Monday

NIFTY இல் ஒரு சிறிய உயர்வு 2710 வரை ?

கடந்த வாரம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற இறக்கங்களுடன் முடிவடைந்துள்ளன ,

 

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் உள்ளது தொடர்ந்தாற்போல் SINGAPORE NIFTY யும் 52 புள்ளிகள் (நான் இதை எழுதும் நேரத்தில் ) இறக்கத்துடன் உள்ளது,

 

இன்று நமது சதைகளும் ஆசிய மற்றும் அமெரிக்க FUTURE சந்தைகளை ஒட்டியே நகரும் வாய்ப்புகள் உள்ளது,

 

இருந்தாலும் 2574 என்ற புள்ளி ஒரு நல்ல தாங்கு நிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது,

 

அந்த நிலையை NIFTY கீழே கடந்தால், 2539, 2500 என்ற நிலை வரை செல்லலாம்,

 

அவ்வாறு 2574 என்ற புள்ளியில் SUPPORT எடுத்து மேலே உயரும் பட்சத்தில் 2650, 2710 என்ற நிலை வரை செல்லலாம்

 

இன்றைய NIFTY இன் நிலைகள்

 

NIFTY ABOVE 2635 TARGET 2655, 2665, 2690, 2710, 2736, 2750, 2780, 2810, 2825

 

NIFTY BELOW 2611 TARGET 2600, 2583, 2570, 2553, 2539, 2524, 2500,

 

பொதுவில் இந்த வாரத்தில் 2500 முதல் 2750 என்ற நிலைகளுக்கு இடையில் சந்தைகளின் நகர்வுகள் இருக்கலாம் ,

 

முதலில் MARKET கீழே இறங்கினாலும் மெல்ல உயரும் வாய்ப்பு உள்ளதாக தோன்றுகிறது 2575 TO 2570 என்ற புள்ளிகள் நல்ல தாங்கு நிலையாக இருக்கும் என நினைக்கின்றேன் , என்ன நடக்கின்றது என்று பொறுத்து பார்ப்போம், ஒருவேளை 2570 என்ற புள்ளியும் உடைபட்டால் 2550 என்ற புள்ளி தாங்கு நிலையாக இருக்கும்

SENSEX DAILY VIEW CHART


இந்த படத்தை பாருங்கள் இது SENSEX EOD DAILY VIEW CHART இதில் CHANNEL அமைப்பு 7900 TO 7850 என்ற புள்ளிகளை SUPPORT ஆக வைத்து உருவாக்கி வருகிறது ,

 

மேலும் இந்த 7850 என்ற புள்ளிகள் உடைபடும் பட்சத்தில் 6400 என்ற இலக்கை நோக்கி நகரும் ,

 

ஆனால் முக்கியமான INDICATOR கள் OVER SOLD POSITION னிலும் நல்ல SUPPORT நிலைகளிலும் இருப்பதால் ஒரு உயர்வு எதிர் பார்க்கப்படுகிறது , அவ்வாறு வரும் உயர்வு 8760 TO 8835 என்ற நிலைகளில் தடைகளை சந்திக்கலாம் ,