Thursday

NIFTY ON THURSDAY

23-07-09

அமெரிக்க சந்தைகள் கலந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயரத்தில் இருக்கின்றது மேலும் DOW JONES தொடர்ந்து 8880 என்ற புள்ளியை சுற்றி சுற்றி வருவது ஒரு பெரிய உயர்வு அங்கு இனி வரும் நாட்களில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது (அதே நேரம் அதற்க்கு முன் ஒரு சிறிய CORRECTION வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது), இதன் வெளிப்பாடாக ஆசிய சந்தைகள் நல்ல முறையில் உயர்வதற்கான வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 40 புள்ளிகள் உயர்வு என்ற முறையில் தொடங்கினாலும் இதுவரை OPEN / HIGH ஒரே புள்ளியாக இருந்த நிலையில் இருந்து தற்பொழுது புதிய உயரங்களை எட்டி மேலும் கீழும் ஆடி வருவது ஒரு உயர்வு இன்று இருக்கும் வாய்ப்புகளை நமக்கு தருவதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம், அதே நேரம் 4402 என்ற புள்ளிகளுக்கு மேலேயே உயர்வுகள் வரும் வாய்ப்புகள் நமக்கு இருப்பதினால் இன்று நமது சந்தை தொடங்கும் நேரத்தில் உலக சந்தைகளின் நிலயை பொறுத்து GAP UP OPEN இருக்கும் என்றே தோன்றுகிறது

அதே நேரம் உலக சந்தைகளில் தடுமாற்றம் வந்து NIFTY 4397 மற்றும் 4380 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் மிக விரைவாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் நாம் கடந்த இரண்டு தினங்களாக கடுமையான VOLATILE என்ற வர்த்தகத்தில் இருப்பதையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்

நாம் முன்னரே பார்த்து போல நமது சந்தைகள் அப்பட்டமாக உலக சந்தைகளை பின் பற்றுவது தெளிவாக தெரிகிறது அந்த வகையில் DOW JONES தனது முக்கியமான தடைப்புள்ளியான 8880 என்ற புள்ளியை கடந்து கடந்து தொடர்ந்து அதன் அருகில் முடிந்து வருவது இனி வரும் நாட்களில் ஒரு மிகப்பெரிய உயர்வுக்கு அங்கு வழி வகுக்கும் அதாவது 11300 TO 11500 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள்,

அதே நேரம் நாம் நமது ஞாயிறு பதிவில் DOW JONES க்கு HNS அமைப்பு 8880 என்ற புள்ளியை கடந்தால் BREAK OUT ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதையும் அதே நேரம் அதிகமான INDICATOR கள் OVER BOUGHT சூழ்நிலையில் இருப்பதி காரணமாகவும் மேலும் இந்த HNS அமைப்பின் BREAK OUT ஐ RETEST செய்வதற்காகவும் 8480 TO 8380 என்ற புள்ளிகள் வரை கீழே வரலாம் என்று சொல்லி இருந்தேன், அதே போல் இப்பொழுது நடந்து வருவதால் நமது சந்தைகள் அதிக அளவு கீழ் இறங்கும் வாய்ப்புகள் இல்லையோ என்று தோன்றுகிறது,

அதாவது இங்கு 4315, 4240 என்ற புள்ளிகளின் அருகே NIFTY சப்போர்ட் எடுத்து திரும்பலாம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 4165 மற்றும் 4080 புள்ளிகள் சப்போர்ட் கொடுக்கலாம் அதே நேரம் கீழே கொடுத்துள்ள NIFTY இன படத்தில் TREND LINE SUPPORT உள்ளத்தையும் குறிப்பிட்டு உள்ளேன் மேலும் NIFTY ஒரு சேனல் அமைப்பில் நகர்ந்து வருவதையும் பாருங்கள், சரி இன்றைய தினம் சந்தை எப்படி இருக்கலாம் என்று பார்ப்போம் வாருங்கள்

NIFTY CHART



NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4402 என்ற புள்ளிகளுக்கு மேலே உயர்வுகள் சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது. மேலும் 4455 TO 4466, 4482 என்று செல்லலாம், 4500 TO 4530 என்ற புள்ளிகள் தொடர்ந்து உயருவதற்கு தடைகளை கொடுக்கும் என்றே தெரிகிறது, மேலும் கீழே வரவேண்டுமாயின் NIFTY 4397 என்ற புள்ளியை கடந்தால் போதுமானதாக இருக்கும் அதே நேரம் நேற்றைய LOW என்ற வகையில் 4380 என்ற புள்ளி சப்போர்ட் கொடுக்கலாம் இந்த புள்ளியை கடந்தால் 4350, 4315 TO 4300 என்ற அளவில் இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4402 TARGET 4410, 4420 TO 4430, 4455 TO 4466, 4482, 4510, 4531, 4547 TO 4560, 4584, 4636 TO 640

NIFTY SPOT BELOW 4397 TARGET 4380, 4350, 4330, 4321, 4309, 4294, 4289 TO 83, 4269 TO 264, 4247, 4207 TO 4198

கவனிக்க வேண்டிய பங்குகள்

PFC

இந்த பங்கை 212 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு 215 என்ற புள்ளியின் அருகில் வாங்குங்கள் இலக்காக 220, 230, 240 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள்

AXIS BANK

இந்த பங்கில் 856 என்ற புள்ளியை கடந்தால் 850 TO 849 என்ற புள்ளியில் சப்போர்ட் உள்ளது, இந்த 849 என்ற புள்ளியை கடந்தால் SHORT SELL பண்ணலாம், அப்படி இல்லாமல் இந்த புள்ளியில் சப்போர்ட் எடுத்து திரும்பினால் 849 ஐ S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இலக்காக 867, 875, 884, இதற்க்கு மேல் நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதாவது 907 TO 910, அதே நேரம் 849 க்கு கீழ் விரைவான வீழ்ச்சிகள் இருக்கும் மேலும் இலக்குகளாக 828, 817, 813, 800என்ற புள்ளிகள் இருக்கும்.

சந்தையின் போக்குகளை பொறுத்து உங்கள் வர்த்தக திசைகளை முடிவு செய்து வர்த்தகம் செய்யுங்கள்