Saturday

SUNDAY THOUGHTS

19-07-09

NIFTY 4370 என்ற முக்கியமான புள்ளியை கடந்து நிற்கும் இந்த நேரத்தில் NIFTY யின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும், தொடர்ந்து உயரவேண்டுமானால் எந்த புள்ளிகளை கடக்க வேண்டும் அல்லது மறுபடியும் நாம் முன்னர் எதிர்பார்த்த கீழ் நோக்கிய இலக்கான 3500 என்ற புள்ளிகளை நோக்கி வருவதற்கு என்ன விதமான வாய்ப்புகள் உள்ளது மேலும் தற்பொழுது அமெரிக்க சந்தையின் நிலைமை என்ன என்ற விசயங்களை வரைபடங்களுடன் பார்ப்போம்,

அதற்க்கு முன் சில முக்கியமான விசயங்களை பார்ப்போம், நேற்று நாம் எதிர்பார்த்தது போல சந்தை உயர்ந்து இருந்தாலும் முக்கியமான புள்ளியாக நாம் கருதிய 4370 என்ற புள்ளியை கடந்தவுடன் மிக விரைவான உயர்வுகள் இருந்து இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் சற்று மேலே சென்றாலும் தொடர்ந்து முன்னேற முடியாமல் தடுமாறி நின்றதை அனைவரும் கவனித்து இருக்கலாம் இருந்தாலும் 4370 க்கு மேல் முடிந்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்,

மேலும் நேற்றைய பதிவில் கொடுத்த வரைபடத்தில் ஒரு CHANNEL அமைப்பை குறிப்பிட்டு அந்த CHANNEL அமைப்பின் BOTTOM LINE ஐ சற்று கீழே கடந்து சென்று மறுபடியும் (கடந்த திங்கள் அன்று ஒரு உயர்வு இருக்கும் என்று நாம் 3950 என்ற புள்ளியின் அருகில் எதிர்பார்த்தது போல) தொடர்ந்து உயர்ந்து தற்பொழுது 4390 என்ற புள்ளியில் இருக்கின்றது, மேலும் NIFTY நேற்று நாம் எதிர்பார்த்தது போல அந்த CHANNEL TOP LINE ஐ மேலே கடந்துள்ளது,

மேலும் முன்னர் நடந்தது போல அதாவது CHANNEL BOTTOM LINE ஐ சற்று கீழே கடந்து மறுபடியும் உயர்ந்தது போல மேலே உள்ள CHANNEL TOP LINE ஐ கடந்து மறுபடியும் கீழே வருமா அல்லது தொடர்ந்து உயருமா என்ற கேள்வி தற்பொழுது நம் முன் நிற்பதையும் மனதில் கொண்டு தற்பொழுது NIFTY க்கு உள்ள தடைகள் என்ன என்ன, உயர்வதற்கான வாய்ப்புகள் என்ன என்ன, இதற்க்கு உலக சந்தையின் முக்கியமான INDEX DOW JONES எப்படி எல்லாம் வழி நடத்தலாம் என்பதினை பார்ப்போம்…

கீழே நான்கு படங்கள் கொடுத்துள்ளேன் அதில் இரண்டு நமது NIFTY யின் படம் மற்ற இரண்டு DOW JONES இன் படம், இந்த இரண்டிலும் DAY CHART மற்றும் WEEKLY CHART கொடுத்து விளக்கம் கொடுத்துள்ளேன், முதலில் NIFTY இன் நிலையை பார்ப்போம்

