Sunday

தற்பொழுது நடந்து வரும் BEAR MARKET இன் ஆடி அந்தம் - ஒரு பார்வை

SUNDAY – 22-03-09
தற்பொழுது நடந்து வரும் BEAR MARKET இன் ஆடி அந்தம் - ஒரு பார்வை

கடந்த 2008 ஜனவரி மாதத்திலிருந்து நமது சந்தைகள் இறங்கு முகத்துடன் உள்ளது
உலக சந்தைகளும் இந்த நிலைகளில் தான் உள்ளது
அனைத்து ஊடகங்களும் இந்த இறங்கு முகத்துக்கான காரணங்களை சொல்லிக்கொண்டுதான் உள்ளனர் ,
இரண்டாம் உலகப் போருக்குப்பின் மற்றொரு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி
உலகின் மிகப்பெரிய ஜாம்பாவான்கள் மண்ணை கவ்விக்கொண்டே உள்ளனர்
ஏகப்பட்ட பேர் வேலை இழந்துள்ளனர்
மிகப்பெரிய நிறுவனங்கள் வியாபாரத்தையே இழுத்து மூடுகின்றனர்
இருப்பவர்கள் வேலையை தக்க வைத்துக்கொள்ள படாதபாடு பட்டு , உழைக்காத உழைப்பை காட்டி போராடுகின்றனர்
பங்குசந்தைகளில் பெரிய பெரிய முதலைகள் காணாமல் போய்விட்டனர்
சிறிய முதலீட்டாளர்கள் போட்ட பணத்தில் 75% காணாமல் திணறுகின்றனர்
பாரம்பரிய மிக்க, அனைவரின் நன்மதிப்பை பெற்ற, மிகப்பெரிய, மற்றும் உலகெங்கும் கிளைகள் வைத்துள்ள வங்கிகள் திவாலாகின்றன
தடம் மாறி தட்டும் தடுமாறி நிற்கும் இந்த நிறுவனங்களை வரலாறு காணாத அளவிற்கு அரசாங்கங்கள் நிதி உதவி செய்து காக்க முன்வருகின்றன
அனைவரும் 1 ரூபாய் பொருளை 2 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர் இன்று இருக்கும் விலை நாளை இல்லை ,
தங்கம் விண்ணை முட்டுகிறது
இந்த நிலையை போக்க அரசாங்கங்களை மக்கள் எதிர்நோக்க, அரசாங்கங்கள் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது,
அனைவரின் நிலைமை இப்படி என்றால் , பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலைமை ,
அடுத்து என்ன , யாரை கேட்பது , தெளிவான,  திடமான,  உறுதியான எந்த பதிலும் தெரியாமல் MEDIA யாக்கள் இழுக்கும் இழுவைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,
பணத்தையும் முதலீடு செய்து அதில் 75% யும் இந்த சரிவில் இழந்து,
பல வழிகளில் தனது முதலீட்டிற்கு எதிரான செய்திகளையும் கேட்டு,
வெந்து நொந்து அடுத்து என்ன என்ற ஆழ்ந்த கேள்விகளுடனும்,
ஒரு மாதிரியான எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துடனும்
சந்தையை எதிர் நோக்கி உள்ளனர்
என்னவாக இருந்தாலும் சரி அடுத்து என்ன என்ற கேள்விகளுடன் அமைதியாக உள்ளனர் பலர்,
இன்னும் சரியான வாய்ப்பு எப்பொழுது வரும் என்று கண்கொத்தி பாம்பாக உள்ளனர் பலர்,
எப்பொழுது நான் வாங்கிய பங்குகளை AVERAGE செய்ய மீண்டும் வாங்க வேண்டும் என்று காத்திருப்போர் பலர்,
வாங்கி வாங்கி களைத்ததோர்  பலர்,
இவர்களுக்கெல்லாம் சரியான விடை தான் என்ன,
இவளவு பெரிய வீழ்ச்சிகள் ஏன் நடக்கிறது,
இதற்க்கெல்லாம் வழிமுறைகள் இல்லையா ,
யாரும் கேட்பார் இல்லையா ,
சந்தை நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் செல்லலாமா ,
கீழே எவளவு வேண்டுமானாலும் இறங்கட்டும்,
அப்படி இறங்குவதாக இருந்தாலும் அதற்கென்று ஒரு விதி முறை இல்லையா ,
இது போன்ற கேள்விகளுடன் சுமார் சில பத்து லட்சங்களை இழந்த ஒருவர் என்னுடன் கடந்த வாரத்தில் மல்லுக்கட்டினார்,
என்ன சொன்னாலும் சமாதானம் ஆகமுடியவில்லை அவரால் ,
என்னால் உணர முடிந்தது அவரது வேதனையை,
கடின உழைப்பில் வந்த பணம் (அவரது மகனின் ஆலோசனைப்படி சந்தைக்கு வந்தாராம், மகன் வெளிநாட்டில் , இவரை வலினடத்தியவர்களோ பலர், இறுதியாக என்னிடம் வந்தார் , கதை சொல்ல),
இந்த மல்லுக்கட்டளுக்கு பின் ஒரு இரவு நேர TIFFEN  உடன் அவர் சென்று விட்டார் ,
ஆனால் என்  மனது வலித்தது,  
அந்த வலியின் விளைவு இதோ உங்கள் முன்னாள் இந்த பதிவு

