Tuesday

NIFTY SPOT ON 03-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உயர்வு மற்ற சந்தைகளுக்கு உற்சாகத்தை தந்துள்ளது, இதனை ஒட்டி நமது NIFTY க்கு இன்று 5486, 5530 என்ற புள்ளிகள் தடைகளாக செயல்படலாம்

NIFTY SPOT இன்று

உலக சந்தைகளின் உயர்வு நமது சந்தைகளிலும் பிரதிபலிக்கும் வாய்ப்புகள் உண்டு என்றே சொல்லலாம், தொடர்ந்து இன்று 5480 TO 5486 என்ற புள்ளிகள் முக்கியமான தடை புள்ளிகளாகும், இந்த புள்ளிகளுக்கு மேல் அடுத்த பலமான தடையாக 5530 என்ற புள்ளியையும், ஒரு வேலை 5550 ஐ கடந்து 2, 3 நாட்கள் பலத்துடன் முடிவடைந்தால்? அடுத்து நமது சந்தைகளின் போக்குகள் முற்றிலும் மாறும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,

ஆகவே தற்பொழுது 5486, 5530 இந்த இரண்டு புள்ளிகளிலும் NIFTY SPOT ன் நடவடிக்கைகளை வைத்து நாம் அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கலாம். எவளவு தான் சந்தை உயர்ந்தாலும் குறிப்பிட பங்குகளின் நகர்வுகளே தென்படுகிறது, சில நாட்களாக தின வர்த்தகத்தில் நேரம் கடத்துவது பெரும் சாவாலாகவே இருந்து வருகிறது.

இன்று 5486 க்கு மேல் உயர்ந்து பிறகு 5480 ஐ கீழே கடந்தால் (சற்று நேரம் இந்த புள்ளிக்கு கீழ் நிலைத்து நிற்க வேண்டும்) சந்தை கீழே இறங்க முயற்சி செய்யலாம், இலக்காக 5400 ஆக கூட இருக்கலாம். (இது ஒரு அனுமானம் தான், இதனை வைத்து வர்த்தகத்தில் ஈடுபடவேண்டாம் )

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5440 TARGET 5472, 5486, 5507, 5528 TO 5535

NIFTY SPOT BELOW 5435 TARGET 5421, 5399 TO 97, 5394, 5385, 5380