நமது சந்தையின் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி அமையும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் :-
Nifty இல் தற்போது அமைந்து இருக்கும் Technical Patterns எனப்படும் நுட்ப்பக்கூறு வடிவங்களையும் அதனால் Nifty இல் ஏற்படப்போகும் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதையும் வரைபடத்துடன் காண்போம் ...
Nifty technical வரைபடத்தை மூன்று வகையாக நாம் பார்க்கலாம், "அதாவது DAILY VIEW , WEEKLY VIEW, MONTHLY VIEW", இவற்றில் நாம் DAILY VIEW, மற்றும் MONTHLY VIEW, ஆகிய இரண்டிலும், NIFTY இன் அடுத்த கட்ட நகர்வுக்கான வடிவங்கள் அமைந்திருக்கும் விதத்தையும் அதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் இப்பொழுது பார்போம்
DAILLY VIEW :- கீழே கொடுத்துள்ள வரைபடத்தை பாருங்கள் , அதில் நான்கு நிறங்களில் சில உருவ அமைப்புள்ள கோடுகள் வரைந்திருக்கிறேன் , அந்த கோடுகள் பற்றியும் அதனால் NIFTY இல் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றியும் ஒவ்வொன்றாக பார்ப்போம், முதலில் பச்சை நிறத்தில் உள்ள கோட்டை பார்ப்போம்,
அந்த இரண்டு பச்சை நிற கோடுகள் போன்ற வடிவம் வரைபடத்தில் அமைந்தால் அதுTECHNICAL ஆய்வுகளில் CHANNEL என்று அழைக்கப்படும், இந்த CHANNEL கடந்த 9 ஆம் தேதி முதல் NIFTY இல் உருவாகி வருகிறது, இந்த அமைப்பில் NIFTY இன் தடை நிலையாக2970 முதல் 3000 என்ற புள்ளிகள் உள்ளது, அதே போல் 2660 என்ற புள்ளி தாங்கு நிலைப்புள்ளியாக உள்ளது, TECHNICAAL ஆய்வுகளில் எந்த ஒரு வடிவமும் தனது ,தடைநிலை, அல்லது தாங்கு நிலைப்புள்ளிகளை, கடக்கும் போது அந்த வடிவங்களின் அளவுகளுக்கு ஏற்ப சில உயரங்களையோ அல்லது வீழ்ச்சிகளையோ அடையும், ஆகவே நாம் இங்கு NIFTY இல் காணும் CHANNEL என்ற அமைப்பில் 3000 என்ற தடை புள்ளியைNIFTY கடக்குமானால் அதன் இலக்கு 3250 முதல் 3300 வரை செல்லும் , ஒரு வேலை அவ்வாறு செல்லாமல் 2660 என்ற தாங்கு நிலை புள்ளியை கீழே கடக்குமானால் 2400என்ற புள்ளியை அடையும்,
அடுத்து வெள்ளை நிரப்புள்ளிகளை பற்றி பார்போம் CHANNEL எனப்படும் பச்சை நிரப்புள்ளிகளுக்கு சற்று மேல் உள்ள வெள்ளை நிரப்புள்ளிகளை பாருங்கள், அதை ஒருBOX போன்ற அமைப்பில் கொடுத்துள்ளேன், அந்த BOX க்கு இடைப்பட்ட இடங்கள் தற்பொழுது NIFTY இன் மிக முக்கிய தடை நிலைப்புள்ளியாகும், அந்த BOX ஆனது 2806 TO 2880 வரைக்குமான ஒரு நிலை ஆகும், இந்த இடைப்பட்ட உயரங்களை NIFTYகடந்தால் ஒழிய மேலே நாம் பார்த்த 3000 மற்றும் 3300 என்ற புள்ளிகளை அடைவதற்குவாய்ப்புகள் இல்லை, ஆகவே 2806 TO 2815 என்ற புள்ளி முதல் தடை நிலையாக இருக்கும், அதை கடந்தால் அடுத்ததாக 2870 TO 2880 என்ற புள்ளி தடை நிலையாக இருக்கும் இவை இரண்டையும் கடந்தால் அடுத்து நாம் முன்னால் பார்த்த CHANNELஇன் தடை நிலை புள்ளியான 3000 தை நோக்கி NIFTY நகரும் , அதையும் கடந்தால் 3250 TO 3300 என்ற இலக்கை நோக்கி நகரும்,