கீழே கொடுத்துள்ள முதல் படத்தில் NIFTY 4693 என்ற புள்ளியில் இருந்து 4143 என்ற புள்ளி வரை ஒரு பெரிய வீழ்ச்சியை சந்தித்து அங்கிருந்து நம் எதிர்பார்த்தது போல இந்த வீழ்ச்சியில் 61.8% அளவிற்கு உயர்ந்து (4143 TO 4480) மறுபடியும் 3918 என்ற புள்ளிகள் வரை கீழே வந்தது, மேலும் இந்த நிலையில் NIFTY தான் ஒரு சேனல் என்ற அமைப்பின் படி நகர்வதை நமக்கு CHART படங்களில் சுட்டிக்காட்டியது மறுபடியும் CHANNEL BOTTOM LINE ஐ தொட்டு (சற்று கீழே கடந்து – (3918) கடந்த திங்கள் பதிவில் நாம் எதிர்பார்த்தது போல ஒரு உயர்வை 3918 என்ற புள்ளியில் இருந்து சந்தித்து தற்பொழுது அந்த சேனல் அமைப்பின் TOP RESISTANCE LINE ஐ சற்று கடந்து முடிந்துள்ளது,

இவைகள் அனைத்தையும் கீழே உள்ள முதல் படத்தில் குறிப்பிட்டு உள்ளேன், மேலும் வெள்ளியன்றைய பதிவில் சேனல் BOTTOM LINE ஐ சற்று கீழே கடந்தது போல மேலே உள்ள TOP LINE ஐ கடந்து கீழே வருமா, அல்லது கடந்து விரைவாக உயருமா என்று ஒரு கேள்வியை எழுப்பி இருந்தோம் மேலும் அந்த சேனல் TOP LINE RESISTANCE 4370 என்ற புள்ளியில் இருப்பதையும், மேலும் அந்த புள்ளியை கடந்தால் விரைவான உயர்வு அன்றைய தினமே 4484 என்ற புள்ளியை நோக்கி இருக்கும் என்றும் பார்த்தோம்

ஆனால் அந்த 4370 என்ற புள்ளியை கடந்து மேலும் 20 புள்ளிகளை உயரே கடந்து இருந்தாலும் தொடர்ந்து விரைவாக ஏறுவதற்கு RELIANCE IND உதவாததினால் தொடர்ந்து முன்னேற முடியாமல் திணறி நின்றது, ஆனால் இந்த புள்ளியை கடந்தவுடன் பெரிய அளவில் முன்னேறி இருக்க வேண்டும் அப்படி செய்யாதது சற்று உறுத்தலாக தோன்றுகிறது, இருந்தாலும் 4370 க்கு மேல் முடிந்து இருப்பதையும் கவனித்தாக வேண்டும், இந்த உறுத்தலை மேலும் உறுதி செய்யும் விதமாக NIFTY க்கு வெகு அருகருகே இப்பொழுது இரண்டு விதமான FIBONACCI RETRACEMENT தடைகளும் சில TOPS எனப்படும் தடைகளும் உள்ளது அவைகளைப்பற்றி பார்ப்போம்

முதல் FIBONACCI தடை 1 : தற்பொழுது உள்ள LOW புள்ளியான 3918 இல் இருந்து இதற்க்கு முன் உள்ள HIGH புள்ளியான 4693 வரைக்கும் அளக்கப்பட்ட FIBONACCI அளவுகளின் படி 61.8% அளவு சரியாக 4398 என்ற புள்ளியில் தடையை கொடுக்கலாம்,

இரண்டாவது FIBONACCI தடை 2 : அதே போல் 3918 என்ற புள்ளியில் இருந்து 4480 என்ற (06-07-09) HIGH புள்ளி வரை அளக்கப்பட்ட FIBONACCI அளவுகளின் படி 85.4% என்ற அளவு சரியாக 4400 என்ற புள்ளியில் தடைகளை கொடுக்கலாம்

ஆக இந்த இரண்டு தடைகளும் சரியாக 4400 என்ற புள்ளியின் அருகில் இருப்பதை கவனிக்க வேண்டும், அடுத்து இந்த புள்ளியை NIFTY கடந்தால் அடுத்த தடை 4480 என்ற புள்ளியில் முன்னர் வந்த TOP RESISTANCE என்ற வகையில் தடையை தரலாம், மேலும் இந்த 4480 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து 4520 TO 4540 என்ற புள்ளிகளில் FIBONACCI அளவுகளின் படி அடுத்த தடையை சந்திக்கலாம் (இந்த புள்ளிகளை கடந்தாலே தற்பொழுது வரும் என்று எதிர்பார்க்கும் 3500 ஐ நோக்கிய CORRECTION இல்லாமல் போகும், அதே நேரம் 4693 TO 4700 என்ற புள்ளியை கடந்தால் முற்றிலும் இந்த வாய்ப்புகள் உருக்குலைந்து போகும்)

