Tuesday

NIFTY ON TUESDAY

28-07-09

அமெரிக்க சந்தைகள் கீழே வீழ்ந்து மறுபடியும் முன்னேறி FLAT என்ற நிலையில் முடிந்துள்ளது, அனால் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் நடந்து வருவதின் தாக்கமாக ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் உள்ளது இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டம் அதிகமாக உள்ளது,

இவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 55 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கி OPEN மற்றும் HIGH ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு தொடர்ந்து HIGH புள்ளியை உடைத்து முன்னேற முடியாமல் தற்பொழுது 10 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் இருப்பது நமது சந்தைகள் இந்த EXPIRY யில் என்ன பாடு படப்போகிறதோ தெரியவில்லை, தொடர்ந்து நடந்து வரும் VOLATILE மற்றும் FLAT MARKET இன்றும் தொடரும் என்றே சொல்ல தோனுகிறது, எச்சரிக்கையாக வர்த்தகம் செய்யுங்கள் கண்டிப்பாக தின வர்த்தகம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, ஏனெனில் இரண்டு பக்கமும் S/L HIT ஆகும் வாய்ப்புகள் அதிகம்

NIFTY 1 HR CHART இல் INVERTED HEAD & SHOULDER அமைப்பை உருவாக்கி வருவது என்னமோ உண்மை தான் இருந்தாலும் அதற்கான உறுதிகள் இன்னும் கிடைக்காமல் இருப்பது ஒரு சிறிய வீழ்ச்சிகள் இருக்கும் அறிகுறிகளை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம், அதே நேரம் இது EXPIRY வாரமாக இருப்பதினால், எது எப்படி நகரும் என்று கணிப்பது தவறாகவே முடியும், ஆகவே கீழே கொடுத்துள்ள CHART இன் படி NIFTY SPOT க்கு 4610 TO 4640 என்ற புள்ளிகளுக்கிடையே அநேக தடைகள் இருப்பதினால் தொடர்ந்து முன்னேற வேண்டுமானால் இந்த 4640 என்ற புள்ளியை கடந்து அடுத்துள்ள 4700 என்ற தடையையும் உடைத்தால் மட்டுமே சாத்தியம், அது வரைக்கும் பொறுமையாக இருப்பது நன்று அல்லது 4460, 4360 TO 4340 என்ற புள்ளிகள் வரும்பொழுது அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கலாம், அதுவரை பொறுமையாக இருப்பதே நன்று

NIFTY CHART


NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4576 என்ற புள்ளிக்கு மேலே உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 4630 மற்றும் 4640 என்ற புள்ளிகளுக்கு மேல் தான் உயர்வுகள் விரைவாக இருக்கும், அதே போல் 4570 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் வெகு அருகருகே SUPPORT இருப்பதனால் நேற்று நாம் சந்தித்த அதே நிலைமை தான் தொடரும் மேலும் 4470 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கீழே கடக்கும் பட்சத்தில் வீழ்ச்சிகள் விரைவாக இருக்கும், என்னை பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் தின வர்த்தகத்தை தவிர்த்தல் நலமாகும்.

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4576 TARGET 4586, 4596, 4602 TO 610, 4621 TO 4630, 4640, 4680, 4695, 4750

NIFTY SPOT BELOW 4562 TARGET 4547 TO 4532, 4529 TO 4510, 4505 TO 4498, 4483 TO 4470, 4436 TO 4434

கவனிக்க வேண்டிய பங்குகள்

MARUTI

இந்த பங்கில் தொடர்ந்து ஏற்ப்பட்ட உயர்வுகளின் காரணமாக PROFIT BOOKING வரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் 1358 க்கு கீழ் வீழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் RISK எடுப்பவர்கள் மட்டும் (F&O STOCK, F&O EXPIRY, எது வேண்டுமானாலும் நடக்கலாம்) 1358 க்கு கீழ் SHORT SELL பண்ணலாம் இலக்காக1348, 1318, 1305, 1294, 1281 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள், S/L 1370 OR 1380

F&O EXPIRY வாரங்களில் இரண்டு பக்கங்களிலும் S/L HIT ஆகும் வாய்ப்புகள் எப்பொழுதும் அதிகமாக இருக்கும்