Friday

NIFTY ON FRIDAY


10-07-09

அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள் FLAT என்ற நிலையில் முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் இருப்பது ஆசிய சந்தைகளில் வெளிப்படுகிறது அதே நேரம் ஆசிய சந்தைகள் நாம் முன்னர் பார்த்த முக்கியமான புள்ளிகளை கடந்து கீழே இருப்பதும் ஒரு காரணம் , ஆசிய சந்தைகள் SUPPORT எடுக்க இன்னும் கொஞ்சம் கீழே வரவேண்டும்…

மேலும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை சற்று உயர்ந்து தொடங்கி இருந்தாலும் அதற்க்கு மேல் போக முடியாமல் திணறி தற்பொழுது சில புள்ளிகளை இழந்து கீழே நடந்து வருவது நமது சந்தைகளில் உயர்வுகள் ஏற்படுவதற்கு இருக்கும் தடைகளையும், VOLATILE என்ற மேடுபள்ளமான சந்தைகள் இருப்பதற்கான வாய்ப்புகளையும் நமக்கு தெரிவிப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது, இந்த முழு CORRECTION முடியும் வரை இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது, பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று

சந்தைகள் நேற்று நாம் எதிர்பார்த்தது போல 4116 TO 4030 என்ற புள்ளிகளின் இடையே எப்படி எல்லாம் நம்மை வதைத்து எடுத்தது என்று நீங்கள் அனைவரும் அறிந்து இருப்பீர்கள், இது தொடரும் என்றே தோன்றுகிறது, மேலும் இன்று INFOSYS RESULT என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் இதில் அனுமானத்திற்கு வேலை இல்லை,

உலக சந்தைகள் எல்லாம் கீழே வருவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டது உதாரணமாக DOW JONES 7400 TO 7300 என்ற புள்ளிகள் வரை கீழே வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து விட்டது, மேலும் 8030 என்ற புள்ளியை கீழே கடந்து தொடர்ந்து முடிவடைந்தால் போதும் அங்கு பதட்டமாகவே இருக்கும், அதே நேரம் உலக சந்தைகளை அனைத்திலும் இதே நிலை இருப்பது தெளிவாக இருந்தாலும் வீழ்ச்சிகள் தள்ளிப்போகிறது என்றால் ஏதோ விசய்த்திக்காக பெரிய கைகள் காத்து இருப்பது போல தெரிகிறது, மேலும் TECHNICAL ஆகவும் இந்த முழு CORRECTION ம் விரைவாக வருவதற்கு வாய்ப்புகளை கொடுக்காது என்றும் தோன்றுகிறது, மெல்ல மெல்ல வீழ்ச்சிகள் நடப்பது தெரியாமலேயே வரும் என்று தான் என்ன வேண்டியுள்ளது, அதே நேரம் உயர்வுகள் சில புள்ளிகளை கடந்தால் எதிர்பார்க்காத நேரத்தில் இருக்கும்,

NIFTY ஐ பொறுத்தவரை 4100 க்கு மேலே உயரும் வாய்ப்புகள் இருந்தபோதும் 4145 என்ற புள்ளியை கடந்தால் விரைவான உயர்வுகள் இருக்கும் அந்த வகையில் நாம் கவனிக்க வேண்டிய புள்ளி 4145, மேலும் NIFTY கீழே இறங்க வேண்டுமாயின் 4072 என்ற புள்ளியை கடக்க வேண்டும் மேலும் விரைவான வீழ்ச்சிகள் வேண்டுமாயின் 3975 என்ற புள்ளியை கடக்க வேண்டும், ஆகவே இந்த 4145 TO 3975 என்ற புள்ளிகளின் இடையே ஆடவும் செய்யலாம் ஏதாவது ஒரு புள்ளியை கடந்தால் நகர்வுகள் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4100 TARGET 4110, 4116, 4130, 4145, 4175, 4208 TO 210, 4216 TO 217, 4230, 4278 TO 280, 4334, 4361

NIFTY SPOT BELOW 4072 TARGET 4061, 4050, 4041 4029, 4012, 3998, 3984, 3975, 3935, TO 3926, 3896, 3878, 3863, 3852

கவனிக்க வேண்டிய பங்குகள்

SESAGOA

இந்த பங்கில் உயர்வுகள் சாத்தியப்படும் அளவிற்கு CHART அமைப்புகள் உருவாக்கி வருகிறது, மேலும் 175 என்ற புள்ளியின் சுற்று வட்டாரங்களில் அநேக BOTTOMS எனப்படும் SUPPORT களை பெற்று மீண்டு மீண்டு வருகிறது, ஆகவே 200 TO 202 என்ற புள்ளியை நல்ல VOLUME உடன் கடந்தால் வாங்கலாம் அல்லது 175 என்ற புள்ளியின் அருகே வந்தாலும் வாங்கலாம் S/L 174 CLOSING BASIS இதன் இலக்காக 220 TO 225 என்ற புள்ளிகள் இருக்கும்

SESAGOA CHART



ESSAR OIL

இந்த பங்கு தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வந்தது, நேற்றைய தினம் முன்னர் ஏற்ப்பட்ட உயர்வுகளில் 61.8% க்கு அருகில் வந்து நல்ல VOLUME உடன் திரும்பியுள்ளது, ஆகவே இந்த பங்கை 106 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இதன் இலக்கு 134, 145, 149 என்று இருக்கும், மேலும் 124 TO 125 க்கு மேல் தின வர்த்தகத்த்டிற்கு பயன் படும்படி உயர்வுகளும் இருக்கலாம், அப்படி வாங்கினால் 121 TO 120 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள் 120 க்கு கீழ் 110 TO 108 என்ற புள்ளியை நோக்கி வரும், அப்படி வந்தாலும் வாங்கலாம் இதன் S/L 106 ON CLOSING BASIS

ESSAR OIL CHART


CENTURY TEX இல் நல்ல VOLUME நடந்து வருகிறது 437 க்கு மேல் 450 என்ற புள்ளியை நோக்கி செல்லும் 450 க்கு மேல் 488, 500 என்று செல்லும் வாய்ப்புகள் உள்ளது