உலக சந்தைகள்
ஆசிய சந்தைகள் சற்று உயந்து கொண்டு தான் உள்ளது, அதே நேரம் SINGAPORE NIFTY எங்கு செல்வது என்ற குழப்பத்தில் நகர்ந்து வருகிறது, இந்த சூழ்நிலையில் NIFTY SPOT க்கு 5493 மற்றும் 5507 முக்கியமான RESISTANCE புள்ளிகளாகவும், 5475 முக்கியமான SUPPORT ஆகவும் செயல்படலாம்…
NIFTY SPOT இன்று
இன்று 5480 க்கு மேல் spot நிலை கொண்டால் தொடர்ந்து உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 5507 என்ற புள்ளியை மேலே கடந்து பலமுடன் நிலை கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அடுத்து 5540, 5590 என்று உயர்வதற்கு TECHNICAL வாய்ப்புகள் அதிகம் ஏற்படலாம்.தொடர்ந்து உயர்வதற்கு தகுந்தார்ப்போல் NIFTY யின் TECHNICAL அமைப்புகள் பலம் பெற்று வருவது கவனிக்க வேண்டிய விசயமாகும்.
அதே நேரம் RELIANCE IND நிலையையும் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. RIL ஐ பொறுத்த வரை 958 பலம் வாய்ந்த SUPPORT ஆக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஒரு வேலை 958 க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் வாய்ப்புகள் ஏற்பட்டால்!? அடுத்து 870 TO 850 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்புகள் ஏற்படலாம்.
இது போன்ற நிலை வந்தால் NIFTY யிலும் குழப்பங்களும், ஏற்ற இறக்கங்களும் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும். அதே போல் இங்கிருந்து RIL SUPPORT எடுத்து திரும்பும் வாய்ப்புகள் ஏற்பட்டால் மிக மிக குறுகிய காலத்தில் NIFTY SPOT 5588 ஐ நோக்கி பயணிக்கலாம், கீழே உள்ள படத்தில் NIFTY யின் CHART படம் உள்ளது,
இன்று 5475 என்ற புள்ளிக்கு கீழ் spot பலமுடன் நழுவி நிலைத்து நிற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டால் அடுத்து 5448 ஐ நோக்கி கீழே வரலாம், மேலும் 5410 க்கு கீழ் சற்று நேரம் நிலைத்து நின்று கீழ் நோக்கிய நகர்வை உறுதி செய்தால்! தொடர்ந்து கீழே வரவும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 5315 க்கு கீழ் தான் பலமான வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகளும் இருப்பதினால் இந்த புள்ளிகளையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5480 TARGET 5494, 5507, 5518, 5526, 5535 TO 5544, 5568, 5588, 5605
NIFTY SPOT BELOW 5475 TARGET 5457, 5448, 5438, 5422, 5417 TO 5410, 5388, 5375, 5329, 5282
NIFTY SPOT CHART