ஆகவே இந்த 4700 என்ற புள்ளியை கடந்தால் மேலும் தொடர்ந்து உயருவதற்கான வாய்ப்புகளும் நன்றாக உருவாக்கி விடும், அதே நேரம் 4200 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரலாம் மேலும் இந்த படத்தில் NIFTY CHANNEL அமைப்பின் SUPPORT மற்றும் RESISTANCE கோடுகளை இரண்டு பக்கங்களிலும் கடந்து இருப்பதை குறிப்பிட்டுள்ளேன் இப்பொழுது முதல் படத்தை பாருங்கள்


NIFTY CHART


அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள NIFTY யின் WEEKLY CHART இன் படி பார்க்கும் போது ஒரு வேளை NIFTY 4700 என்ற புள்ளியை மேலே கடந்தால் அதன் அடுத்த இலக்கு கடந்த வருடம் உண்டான LOW புள்ளியான 2252 இல் இருந்து NIFTY யின் LIFE HIGH புள்ளியான 6357 என்ற புள்ளி வரை அளக்கப்பட்ட FIBONACCI அளவுகளின் படி 61.8% அளவு சரியாக 4820 என்ற புள்ளியில் வருவதால் இந்த புள்ளியில் தடைகளை சந்திக்கலாம் இந்த புள்ளியையும் மேலே கடந்து தொடர்ந்து நல்ல BUYING PRESSURE வருமானால் NIFTY க்கு புதிய இலக்குகள் காத்து இருப்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதாவது 7000 புள்ளிகளுக்கு மேல் சென்றுவிடும் சரி NIFTY WEEKLY CHART படத்தை பாருங்கள்...

NIFTY WEEKLY CHART


சரி தற்பொழுது இறங்கு முகத்தில் இருந்து கொண்டிருந்த அனைத்து சந்தைகளும் திரும்பி ஏறு முகத்தில் இருப்பதிற்கு முக்கிய காரணமாக விளங்கியது அமெரிக்க சந்தைகள் தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் அமெரிக்க சந்தைகளின் முக்கியமான INDEX ஆனா DOW JONES இன் நிலையை பற்றி பார்ப்போம்,

கீழே கொடுத்துள்ள DOW JONES படத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதுவரை 8600 TO 8650 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளை கொடுத்து வந்தது மேலும் சில தினங்களுக்கு முன் DOW JONES இந்த புள்ளிகளை நல்ல முறையில் மேலே கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது, இருந்தாலும் இன்னும் சில முக்கியமான புள்ளிகள் DOW JONES க்கு தடைகளை கொடுக்கலாம் என்ற நிலையில் எஞ்சி இருக்கிறது, அந்த வகையில் DOW JONES க்கு தடைகளை கொடுக்கும் புள்ளிகள் எவை, மேலும் DOW JONES தற்போதைய நிலையில் இருந்து அதன் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்,

கீழே உள்ள படத்தில் முன்னர் நாம் NIFTYக்கு பார்த்த FIBONACCI தடைகளைப்போல் இரண்டு விதமான தடைகள் இங்கும் உள்ளது அதாவது தற்பொழுது DOW வில் ஏற்ப்பட்ட LOW புள்ளியான 8087 இருந்து இதற்க்கு முன் ஏற்ப்பட்ட HIGH புள்ளியான 8877 வரைக்கும் அளக்கப்பட்ட FIBONACCI அளவுகளின் படி 85.4% அளவுள்ள தடைப்புள்ளி சரியாக 8763லும், அனுபவத்திலும் DOW JONES அடிக்கடி இந்த 89% அளவிலும் தடைகளையும் SUPPORT களையும் பெற்றிருப்பதால் அந்த முறையில் மேலே உள்ள புள்ளிகளின் அளவுகளிலே அளக்கப்பட்ட 89% அளவு சரியாக 8798 என்ற புள்ளியிலும் தடைகளை கொடுக்கலாம், மேலும் 200 DEMA தற்பொழுது 8805 என்ற புள்ளியிலும் தடைகளை கொடுக்கலாம்,

