Sunday

FIBONACCI RETRACEMENT ஒரு பார்வை


SUNDAY 15-03-09 
சந்தைகளில் உயர்வுகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது,
இப்பொழுது இந்த உயர்வுகள் எவ்வளவு  உயரம் வரைக்கும் செல்லலாம் என்பதை TECHNICAL ANALYSING இல் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான FIBONACCI RETRACEMENT LEVELS இன் அளவுகள் கொண்டு கணிப்போம்...

அதற்க்கு முன் FIBONACCI என்று சொல்கிறோமே அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்
FIBONACCI என்பவர் கிபி1175  TO  கிபி1250 களில் ஐரோப்பியாவில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதை,
இவர் பிறந்தது இத்தாலியில் உள்ள பிசா என்னும் இடத்தில்,
இவர் வாழ்ந்த காலத்தில் கணிதத்தில் மிகப்பெரிய மற்றும் நிறைய செயல்கள் செய்துள்ளார்,
இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர் அன்று கொடுத்த விசயங்களை தான் நாம் இன்று பயன்படுத்துகிறோம்,
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ROMAN NUMBERS ஐ சொல்லலாம், மேலும் நாம் பயன்படுத்தும் கூட்டல் கழித்தல் களில் கூட இவரின் வழிகட்டுதல்கள் உண்டு …..
இப்படி நிறைய விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்,

சரி நாம் TECHNICAL ANALYSING இல் பயன்படுத்திவரும் FIBONACCI RETRACEMENT LEVELS இல் வரும் 61.8%, என்ற அளவு எப்படி வந்தது மேலும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றியும் மற்றும் 23.6%, 38.2%, 50%, 76.4%, 85.4%, என்ற அளவுகள் எப்படி வந்தது மேலும் அவைகளின் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்போம்,

கிபி 1175 TO கிபி 1250 களில் வாழ்ந்த FIBONACCI அவர்கள் சில எண்களின் வரிசையை  கண்டுபிடித்தார்
அதாவது முதலில் 0 வை எழுதிக்கொள்ளவேண்டும் 
பிறகு அந்த 0 வுடன் 1 என்ற என்னை கூட்ட வேண்டும், 1 என்று விடை வரும், 
வந்த விடையுடன் முன்னாள் உள்ள எண்ணான 1 மீண்டும் கூட்ட வேண்டும், 2 என்று விடை வரும் அதனுடன், முன்னால உள்ள எண்ணான 1 ஐ கூட்ட வேண்டும் 3 என்று விடைவரும் அதனுடன் முன்னாள் உள்ள எண்ணான 2 ஐ கூட்ட வேண்டும் 5 என்று விடை வரும் அதனுடன், முன்னால உள்ள எண்ணான 3 ஐ கூட்ட வேண்டும் 8 என்று விடை வரும் அதனுடன், முன்னால உள்ள எண்ணான 5 ஐ கூட்ட வேண்டும் ,இப்படியாக முன்னாள் உள்ள என்னுடன் கூட்டிக்கொண்டே சென்றால், நீளமான எண்களின் வரிசை வரும் , அந்த வரிசைக்கு பெயர் தான் FIBONACCI SERIAL NUMBERS,
என்ன புரியவில்லையா , கீழே உள்ள எண்களின் வரிசையை பாருங்கள்
புரியும்

0-      1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987........

இப்போ புரியுதா , அதாவது இந்த வரிசையை பாருங்கள்
முதலில் 0 வை எழுதிக்கொள்ள வேண்டும், பின் அதனுடன் 1 ஐ கூட்ட வேண்டும் வரும் விடையான 1 ஐ எழுதிக்கொள்ளவேண்டும் அடுத்து இந்த 1 என்ற என்னுடன் முன்னாள் உள்ள 0 வை கூட்ட வேண்டும், வரும் விடையான 1 ஐ எழுதிக்கொள்ளவேண்டும் அடுத்து இந்த 1 என்ற என்னுடன் முன்னாள் உள்ள 1 கூட்ட வேண்டும், வரும் விடையான 2 ஐ எழுதிக்கொள்ளவேண்டும் , இப்படியாக முன்னாள் உள்ள என்னுடன் கூட்டினால் அடுத்து அடுத்து எண்கள் கிடைக்கும் அவைகளை எழுதிக்கொண்டால் ஒரு வரிசை கிடைக்கும்,