அவர் என்னை வினாவிய கேள்விகளில் முக்கியமானது,

 "இவளவு பெரிய வீழ்ச்சிகள் ஏன் நடக்கிறது, இதற்க்கெல்லாம் வழிமுறைகள் இல்லையா , யாரும் கேட்பார் இல்லையா , சந்தை நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் செல்லலாமா , கீழே எவளவு வேண்டுமானாலும் இறங்கட்டும், அப்படி இறங்குவதாக இருந்தாலும் அதற்கென்று ஒரு விதி முறை இல்லையா"

ஆகவே நான் உயர்வாக திடமாக மதிக்கும் எனது TECHNICAL ANALYSING CHART முன்னாள் அமர்ந்து தேடினேன், விடைகள் கீழே

BEAR MARKET எப்படி தோன்றுகிறது,  எப்படி நடக்கிறது,  எப்படி முடிவடைகிறது ,
மறுபடியும் எப்படி BULL MARKET ஆரம்பம் ஆகிறது என்று பார்ப்போம்
அதற்க்கு முன் TECHNICAL ANALYZING இல் சில முக்கியமான விதிமுறைகள் உண்டு
அதில் FATHER OF TECHNICAL ANALYZING என்று கருதப்படும் திரு CHARLES DOW அவர்கள் சொன்ன விசயத்தில் முக்கியமானதை பார்ப்போம்

1 - HISTORY REPEATS IT SELF
2 - AVERAGES DISCOUNTS EVERYTHING
3 - PRIMARY TREND CAN NOT BE MANIPULATED

இந்த மூன்று விசயங்களில் முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்,

அதாவது "HISTORY REPEATS IT SELF"
அதாவது முன்னாள் நடந்த செயல்கள் தான் (உயர்வுகளும், தாழ்வுகளும் ) புதிய வழிகளில் சந்தைகளில் நடக்கும் ,
இந்த சுழற்ச்சி மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கும்