அடுத்து நாம் பார்க்கப்போவது ஊதா நிற கோட்டின் வடிவத்தை பற்றி ,
இந்த இரண்டு ஊதா நிற கோட்டை பாருங்கள், இது போன்ற வடிவத்திற்கு (TRIANGEL)முக்கோணம் என்று TECHNICAL ஆய்வுகளில் பெயர், இந்த முக்கோண வடிவமானது NIFTYஇல் கடந்த அக்டோபர் மாதம் 2008 வருடம் வுருவாக ஆரம்பித்தது, அந்த இரண்டு கோடுகளுக்கு இடையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நகர்ந்து கொண்டிருந்த NIFTY,கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி இந்த முக்கோண வடிவத்தின் தாங்கு நிலையை (அதாவது கீழே வரும் ஊதா கோட்டை 2775 என்ற புள்ளியில்) கடந்து கீழே சென்றுள்ளது,மேலும் தனது கீழே சென்றுள்ள நிலையை அதாவது BEAR TRENT ஐ உறுதி செய்யும் விதமாக கடந்த 7 நாட்களாக அந்த கோட்டிற்கு கீழேயே தனது வர்த்தகத்தை தொடர்ந்து வருகிறது, மேலும் இந்த TRIANGEL எனப்படும் முக்கோண வடிவத்தின் தடை நிலையாக3000 என்ற புள்ளி நிலை கொண்டுள்ளது, ஆனால் தாங்கு நிலை புள்ளியான 2780 என்ற நிலை கடந்த வாரம் கீழே உடைக்கப்பட்டுள்ளது , மேலும் நாம் CHANNEL என்ற வடிவத்தைபற்றி பார்க்கும்போது எதாவது ஒரு நிலை (தடை அல்லது தாங்கு நிலை )கடக்கப்ப்படுமானால் அந்த வடிவத்திற்கு ஏற்றாற்போல் அதன் இலக்கு அமையும் என்று சொன்னேன், இந்த முக்கோண வடிவத்திற்கு எதாவது ஒரு நிலை கடக்கப்ப்படுமானால்,அதன் இலக்கு 1260 புள்ளிகளை இழக்கவோ அல்லது பெறவோ செய்யும் , அதன்படி NIFTY 2780 என்ற புள்ளியை கீழே கடந்துள்ளதால் அது 1550 TO 1400 என்ற அளவில் NIFTY ஐ நிலை நிறுத்தும்,
துரதிஷ்டவசமாக நமது NIFTY யானது 2780 என்ற தாங்கு நிலைப் புள்ளியை கீழே கடந்து ,அதை உறுதி செய்கிறது, இங்கு நான் மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும், அதாவது ஒருவேளை நாம் மேலே பார்த்த வெள்ளை நிற கோட்டின்தடை நிலை புள்ளியான 2806 TO 2880 ஐ கடந்து , மேலும் CHANNEL இன் தடை நிலை புள்ளியான 3000 யும் NIFTY கடக்குமானால் இந்த 1550 TO 1400 என்ற கீழ் இறக்கம் நடக்காமல் போகலாம், அப்படி இல்லாமல் 2660 என்ற NIFTY இன் மிக முக்கிய தாங்கு நிலையை கீழே கடக்குமானால் வரிசையாக 2400, 2300 TO 2250 என்ற புள்ளிகளை கீழே கடக்கும் மேலும் 2250 என்ற புள்ளியையும் கீழே கடக்குமானால் , சந்தேகம் வேண்டாம்1550 TO 1400 என்ற இலக்கை NIFTY அடைந்தே தீரும் ,
இது உடனடியாக நடந்து விடும் என்று என்ன வேண்டாம் மெல்ல மெல்ல நடக்கும்
அடுத்து நாம் மஞ்சள் நிற கோட்டினை பற்றி பார்ப்போம்