அந்த வரிசைக்கு பெயர் தான் FIBONACCI SERIAL NUMBERS ஆகும்,
இவ்வாறு கண்டுபிடித்த எண்களை வைத்துக்கொண்டு FIBONACCI அவர்கள் சில விசயங்களை கண்டுபிடித்தார்,
அவர் கண்டுபிடித்த அந்த விஷயம் தான் அனைவராலும் இன்று கொண்டாடப்படும் GOLDEN NUMBER, OR GOLDEN MEAN எனப்படும் GOLDEN AVERAGE ஆகும் ,
இந்த என்னை தான் நாம் TECHNICAL ANALYSING இல் உள்ள FIBONACCI RETRACEMENT LEVELS இல் முக்கியமான நிலையாக பயன்படுத்துகிறோம்
( 61.8% ),
சரி அந்த FIBONACCI SERIAL NUMBERS இல் இருந்து இந்த முக்கியமான எண்ணான 61.8% ஐ அவர் எப்படி கண்டுபிடித்தார் என்பதை இப்பொழுது பார்ப்போம்,
அதாவது இந்த வரிசையில் உள்ள எண்களை ஒன்றுடன் ஒன்றை FIBONACCI அவர்கள் இரண்டு விதமாக வகுத்துக்கொண்டார் (DIVIDING)
இப்பொழுது அவர் செய்த இரண்டு வகுத்தல் முறைகளில் முதல் முறையை பற்றி  பார்ப்போம்
முதல் முறையை
அதாவது இந்த வரிசையில் உள்ள ஒரு நம்பரை எடுத்துக்கொண்டு அதற்க்கு பின்னால் உள்ள மற்றொரு நம்பரால் வகுப்பது (DIVIDING),
அவர் எப்படி வகுத்தார் என்பதை கீழே காண்க
அந்த வரிசை

"0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987"

இரண்டு இழக்க நம்பரில் இருந்து வகுக்க (DIVIDING) ஆரம்பிப்போம்
21/13 விடை = 1.61538
34/21 விடை = 1.61904
55/34 விடை = 1.61764
89/55 விடை = 1.61818
144/89விடை = 1.61797
233/144விடை=1.61805
377/233விடை=1.61802
610/377விடை=1.61803
இப்படியாக இந்த முதல் முறையில் அவர் வகுத்ததில் (DIVIDE) அவருக்கு கிடைத்த விடை சராசரியாக 1.618 ஆக இருந்தது

இரண்டாம முறை
இந்த முறை முதல் முறைக்கு நேர் எதிரான முறை ,
அதாவது அந்த வரிசையில் உள்ள ஒரு நம்பரை அதன் அடுத்த இடத்தில் உள்ள நம்பருடன் வகுப்பது (DIVIDING)
அந்த வரிசை
"0- 1- 1- 2- 3- 5- 8- 13- 21- 34- 55- 89- 144- 233- 377- 610- 987"
அதாவது கீழ் கண்ட முறையில்
13/21 விடை = 0.61904
21/34 விடை = 0.61764
34/55 விடை = 0.61818
55/89 விடை = 0.61797
89/144விடை = 0.61805
144/233விடை= 0.61802
233/377விடை= 0.61803
377/610விடை= 0.61803
இப்படியாக இந்த இரண்டாம் முறையில் அவர் வகுத்ததில் (DIVIDE) அவருக்கு கிடைத்த விடை சராசரியாக 0.618 ஆக இருந்தது