இந்த புள்ளிகளை எல்லாம் கடந்தால் அடுத்து ஒரு நீண்ட TREND LINE RESISTANCE8840 என்ற புள்ளியிலும், முன்னர் உள்ள HIGH புள்ளியான 8880 என்ற புள்ளி TOP RESISTANCE என்ற முறையில் தடைகளை கொடுக்கும், இந்த புள்ளிகளை எல்லாம் நல்ல சக்தியுடன் கடந்து தொடர்ந்து அதற்க்கு மேலே முடியும் சூழ்நிலைகள் வருமாயின் DOW JONES நல்ல உயரங்களை எட்டும் வாய்ப்புகள் உள்ளது அதாவது 11300 TO 11500 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரும் வாய்ப்புகள் உள்ளது, இந்த வாய்ப்புகள் எப்படி வரும் அதற்க்கு துணை புரியும் அமைப்பு என்ன என்பதை இரண்டாவது படத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன், இப்பொழுது முதல் படத்தை பாருங்கள்


DOW JONES CHART



முதல் படத்தில் காட்டியது போல 8763, 8798, 8805, 8840, 8880 என்ற புள்ளிகள் எல்லாம் நல்ல தடைகளை கொடுக்கும் என்பதை பார்த்து இருப்பீர்கள் இதில் முக்கியமானது 8805 என்ற புள்ளியாகும் இந்த புள்ளியை கடந்தாலே கீழே 7400என்ற புள்ளியை நோக்கி வரும் என்ற சூழ்நிலைகள் நம்பிக்கையற்று போய்விடும் அதே நேரம் 8880 என்ற புள்ளியை கடந்து விட்டால் மிகப்பெரிய உயரங்களை நோக்கி நகர வேண்டும் என்ற கட்டாயத்திக்கு ஆளாகியும் மேலும் கீழே இறங்க வேண்டும் என்ற நிலையும் முற்றிலும் உருக்குலைந்து விடும், மேலும் உயர்வாக11300 TO 11500 என்ற புள்ளிகளை நோக்கி நகர வேண்டும் என்ற சூழ்நிலையும் வந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாகும்,

சரி தற்ப்பொழுது கீழே உள்ள படத்தில் DOW JONES க்கு ஒரு பெரிய HEAD & SHOULDER அமைப்பு இருப்பதை குறிப்பிட்டு உள்ளேன் இந்த அமைப்பின் படி DOW JONES 8840 மற்றும் 8880 என்ற புள்ளியை கடந்தால் HNS என்ற அமைப்பின் BREAK OUT என்ற நிலையை பெற்று இலக்காக 11300 TO 11500 என்ற புள்ளியை அடைய வேண்டும், அதாவது முதல் இலக்காக 9650 TO 9700 என்ற புள்ளியையும் இரண்டாவது இலக்காக 10620 என்ற புள்ளியையும் அடுத்து இந்த HNS அமைப்பின் படி இறுதி இலக்காக 11300 TO 11500 என்ற புள்ளிகளை அடைய வேண்டும்,

ஆகவே தற்பொழுது 8763, 8798, 8805 என்ற புள்ளிகள் முக்கியமானது அதாவது இனி தொடர்ந்து இறங்குவதற்கு வாய்ப்புகள் உண்டா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்யும் புள்ளிகள் இந்த மூன்றும், இந்த புள்ளிகளை மேலே கடந்தால் இறங்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகலாம், அதே நேரம் இந்த புள்ளிகளை கடக்க முடியாமலோ அல்லது கடந்தாலும் 8880 என்ற புள்ளியை கடக்காமல் மேலும் 8805 என்ற புள்ளிக்கு மேலே முடிவடயாமலும் இருந்தால் இறங்குவதற்கான வாய்ப்புகள் இன்னும் தொத்திக்கொண்டுள்ளதாக நாம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகளை கொடுக்கும்,