மேலே சொன்ன இந்த வரிகளின் அடிப்படையில்
முன்னாட்களில் உலக சந்தைகளிலும், நமது சந்தைகளிலும் நடந்த மிகப்பெரிய CORRECTION களில் தேடிய போது சில விஷயங்கள் அதாவது சில நகர்வுகளின் உருவ அமைப்புகள் அனைத்து சந்தைகளிலும் (CORRECTION MARKET )ஒற்றுமையாக இருப்பதாக தோன்றியது ,
ஒப்பிட்டு பார்க்கும்போது , உண்மையில் அப்படித்தான் என்றும் தோன்றியது
அதன் அடிப்படையில் இப்பொழுது நடந்து வரும் CORRECTION நும் ஒரு சில வித்தியாசங்களுட ஒத்து போகின்றது ,
ஆகவே நமது இந்த CORRECTION எப்படி முடியலாம், எந்த நேரத்தில் நாம்  பங்குகளை வாங்கலாம் ,
நாம் முன்பு வாங்கி வைத்த பங்குகளை எப்பொழுது AVERAGE செய்யலாம்
என்பன போன்ற விசயங்களை இந்த ஆய்வில் கொடுத்துள்ளேன் படித்து பாருங்கள்

முதலில் BEAR MARKET எப்படி ஆரம்பிக்கின்றது, அதன் பிடி சந்தைகளில் எப்படி நடை பெறுகிறது , எப்படி நிறைவு பெறுகிறது என்று பார்ப்போம்
முதலில் BEAR MARKET இன் நிலைகளை பற்றி பார்ப்போம்
பங்குசந்தைகளில் BEAR MARKET நான்கு நிலைகளில் நடை பெறுகிறது,
அவைகள் பின்வருமாறு

நிலை 1 = அனைவரும் குழம்பி ஆச்சர்யப் படும்படியான ஒரு மிகப்பெரிய வீழ்ச்சி
நிலை 2 = அவ்வாறு நடைபெற்ற வீழ்ச்சியின் உயரத்தில் 50% OR 61.8% OR 75.6% அளவிற்கு ஒரு மாயையான உயர்வு (FIBONACCI RETRACEMENT BASED DEAD RALLY )
நிலை 3 = இந்த மாயையான உயர்வுக்கு பின் மெதுவான CHANNELD அமைப்புடன் கூடிய (LOWER LOWS, LOWER TOPS உடன் கூடிய ) பழைய கடை நிலை புள்ளியை (PREVIOUS LOW) கீழே கடந்து செல்லும் ஒரு கீழ் நோக்கிய நகர்வு
நிலை 4 = BEAR MARKET க்கான கடை நிலைப் புள்ளியை (BOTTOMING OUT POINT ) கண்டறிந்து பின் அடுத்தக்கட்ட உயர்வுக்கான CONSOLIDATION ஐ ஆரம்பித்தல்
கீழே உள்ள படத்தை பாருங்கள் ,
இந்த படத்தில் BEAR MARKET எப்படி நகர்கின்றது என்பதினை படத்தில் விளக்கி உள்ளேன்

BEAR MARKET STYLE PICTURE

மேலே உள்ள படத்தில் நான் சுட்டிக்காட்டியது போல் உலக சந்தைகளின் ORIGINAL வரைபடங்களில்  நடந்துள்ளதை கீழே உள்ள படத்தில் பாருங்கள்
அதற்க்கு முன் கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் ஏற்ப்பட்ட  வீழ்ச்சிகள் எப்பொழுது நடை பெற்றது என்பதினை விளக்கி விடுகிறேன்

நமது சந்தைகளில் கடந்த 2000 TO 2003 வரைக்குமான காலத்தில் தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய வீழ்ச்சிகளை போல், ஒரு பெரிய வீழ்ச்சியை சந்தைகள்  சந்தித்து  மீண்டிருக்கிறது,
மேலும் உலக சந்தைகளிலும் சற்றேறக்குறைய இதே காலங்களில் தான் இது போன்ற வீழ்ச்சிகளும் நடந்துள்ளது ,
அந்த வீழ்ச்சிகள் பற்றி விளக்கமாக கீழே உள்ள பாடங்களில் விளக்கயுள்ளேன் பாருங்கள்,
கீழே உள்ள பாடங்களில் அமெரிக்க, ஆசிய, ஐரோப்பியாவின் முக்கியமான INDEX கள் அந்த CORRECTION களில் எப்படி நடந்தது என்றும்
அந்த CORRECTION கள் எப்படி நாம் முதலில் பார்த்த படமான BEAR MARKET STYLE OR STAGE இல் உள்ளது போல் நகர்ந்துள்ளது என்பதினை பாருங்கள்
கீழே உள்ள படங்களின் விவரங்கள்
SENSEX , NIFTY , DOW JONES , FTSE , NIKKEI

