06-07-09
உலகசந்தைகளின் போக்குகள் மிகவும் கவலை தருவதாக இருக்கின்றது, அமெரிக்க FUTURE MARKET நல்ல இறக்கத்துடனும் அதனை தொடர்ந்து ஆசிய சந்தைகளின் நிலையும் அதேபோல் கீழ் இறங்கியே காணப்படுகிறது, அதே நேரம் ஆசிய சந்தைகளின் INDEX கள் இன்னும் ஒரு சில 100 புள்ளிகளில் SUPPORT எடுக்கும் வாய்ப்புகள் CHART இல் இருப்பதால் அங்கு நாளின் பிற்பகுதியில் மீட்சி இருக்கலாம், அதே நேரம் அந்த புள்ளிகளையும் கடந்து கீழே செல்லும் நிலை ஏற்படுமாயின் வீழ்ச்சிகள் அங்கு பெருமளவில் இருக்கும்,
தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 45 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி அதற்க்கு மேல் போக முடியாமல் தற்பொழுது வெறும் 19 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருக்கின்றது, இது போன்ற சூழ்நிலையில் இன்று நமது நமது பட்ஜெட்.. இன்று தொடக்கத்தில் நமது சந்தையில் உலகசந்தைகளின் அடி ஒட்டி சில பதட்டம் இருக்கும் என்றே நினைக்கின்றேன், மேலும் பட்ஜெட் தொடங்கியவுடன் சூழ்நிலைகள் சந்தைக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் முண்டியடித்து உயரலாம், சூழ்நிலைகள் எதிராக இருந்தால் சொல்ல வேண்டியதில்லை இங்கு அதிர்வுகள் கடுமையாக இருக்கும் ஆனால் அனைவரும் மிகவும் உற்ச்சாகமாக பட்ஜெட்ஐ எதிர் நோக்கியுள்ளனர் அதற்க்கு ரயில்வே பட்ஜெட் விதை விதித்து இருப்பது உண்மையே,
பொருத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று, எது எப்படி இருந்தாலும் TECHNICAL ஆக 4550 ஐ மேலே கடந்து முடிவடைந்தால் உயர்வு, அதே போல் 4240 ஐ கடந்து கீழே முடிந்தால் வீழ்ச்சி, இந்த இரண்டு புள்ளிகளையும் மனதில் வைத்து அதன் சூழ்நிலைகள் வைத்து உங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள்
NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4435 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் அருகருகே தடைப்புள்ளிகள் உள்ளது மேலும் 4550 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடையும் சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் உயர்வுகள் 4770 TO 4810 என்று செல்லலாம், ஆகவே இந்த 4550 என்ற புள்ளியை கடந்தவுடன் NIFTY யின் 4700 OR 4800 CALL OPTION வாங்கலாம்
அதே நேரம் இந்த உயர்வுகள் முன்னாள் நடந்தது போல் (ELECTION RALLY) நல்ல சக்தியுடன் இருப்பதாக கணிக்க முடியவில்லை ஆகவே நீங்கள் வாங்கும் எந்த பங்கிலும் உங்கள் QUANTITY குறைவாக வாங்கிக்கொள்ளுங்கள் இந்த உயர்வுக்கு S/L ஆக 4240 என்ற புள்ளியை NIFTY கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்
அதே நேரம் 4270 TO 4240 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT புள்ளிகளாக இருக்கும் இந்த புள்ளிகள் கீழே உடைப்படுமாயின் வீழ்ச்சிகள் அதிக அளவில் இருக்கும், ஆனால் இப்பொழுதுள்ள சூழ்நிலைகள் வைத்து பார்க்கும்போது உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளது ஆகவே குறைந்த அளவான பங்குகளை வாங்கி, வரும் நாட்களில் லாபம் பார்க்கலாம் மேலும் உயர வேண்டுமானால் 4550 என்ற புள்ளியை கடந்து முடிவடையவேண்டும்,
மேலும் மற்றொரு வாய்ப்பாக சந்தை கீழே வந்தால் 4240 என்ற புள்ளிக்கு அருகில் வரும்போது வாங்கி இந்த புள்ளியை கடந்து முடிவடைந்தால் S/L ஆக வைத்து வர்த்தகம் செய்யலாம், என்னை பொருத்தவரை ஒரு உயர்வு இருக்கும் என்று தான் நினைக்கின்றேன் இருந்தாலும் எச்சரிக்கையாக இருங்கள், இன்றைக்கு பொறுத்தவரை NIFTY 4385 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது ...
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 4435 TARGET 4453, 4468, 4488 TO 4492, 4515, 4537, 4550, 4770 TO 4810
NIFTY SPOT BELOW 4388 TARGET 4350, 4320 TO 4315, 4290, 4270 TO 266, 4219 TO 215, 4175 TO 4170, 4154 TO 150, 4124
கவனிக்க வேண்டிய பங்குகள்
POWER GRID BUY ABOVE 115 TARGET 122 TO 125, S/L 114