இந்த இரண்டு வகுத்தலுக்கும் அவருக்கு கிடைத்த இரண்டு சராசரி விடைகள்
1.618 மற்றும் 0.618 ஆகும்
இந்த இரண்டு சராசரி விடைகளிலும் பொதுவானதாக .618 என்ற எண் இருந்தது ஆகவே அதை எடுத்துக்கொண்டார் ,
இப்பொழுது இந்த நம்பரை அரைகுறை நம்பராக இல்லாமல் முழு நம்பராக மாற்ற வேண்டி இதை 100 உடன் பெருக்குவோம் ,
பொதுவாக நாம் சதவிகிதங்களை 100 அடிப்படையில் தான் காண்போம் இல்லையா , ஆகவே இந்த என்னை 100 உடன் பெருக்கினால் வரும் விடை 100*.618 = 61.8 இப்படியாக கிடைத்தது ,
 இந்த நம்பரானது மிக முக்கியத்துவமான அனைவராலும் கொண்டாடப்படும் GOLDEN MEAN OR GOLDEN RATIO ஆகும் ,
இந்த GOLDEN MEAN நம்பரை தான் (61.8%) நாம் TECHNICAL ANALYSING இல் FIBONACCI RETRACEMENT LEVEL இல் மிக முக்கியமானதாக பார்க்கின்றோம்
மேலும் இந்த GOLDEN MEAN NUMBER OR GOLDEN AVERAGE NUMBER ஐ பற்றி நான் இங்கு கொஞ்சமாவது சொல்லியே ஆகவேண்டும்
இந்த நம்பரானது நமது வாழ்க்கையில் நீக்கமற நிறைந்த  ஒரு MAGICAL நம்பர் ஆகும் ,
எப்படி என்று பார்ப்போம் வாருங்கள், இந்த விஷயம் ஒரு சுவாரசியமான விஷயம் கூட ,
மேலும் அனைத்தையும் சொல்லமுடியாததால் 1 , 2  ஐயாவது சொல்கிறேன்
மீதியை பின்னால் ஒரு பதிவில் சொல்கிறேன்
இப்பொழுது இந்த 61.8% என்ற MAGICAL நம்பர் எப்படி நமது பூமியில் உள்ளது என்று பார்ப்போம்
 நமது பூமி அதிக அளவு நீரினாலும் , குறைந்த அளவு நிலத்தினாலும் ஆனது ,
அது உங்கள் அனைவருக்கும் தெரியும் , ஆனால் இந்த நீரின் அளவு கிட்ட தட்ட 61.8% என்ன ஆச்சரியமாய் இருக்கா
அடுத்து நம்மை வைத்தே ஒரு உதாரணம் பார்ப்போம் ,
உங்களது முழு உயரத்தை அளந்து கொள்ளுங்கள் , அந்த உயரத்தில் கிட்ட தட்ட 61.8% உயரத்தில் நமது முக்கியமான உறுப்புகள் அமைந்துள்ளது,
பெண்களுக்கு அவர்களின் மொத்த உயரத்தில் 61.8% உயரத்தில் தான் தாய்மை அடையக்கூடிய கர்ப்ப பை உள்ளது,
இப்படியே இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்,
இப்பொழுது FIBONACCI அவர்களின் SERIAL NUMBER களின் முக்கியத்துவத்தை பற்றியும் பார்ப்போம்
உதாரணமாக நமது கைகளை எடுத்துக்கொள்ளுங்கள்
நமக்கு 2 கைகள் அதில் 5 விரல்கள் , அந்த 5 விரல்களிலும் 3 அடுக்குகள், இவ்வாறு நிறைய சொல்லலாம்
இன்னும் பார்க்க வேண்டும் என்றால் இந்த LINK CLICK செய்து பாருங்கள்,
காய், கனி, செடி கொடிகளில் பூ இவைகளில் எல்லாம் எப்படி FIBONACCI NUMBER கள் அமைந்துள்ளது என்று அறிந்து கொள்ளலாம்
இவளவு விஷயங்கள் நமக்கு தேவை இல்லை தான் , இருந்ததாலும் இந்த FIBONACCI NUMBER எவ்வளவு முக்கியமானது என்று காட்டுவதர்ர்க்காக சொல்ல வேண்டி ஏற்ப்பட்டது ,
சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம்
இந்த FIBONACCI இன் GOLDEN MEAN புள்ளியான 61.8 ஐ நாம் TECHNICAL ANALYSING இல் FIBONACCI RETRACEMENT LEVEL கள் என்ற பெயரில் பயன்படுத்துகிறோம்,
மேலும் இதனுடன் 23.6%, 38.2%, 50%, 76.4%, போன்ற அளவுகளையும் பயன் படுத்துகிறோம் ,
இந்த அளவுகள் எப்படி வந்தது என்பதனையும் பார்த்துவிடுவோம்
இந்த 38.2 இல் 61.8%                                              = 23.6
இந்த 61.8 100 உடன் கழித்தால் கிடைப்பது = 38.2
இந்த 23.6 100 இல் கழித்தால் வருவது         = 76.4
இந்த 68.1 உடன் 23.6  கூட்டினால் வருவது = 85.4