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற கோட்டினை பாருங்கள், இது நாம் முன்னாள் பார்த்த பச்சை நிற CHANNEL என்ற வடிவத்தை போல சற்று பெரிய CHANNEL, இது கடந்த அக்டோபர் மாதம் NIFTY இல் உருவாக ஆரம்பித்தது ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுவரை NIFTY இதன் தடை நிலையையோ , அல்லது தாங்கு நிலையையோ அக்டோபர் மாதத்திற்கு பிறகு தொடவில்லை, மேலும் இதன் தடை நிலை 3300 என்ற புள்ளியில் உள்ளது, அதன் தாங்கு நிலை 230O TO 2250 என்ற புள்ளிகளில் உள்ளது , ஒரு வேலை NIFTY எதாவது ஒரு நிலையை கடக்குமானால் அந்த இடத்தில இருந்து 1000 புள்ளிகள் உயரவோ (4300), அல்லது கீழே செல்லவோ (1300) வாய்ப்புகள் உண்டு,
இது வரை NIFTY இன் DAY VIEW பற்றி பார்த்தோம், அடுத்து MONTHLY VIEW பற்றி பார்போம்
இந்த படத்தை பாருங்கள் இது NIFTY இன் உடைய MONTHLY CHART VIEW,
அதாவது மாதத்திற்கு ஒரு கோடு என்ற விதத்தில் உருவாக்கப்பட்ட வரைபடம், இதில் அழகாக ஒரு முக்கோண வடிவம் (TRIANGEL) உருவாகி கொண்டுவருவதை பாருங்கள்,இந்த முக்கோண வடிவத்தின் தடை நிலைப்புள்ளியாக 3110 என்ற புள்ளியும், தாங்கு நிலைப்புள்ளியாக 2660 என்ற புள்ளியும் உள்ளது, இதில் எதாவது ஒரு புள்ளியை NIFTYகடக்குமானால் அங்கிருந்து 738 TO 750 புள்ளிகள் NIFTY அடையும், அதாவது ஒருவேளை3110 TO 3140 என்ற புள்ளிகளை NIFTY மேலே கடந்தால் அதன் இலக்கு 3840 ஆகும்,இருந்தாலும் 3250 என்ற இடத்தில் மிக முக்கியமான தடை நிலை இருக்கின்றது, 3850என்ற இலக்கை அடைய இந்த 3250 என்ற புள்ளி மிகவும் தடையாக இருக்கும் , அப்படி இல்லாமல் 2660 என்ற புள்ளியை NIFTY கீழே கடக்குமானால் அதன் இலக்கு 2250 TO 2140, 2000 ஆகும்
மேற்கண்ட வரைபடங்கள் நமக்கு உணர்த்திய விஷயங்கள் பல, இருந்தாலும், அடுத்த கட்ட நகர்வு இதுதான் என்று நறுக்கு தெரிச்சார் போல் சொன்னால் தான் உங்களுக்கு எல்லாம் பிடிக்கும், நான் சொன்ன அனைத்து வடிவங்களின் பலன்களையும் NIFTYஅடைய வேண்டுமானால் முதலில் இரண்டு நிலைகளை கடந்து உறுதி செய்யவேண்டும், அதாவது 2806 TO 2870 என்ற நிலையை NIFTY கடந்தால் தான் மேலும் உயருவதற்கான வாய்ப்புகள், அதே போல் 2660 என்ற நிலையை கீழே கடந்தால் தான் மேலும் கீழே இறங்குவதற்கான வாய்ப்புகள், அது வரை இந்த இரண்டு புள்ளிகளின் இடையில் தான் வூடாடும், ஒருவேளை மேலே 2880 என்ற புள்ளியை மேலே கடந்து, அனைத்து விசயங்களும் சாதகமாக இருக்குமானால் அடுத்த இலக்கு 3000, 3300, 3500, 3840, 4300என்று வருசையாக மேலே செல்லும், (இந்த இலக்குகள் எவ்வாறு வந்தது என்று ஒவ்வொரு வடிவங்களின் இலக்குகளை வைத்து மேலே விளக்கி உள்ளேன் மறந்துடாதீங்க ), அவ்வாறு இல்லாமல் 2660 என்ற புள்ளியை கீழே கடந்தால் அதன் இலக்குகள் 2400, 2300 TO 2250, இந்த 2250 யும் கீழே கடந்தால் அடுத்து 2000, 1500 TO 1300,வரைக்கும் செல்லும்,
இதில் உங்களுக்கு ஏதும் சந்தேகமோ, மாற்றுகருத்தோ இருந்தால் இந்த MOBILE NUMBERக்கு தொடர்பு கொண்டு உங்கள் கருத்துகளை சொல்லலாம் , மேலும் எனது EMAIL ADDRESS- SARAVANABALAAJI@YAHOO.COM, MOBILE NO – 9487103329
THANK U