Tuesday

NIFTY ON TUESDAY

21-07-09

அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் நடந்து வருகிறது, இதன் தாக்கமாக தொடக்கத்தில் உயர்வுகளுடம் தொடங்கிய ஆசிய சந்தைகள் தற்பொழுது தொடர்ந்து உயர முடியாமல் தடுமாறி இறங்கிக்கொண்டுள்ளது,

இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் கிட்டதட்ட 40 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கினாலும் OPEN HIGH ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு தொடங்கி அதற்க்கு மேல் உயர முடியாமல் தற்பொழுது 25 புள்ளிகள் வீழ்ச்சி என்ற நிலையில் நடந்து வருவது நமது சந்தைகளில் SELLING PRESSURE வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதை நமக்கு சொல்வதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்,

மேலும் நமது NIFTY க்கு 4500 என்ற புள்ளிகளுக்கு கீழ் அடுத்த நல்ல SUPPORT 4457, 4404 என்ற புள்ளிகளில் இருப்பதினால் இந்த புள்ளிகளில் NIFTY யின் நடவடிக்கைகளை வைத்து LONG POSITION இல் கவனம் செலுத்தலாம், மேலும் 4370 என்ற புள்ளி அடுத்த மிக முக்கியமான SUPPORT நிலையாகும், இந்த நிலைகளை வைத்து உங்கள் வர்த்தகத்தை மேற்க்கொள்ளுங்கள், இன்று ஒரு VOLATILE இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது

NIFTY ஐ பொறுத்தவரை உயர்ந்து வரும் இந்த உயர்வுக்கு அடுத்த தடையாக நாம் முன்னர் பார்த்த 4511 என்ற புள்ளி FIBONACCI அளவுகளின் படி தடைகளை கொடுக்கலாம், மேலும் 4517, 4537, இந்த புள்ளிகள் TOP RESISTANCE என்ற முறையில் தடைகளை தரலாம் இந்த புள்ளிகளை கடக்கும் பட்சத்தில் உயர்வுகள் முந்தய HIGH புள்ளியான 4580, 4693 ஐ நோக்கி இருக்கும், அதே சமயம் கீழே 4500 என்ற புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சிகள் வரலாம் மேலும் 4370, 4270 என்ற புள்ளிகள் SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது

NIFTY ஐ பொறுத்த வரை இன்று 4511 என்ற புள்ளியை கடந்தால் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் 4527, 4555 TO 4558, 4576 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகள் இருப்பதினால் இந்த 4576 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து நல்ல ஒரு உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதாவது 4650 என்ற புள்ளியை நோக்கி நகரும்,

அதே சமயம் NIFTY 4500 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்வதற்கான வாய்ப்புகள் CHART இல் இருப்பதினால் 4457, 4404 என்று கீழே வரலாம் மேலும் இந்த 4404 மற்றும் 4371 என்ற புள்ளிகள் வரை சற்று FLAT மற்றும் தடுமாற்றமான சந்தையாக இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, இதனை தொடர்ந்து 4371 என்ற புள்ளியை கீழே நல்ல சக்தியுடன் கடந்தால் அடுத்து 4316 வரைக்கும் ஒரு விரைவான வீழ்ச்சிகள் இருக்கலாம்

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 4511 TARGET 4527, 4546, 4555 TO 4558, 4576, 4643 TO 650, 4662, 4676, 4690

NIFTY SPOT BELOW 4500 TARGET 4457, 4404 TO 4394, 4383, 4371, 4316, 4304, 4290 TO 4289, 4267

கவனிக்க வேண்டிய பங்குகள்

GLENMARK PHARMA

இந்த பங்கை 252 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 255 TO 256.5, என்ற புள்ளிகள் இருக்கும் மேலும் 257 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த இலக்காக 264, 269 என்ற புள்ளிகள் இருக்கும் (POSITIONAL CALL ) S/L 249

PUNJLLOYD

இந்த பங்கை 226.5 TO 227 என்ற புள்ளிகளுக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்காக 229, 232 என்ற புள்ளிகள் இருக்கும் 232 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த இலக்கு 240 TO 242 S/L 220, 220 ஐ கீழே கடந்தால் அடுத்து 214, 207 என்று கீழே வரவும் வாய்ப்புகள் உள்ளது

UNITECH

இந்த பங்கை 82 என்ற புள்ளியை S/L ஆக வைத்து வாங்கலாம் இலக்காக 86 TO 87, 89, 92, 95 என்று இருக்கும்

மேலே உள்ள அனைத்து பங்குகளும் தின வர்த்தகத்திற்காக மட்டும் தரப்படுவதில்லை