சரி அந்த வீழ்ச்சிகளில் எப்படி நமது சந்தைகளும் , உலக சந்தைகளும் நடந்து கொண்டன என்று பார்ப்போம்
முதலில் SENSEX பற்றி பார்ப்போம்
SENSEX கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6151 என்ற புள்ளியில் TOP OUT ஆகி சரிய ஆரம்பித்தது,
BEAR MARKET இன் முதல் நிலையான அனைவரும் குழம்பி ஆச்சர்யப்படும் படியான மிகப்பெரிய வீழ்ச்சியை அடைய  6151 இல் இருந்து 4601 என்ற புள்ளிக்கு சென்றது,
அடுத்து BEAR MARKET இன் 2 ஆம் நிலையான இழந்த புள்ளிகளில் ஒரு 61.8% அளவிற்கு ஒரு மாயையான உயர்வை அடைய  4601 என்ற புள்ளியில் இருந்து 5543 என்ற புள்ளிகள் வரை உயர்ந்தது, (2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் இந்த உயர்வு நடந்தது)
அங்கிருந்து BEAR MARKET இன் 3 ஆம் நிலையான CHANNELD அமைப்புடன் கூடிய LOWER LOWS AND LOWER TOPS என்ற அடிப்படையில்
பழைய கடை நிலைப் புள்ளியை (PREVIOUS LOW) கீழே கடந்து,
மிக நீண்ட நாட்கள் இந்த கீழ் நோக்கிய நகர்வு  நடந்துள்ளதை இந்த இரண்டு பச்சை நிற கோடான அந்த CHANNEL அமைப்பு காட்டுவதை பாருங்கள்,
இந்த CHANNEL அமைப்புடன் கூடிய கீழ் நோக்கிய நகர்வு கிட்ட தட்ட 1.1/2, வருடங்கள் நடந்துள்ளது,
அதற்கடுத்து இந்த CHANNEL அமைப்பின் TOP RESISTANCE LINE BREAK OUT செய்து,  CONSOLIDATION என்னும் அடுத்த நிலைக்கு தான் வருவதாக அறிவித்து விட்டு ,
நான்காம் நிலையான CONSOLIDATION நிலைக்கு (வெள்ளிய நிறத்தில் காட்டப்பட்ட TRIANGLE பகுதி ) வந்து,
அந்த நிலையில் கிட்ட தட்ட 1.3/4 வருடம் CONSOLIDATION ஐ நிகழ்த்தி (CONSOLIDATION என்றால் அடுத்த உயர்வுக்கு தேவையான பங்குகளை வாங்குவதற்காக சந்தையை மேலும் கீழும் ஆடவிட்டு தேவையான பங்குகளை தேவையான விலைகளில் வாங்கி குவிப்பது )
3265 என்ற புள்ளியில் 2003 ஆம் வருடம் JUNE மாதத்தில் அடுத்த மிகப்பெரிய உயர்வுக்கான BREAK OUT ஐ பெற்று ,
வெறும் 7 மாதங்களில் முன்னாள் நடந்த மிகப்பெரிய CORRECTION ல்
இழந்த அனைத்து புள்ளிகளையும் பெற்றுள்ளதை பாருங்கள்

