Thursday

NIFTY ON THURSDAY

30-07-09

அமெரிக்க சந்தைகள் ஒரு சிறிய வீழ்ச்சியுடன் முடிந்து இருந்தாலும் ஒரு பெரிய வீழ்ச்சியில் இருந்து மீண்டு சற்றேறக்குறைய சிறிய வீழ்ச்சி என்ற நிலையில் முடிந்துள்ளது, தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் FUTURE MARKET சற்று உயர்வுடன் நடந்து வருகிறது, இதன் தாக்கமாக ஆசிய சந்தைகளிலும் உயர்வுடன் கூடிய மேடு பள்ளங்கள் தெரிகிறது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY 10 புள்ளிகளை இழந்து தொடங்கி இருந்தாலும் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு நடந்து வருவதும் மேலும் அந்த புள்ளியை இன்னும் கீழே உடைக்காமல் தக்கவைத்துக்கொண்டு இருப்பதும் உயரும் வாய்ப்புகள் இருக்கலாம் என்ற என்னத்தை மேலோங்கச்செய்கிறது, அதற்க்கு துணையாக DOW JONES CHANNEL என்ற அமைப்பை சற்று கடந்துள்ளது

மேலும் DOW JONES 9160 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகள் இருப்பதால் நமது சந்தைகளும் அதற்க்கு தகுந்தார்ப்போல் நகரும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் இன்று EXPIRY தினமாக வேறு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், நேற்று நாம் எதிர்பார்த்து போல ஒரு நீண்ட VOLATILE இருந்ததை கவனித்தீர்களா, ஆகவே சற்று விழிப்புடன் இருப்பது நல்லது

NIFTY க்கு 4380 என்ற புள்ளி தற்பொழுது மிகவும் முக்கியமான SUPPORT புள்ளியாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் உயர்வதற்கு 4615 என்ற புள்ளியை கடந்து 4640 என்ற புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் மட்டுமே சாத்தியம், அப்படி ஏற்ப்பட்டால் ஒரு நல்ல உயர்வுகள் இருக்கும் அதே நேரம் NFITY யின் PE RATIO 20.5 TO 20 என்ற புள்ளிகளில் ஆடிக்கொண்டு இருப்பது இரண்டு பக்கங்களுக்கும் (BULL & BEAR )வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது,

இருந்தாலும் முக்கியமான INDICATOR ஆனா RSI ஒரு முக்கியமான SUPPORT நிலையில் இருப்பதினால் மறுபடியும் 4590 TO 4630 என்ற புள்ளிகள் வரை ஒரு உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் உலக சந்தைகள் எதிராக இருந்தால் இந்த உயர்வு நடக்க வாய்ப்பில்லை நேற்று நாம் எதிர்பார்த்தது போல சந்தையில் ஒரு நீண்ட VOLATILE இருந்ததை அறிந்து இருப்பீர்கள் ஆகவே சற்று கவனமாக இருப்பது தவறில்லை

NIFTY ஐ பொறுத்தவரை இன்று 4530 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் 4557 என்ற புள்ளி வரை அருகருகே தடைகள் இருப்பதினால் 4557 என்ற புள்ளியை கடந்தால் சற்று விரைவான உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதே நேரம் உலக சந்தைகள் சாதகமாக இருந்தால் இன்று ஒரு நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது அப்படி இருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்,

அதே நேரம் NIFTY கீழே வர வேண்டுமாயின் 4500 என்ற புள்ளியை கீழே கடந்தாலே வாய்ப்புகள் உருவாகலாம் அதே நேரம் வருசயாக ஒவ்வொரு 20, 25 புள்ளிகளுக்கிடையே SUPPORT இருப்பதினால் தடுமாற்றமான வீழ்ச்சியாகவும் பதட்டமான சூழ்நிலையாகவும் இருக்கும், மேலும் இன்று EXPIRY தினமாக வேறு இருப்பதால் புதிய நிலைகள் எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது,

உயர்வுகள் ஏற்ப்பட்டால் கொஞ்சம் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகள் இருப்பதினால் உங்கள் பழைய LONG POSITION களை முடிக்கும் முன் சற்று காத்து இருந்து முடிக்கலாம் (உயர்வுகள் வரும் வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே, உயர்வுகளை தடை புள்ளிகளை வைத்து முடிவு செய்யுங்கள்),

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4557 TARGET 4590 TO 592, 4621 TO 623, 4641, 4675 TO 677, 4769

NIFTY SPOT BELOW 4484 TO 4472 TARGET 4456, 4436 TO 4428, 4414, 4378, 4349, 4284, 4254, 4234, 4163

கவனிக்க வேண்டிய பங்குகள்

HINDUSTAN UNILEVER (HUL)

இந்த பங்கில் கடந்த இரண்டு தினங்களாக தற்பொழுது உயர்ந்த உயர்வில் கிட்டத்தட்ட 89% ஐ இழந்துள்ளது, இதுபோன்ற விரைவான வீழ்ச்சிகள் EXPIRY நேரங்களில் எதிர்மறையான நகர்வுகளை கொடுக்கலாம் (தொடர்ந்து இறங்கியே ஆக வேண்டும் என்றாலும் சரி தான்), ஆகவே இந்த பங்கை 265 என்ற புள்ளியை S/L ஆக வைத்து வாங்கலாம் இலக்காக 278 TO 285 என்ற புள்ளிகள் இருக்கும் தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் இருந்தால் 301 வரைக்கும் செல்லும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 272 க்கு மேல் விரைவான உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இன்று EXPIRY தினம் கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் அல்லது தின வர்த்தகத்தை தவிர்த்து விடுங்கள்

PFC ABOVE 232 TAR 245, S/L 225