மேலும் தொடர்ந்து புதிய உயரங்களை எட்ட வேண்டுமானால் 8880 என்ற புள்ளியை கடந்து நல்ல BUYING PERSSURE இருக்கும் சூழ்நிலைகள் உருவானால் நாம் முன்னர் பார்த்த உயரங்கள் சாத்தியமாகலாம், 8880 என்ற புள்ளியை கடந்த பின் RE TEST செய்வதற்காகவும் அல்லது CONSOLIDATION க்காகவும் 8480 TO 8380என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வரவும் வாய்ப்புகள் உள்ளது.. சரி நான் சொன்ன அனைத்து விசயங்களையும் CHART இல் குறிப்பிட்டு உள்ளேன் பாருங்கள்


DOW JONES WEEKLY CHART



சரி அனைத்து விசயங்களையும் பார்த்தாகி விட்டது, தற்பொழுது இறுதியாக சில விசயங்களை கோர்த்து பார்த்து விடுவோம்

நமது NIFTY தொடர்ந்து உயர வேண்டுமானால் :-

NIFTY 4480 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்து அதே நேரம் உலக சந்தைகளில் முக்கியமான INDEX ஆனா DOW JONES 8840, மற்றும் 8880 என்ற புள்ளிகளை கடந்தால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும் மேலும் 4695, 4820 என்ற புள்ளி NIFTY க்கு முக்கியமான தடையை கொடுக்கலாம் ஆகவே இந்த4820 என்ற புள்ளியையும் கடந்தால் சொல்லிக்கொள்ளும் படியான உயரங்கள் அதாவது புதிய உயரங்களை எட்டலாம், அந்த வகையில் NIFTY 4480, 4695, 4820என்ற புள்ளிகளை உயருவதற்கு கடக்க வேண்டும் கூடவே DOW JONES 8880 என்ற புள்ளியை கடக்க வேண்டும்...

நமது NIFTY கீழே வரவேண்டுமானால் :-

NIFTY 4400 என்ற புள்ளியை மேலே கடக்காமல் இருக்க வேண்டும் அப்படியே கடந்தாலும் கண்டிப்பாக 4480 என்ற புள்ளியை கடக்காமலும் அதே நேரம் 4400என்ற புள்ளிக்கு மேல் தொடர்ந்தார்ப்போல் இரண்டு மூன்று நாட்கள் நல்ல POSITIVE நிலையில் முடிவடையக்கூடாது, அதே நேரம் உலக சந்தைகளும் முக்கியமாக DOW JONES 8805 க்கு மேல் முடிவடயாமலும் குறிப்பாக 8880 என்ற புள்ளியை கடக்காமலும் இருத்தல் வேண்டும்,

மேலும் இறங்குவதற்கான முன்னேர்ப்பாடாக NIFTY குறைந்தது 4200 என்ற புள்ளியின் கீழே முடிவடைய முயற்சி செய்ய வேண்டும், ஆகவே இந்த இரண்டு நிலைகளில் எது நடக்கின்றதோ அதன் வெளிப்பாடாக உயர்வோ அல்லது வீழ்ச்சியோ சந்தைகளில் இருக்கும், இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதை விட இவைகள் நடந்தால் அதன் விளைவுகள் இப்படி இருக்கலாம் என்று கூறுவது நல்லதாகப்பட்டதினால் இப்படி சொல்ல வேண்டியுள்ளது, நான் கூறியது முழுவதும் எனது சொந்த கருத்து தான் தாங்களுக்கு ஏதும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தாராளமாக உங்கள கருத்துகளை தெரிவியுங்கள்