SENSEX CHART 
அடுத்து   NIFTY

NIFTY இல் கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 1818  என்ற புள்ளிகளில் TOP OUT என்ற நிலையை எட்டி ,
அடுத்து BEAR MARKET இன் முதல் நிலையான மிகப்பெரிய வீழ்ச்சியை 1818 என்ற புள்ளியில் இருந்து 1201 என்ற புள்ளிக்கு கீழே வந்து ,
இரண்டாம் நிலையான,  ஏற்ப்பட்ட வீழ்ச்சியில் 61.8% அளவிற்கு ஒரு மாயையான உயர்வை 1201 என்ற புள்ளியில் இருந்து 1565  என்ற புள்ளிக்கு உயர்ந்து உள்ளது ,
அடுத்து மூன்றாம் நிலையான CHANNELD அமைப்புடன் கூடிய LOWER LOWS, LOWER TOPS உடன் கூடிய கீழ் நோக்கிய நகர்வு, கிட்ட தட்ட 1.1/2 வருடங்கள் நடந்துள்ளதை பச்சை நிற CHANNEL அமைப்பு காட்டுவதை பாருங்கள்,
இந்த நிலையில் BEAR MARKET இன் கடை நிலை புள்ளியை (BOTTOMING OUT POINT) 849 என்ற புள்ளியில் பெற்று,
அதிலிருந்து உயர்ந்து CHANNEL BREAK OUT ஆகி , அடுத்த நிலையான CONSOLIDATION நிலைக்கு மாறியதை பாருங்கள் (வெள்ளை நிறத்தில் காட்டப்பட்ட TRIANGLE பகுதி CONDOLIDATION ஐ குறிக்கும் ) ,
இந்த CONSOLIDATION ஆனது கிட்ட தட்ட 1.3/4 வருடம் நடை பெற்று,
அடுத்த பெரிய BULL MARKET க்கான BREAK OUT 1060 என்ற புள்ளியில் பெற்று ,
இந்த CORRECTION இல் இழந்த அனைத்து புள்ளிகளையும் வெறும் 7 மாதங்களில் திரும்ப பெற்றுள்ளதை பாருங்கள் ,

NIFTY CHART 

இதே போன்று DOW JONES, FTSE, NIKKEI போன்ற முக்கியமான உலக INDEX களிலும் நடந்துள்ளதை படத்தில் விளக்கியுள்ளேன், படங்களை நன்றாக பாருங்கள்
இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய சரிவுகளை போல் கிட்ட தட்ட 50% சரிவுகளை கடந்த 2000 TO 2003 ஆம் ஆண்டுகளில் தான் சந்தைகள் இழந்துள்ளது ,
ஆகவே தான் அந்த வீழ்ச்சிகளை உதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளேன்

சரி இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சரிவுகள் எப்படி 2000 TO 2003 ஆம் ஆண்டுகளில் நடந்த சரிவுகளை ஒத்துள்ளது, என்பதினையும்,
எப்பொழுது இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சரிவுகள் CONSOLIDATION என்ற நிலைக்கு வரும் என்பதினையும் ,
நாம் எப்பொழுது நமது நீண்ட கால முதலீடுக்கான பங்குகளை வாங்கலாம்
என்பன போன்ற விளக்கங்களை பற்றி விரிவாக இப்பொழுதே சொன்னால சரிவராது ,
அகவே சற்று பொறுங்கள் அடுத்த வாரம் இதை பற்றி விரிவாக பார்ப்போம் அதற்க்கு முன் இந்த படங்களை நன்றாக பார்த்துவிடுங்கள் 
நன்றி 
சரவணபாலாஜி

முதல் படத்தில் BEAR MARKET எப்படி வந்து செல்லும் என்பதை சில கோடுகளின் மூலம் சிட்டிகாட்டியது போல் அனைத்து படங்களிலும் நிகழ்ந்திருப்பதை ஒப்பிட்டு பாருங்கள்

DOW JONES CHART
FTSE CHART 
NIKKEI CHART 
 BEAR MARKET  - A COMPLETE VIEW