ஆகவே நாம் பயன் படுத்தும் FIBONACCI RETRACEMENT LEVEL களின் மொத்த வரிசையை பார்ப்போம்
61.8% of 32.8               = 23.6%
100-61.8                       = 32.8%
PSYGOLOGICAL USE = 50%
GOLDEN NUMBER      = 61.8%
100 - 23.6                     = 76.4%
23.6 + 61.8                   = 85.4%
அனுபவத்தில்           = 89% 

(சைக்காலஜியாக நாம் எப்பொழுதும் முழு, அரை (1, ½) ஆகியவைகளை பயன் படுத்துவோம் இல்லையா , அந்த வகையில் 50% மும் முக்கியமானதே)

மேற்கண்ட அனைத்து அளவுகளையும் நாம் FIBONACCI RETRACEMENT LEVEL களில் பயன்படுத்துகிறோம் ,
இந்த அளவுகள் வந்த விதத்தை பார்த்துவிட்டோம் ,
இப்பொழுது இந்த அளவுகள் உலக சந்தைகளின் வரை படங்களில் எப்படி அமைந்துள்ளது என்று கீழ் கண்ட படங்களை பாருங்கள் , படத்திலேயே அதன் அளவுகளை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன் ,
இந்த FIBONACCI அளவுகளை படத்தில் "0" என்ற குறிக்கப்பட்ட கோட்டில் இருந்தது ஆரம்பித்து , "100" என்ற குறிக்கப்பட்ட இடத்தில் முடித்துள்ளேன், இந்த இடைப்பட்ட உயரங்களுக்கான FIBONACCI RETRACEMENT அளவுகள் எந்த எந்த இடங்களில் வருகிறது என்று பாருங்கள்,
அந்த இடங்களில் இப்பொழுது நடந்து வரும் உயர்வுகள் தடை நிலைகளை சந்திக்கலாம் ,
இந்த 0 மற்றும் 100 என்ற புள்ளிகளானது, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உயர்வுக்கு முன் நடந்த வீழ்ச்சிஇன் தொடக்கப் புள்ளியில் இருந்தும் ,
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உயர்வு எந்த புள்ளியில் இருந்து ஆரம்பம் ஆனதோ அந்த புள்ளியில் இருந்தும் கணக்கிடப்பட்டுள்ளது

உங்களுக்கு இதில் ஏதும் சந்தேகம் இருந்தாலும், கருத்துகள் இருந்தாலும் பின்னூட்டம் இடுங்கள்

நன்றி
சரவனபலாஜி
DOW JONES CHART

NASDAQ COMPO CHART
NIKKEI225 CHART
HANG SANG CHART
FTSE100 CHART
DAX CHART
NIFTY CHART
SENSEX CHART