Thursday

TECHNICAL ஆக 2810 ஐ NIFTY கடக்கும் வாய்ப்புகள், NIFTY என்ன செய்யப்போகிறது


TECHNICAL ஆக 2810 ஐ NIFTY கடக்கும் வாய்ப்புகள், NIFTY என்ன செய்யப்போகிறது

கடந்த இரண்டு தினங்களாய் நமது சந்தையில் உலக சந்தைகளின் உயர்வை கொண்டாட முடியாத சோகம் அனைவருக்கும் இருக்கும்,

இது போல் இரண்டு தினங்கள் விடுமுறை இல்லாமல் இருந்தால் நாம் அனைவரும் சில லாபங்களுடன் மெல்ல Nifty 2810 என்ற அளவுகளில் வைத்து இருப்போம், என்ன செய்வது.

இரண்டு நாள் விடுமுறை ஆர்வத்தை சந்தை இன்றே காட்ட  முயற்சி செயும் என்றே எண்ணுகிறேன்,

இதில் ASAIN MARKET உயர்வும், தாழ்வும் கலந்த கலவையாக உள்ளது,

SINGAPORE NIFTY 2660 என்ற புள்ளிகளில், 100 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் வர்த்தகம் நடந்து கொண்டுள்ளது,

நமது சந்தைகளிலும் GAP UP இருக்கும், அனால் அந்த  GAP UP உயர்வை தக்க வைத்துக்கொள்வது ASIAN MARKET மற்றும் US FUTURE MARKET இன் போக்குகளை பொறுத்து உள்ளது,

ஒரு வேலை NIFTY 2670 என்ற நிலைகளில் நல்ல VOLUME உடன் முடிவடையும் பட்சத்தில் அதன் அடுத்த இலக்கு 2810 என்ற அளவில் இருக்கலாம் ,

இப்பொழுது அதற்கான TECHNICAL வரைபட விளக்கத்தை பார்ப்போம்

இந்த படத்தை பாருங்கள் 


இதில் நிபிட்டி கடந்த மூன்று வாரங்களாக சேனல் என்ற ஒரு அமைப்பில் நகர்ந்துகொண்டுள்ளது,

இந்த சேனல் என்ற அமைப்பின் தடை நிலையாக (RESISTANCE) 2665 TO 2670 என்ற புள்ளியும்,

அதன் தாங்கு நிலையாக (SUPPORT) 2500 TO 2470 என்ற புள்ளிகளும் உள்ளது ,

இந்த சேனல் அமைப்பின் படி இந்த SUPPORT OR RESISTANCE புள்ளிகளை NIFTY கடந்தால் அந்த புள்ளியில் இருந்து ஒரு 155 புள்ளிகளை கடக்க வேண்டும்,

அதன் படி 2665 TO 2670 என்ற புள்ளியை NIFTY மேலே கடந்தால் அதன் இலக்கு 2810 என்ற இடத்திலும்,

2500 TO 2470 என்ற புள்ளிகளை கீழே கடந்ததால் 2350 TO 2300 என்ற இலக்கையும் அடையும்

இப்பொழுது 2670 AND  2500  என்ற புள்ளிகள் NIFTY இன் அடுத்த கட்ட நகர்வுகளை முடிவு செய்யும்

 

NIFTY LEVES TODAY

 

NIFTY ABOVE 2665 TO 2670 TARGET 2689, 2720, 2750, 2800 TO 2810

NIFTY BELOW 2553 TARGET 2539, 2524, 2503, 2470 TO 2450

 

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்

 

வங்கி பங்குகளில் சற்று ஒரு சிறிய உயர்வு இருக்கலாம் என்று எண்ணுகிறேன் இந்த பங்குகளில் DELEVERY ஏதும் எடுக்க வேண்டாம், DAY TRADING செய்யுங்கள்

 

CIPLA AB 207 TARGET 215 TO 217

 

HUL AB 205 TARGET 215, 230