரியாக 1732 TO 1728 என்ற புள்ளிகளை SUPPORT ஆக கொண்டு அமைந்துள்ளதை படத்தில் குறிப்பிட்டு உள்ளேன், இந்த பங்கை 1725 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் S/L எனக்கொண்டு வாங்கலாம் இதன் இலக்கு 1913 TO 1930, 2000 TO 2080 இப்படி இருக்கலாம், அதே நேரம் 1800, 1900 CALL OPTION வாங்கலாம், இதற்க்கெல்லாம் S/L BELOW 1725 ON CLOSING BASIS

RIL CHART