Sunday

NIFTY இன் அடுத்தகட்ட நகர்வு

NIFTY இன் அடுத்தகட்ட நகர்வு :-

NIFTY DAILY CHART VIEW 

மேலே கொடுக்கப்பட்ட படத்தை பாருங்கள் இதில் NIFTY இன் EOD CHART இல் DAILY VIEW இல் ஒரு CHANNEL உருவாக்கி வருவது தெரியும் ,

 

இந்த CHANNEL அமைப்பில் 2500 TO 2480 என்ற புள்ளிகள் நல்ல தாங்கு நிலையாக (SUPPORT ZONE) உள்ளது, அதே நேரத்தில் அதன் தடை நிலையாக 2860 முதல் 2880 என்ற புள்ளிகள் உள்ளது,

 

இதில் 2480 என்ற புள்ளியை உடைத்து NIFTY 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்தார்ப்போல் இறங்கு முகத்துடன் முடிவடைந்தால் NIFTY இன் அடுத்த உடனடி இலக்கு 2400, 2350, என்ற இடத்தில இருக்கும் ,

 

அதன் அடுத்த  இலக்கு2100, 2000, ஏனெனில் நீங்கள் படத்தில் பார்த்த CHANNEL அமைப்பு எந்தப்பக்கம் BREAK OUT ஆனாலும் , NIFTY கடக்க வேண்டிய இலக்கு 400 புள்ளிகள் ஆகும்,

 

ஒருவேளை NIFTY கீழ் இறங்கினால், அதன் கீழ் இறங்குவதற்கான உடைபடும் புள்ளி (BREAK DOWN POINT) 2480, ஆகவே அதன் இலக்கு 2100 முதல் 2000 ஆகும்,

 

NIFTY இல் ஏற்பட்டுள்ள வடிவத்தை பற்றி பார்த்தாச்சு , அடுத்து NIFTY எவ்வாறு நகரலாம் எதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதினை பற்றி பார்ப்போம்

 

NIFTY இப்பொழுது 2620 நிலையில் உள்ளது, இப்பொழுது NIFTY க்கு 2690, 2735, 2810 TO 2825, 2855 TO 2870, ஆகிய புள்ளிகள் மிகவும் தடை நிலையாக இருக்கும்,

 

இவை அனைத்தையும் தாண்டி NIFTY நல்ல VOLUME உடன் உயருமானால் அதன் அடுத்த இலக்கு 2970, 3060, 3200 என்ற வகையில் இருக்கும்,

 

ஆனால் இந்த 2970 என்ற நிலையை NIFTY தொடுமா என்பது இப்பொழுது சந்தேகமாக உள்ளது, ஏனெனில் NIFTY MONTHLY CHART இல் நல்ல ஒரு TRIANGLE உருவாக்கி அது NIFTY  1500 என்ற  புள்ளிக்கு வரவேண்டும் என்ற இலக்குடன் கடந்த மாதம் 2710 என்ற புள்ளியின் அருகில் கீழே உடைக்கப்பட்டுள்ளது ,

NIFTY MONTHLY CHART VIEW 

மேலே உள்ள  இந்த படத்தை பாருங்கள், இதில் கடந்த மாதம், TRIANGEL அமைப்பில் கீழே உள்ள மஞ்சள் நிற புள்ளியை உடைத்தது,

 

மேலும் அந்த DOWN TREND நிரூபிக்கும் விதமாக இந்த மாதம் தொடக்கம் முதல் இது நாள் வரை 2800 TO 2820 என்னும் தடை நிலை புள்ளியை மேலே கடக்காமல் உள்ளது,

 

அகவே தான் நிபிட்டி 2970 என்ற நிலைக்கு செல்லுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது

INDICATORS STATUS CHART 

ஆனால் மேலே உள்ள இந்த படத்தை பாருங்கள் இவைகள் அனைத்தும் முக்கியமாக அனைவராலும் பார்க்கப்படுகின்ற INDICATORS ஆகும் ,

 

இந்த INDICATORS இல் நான் முக்கியமாய் பார்க்கும் STOCHASTIC மிகவும் கீழ் நிலையில் உள்ளது ,

 

அடுத்து அனைத்து INDICATOR களிலும் மிக முக்கியமான SUPPORT நிலைக்கு அருகில் இருப்பதை நான் பச்சை நிறத்தில் கோடிட்டு காட்டயுள்ளேன்,

 

ஆகவே இந்த பகுதிகளில் இருந்து SUPPORT எடுக்கும் வாய்ப்புகளும் தெரிகிறது , அதாவது OVER SOLD POSITION இல் அனைத்து INDICATOR களும் உள்ளது ,

 

ஆகவே நாம் இப்பொழுது ஒரு கட்டாய உயர்வை எதிர் நோக்கி உள்ளோம், ஆனாலும் இந்த உயர்வானது நடந்தாலும் தற்காலிகமானதாகவே அமையும்,

 

அப்படி உயர சென்றாலும் அது 2810 TO 2870 என்ற இடங்களில் தடையை எதிர்கொள்ளவேண்டி வரலாம்,

 

மேலும் அமெரிக்கன் INDEX DOW JONES ஆனது 6500 TO 6400 என்ற புள்ளிகளில் இன்னும் கொஞ்ச நாட்கள் ஊசலாடலாம் , இதுவும் நமது NIFTY உயர்வதற்கு காரணமாக இருக்கலாம்,

 

ஒருவேளை அவ்வாறு இல்லாமல் உலக சந்தைகளில் சலசலப்பு ஏற்பட்டால் , NIFTY உயர்வை தற்காலிகமாக தள்ளி வைத்து 2500 TO 2480 என்ற புள்ளிக்கு மீண்டும் வரும்,

 

ஆனால் ஒரு உயர்வு , தற்பொழுது நமது சந்தைக்கு தேவைப்படுகிறது, அந்த உயர்வு கீழ் வரும் புள்ளிகளை நோக்கி நகரலாம் ,

 

 NIFTY ABOVE 2635 TARGET 2655, 2665, 2690, 2736, 2780, 2810 TO 2825, 2856, 2870 TO 2875

 

அவ்வாறு ஏறாமல் கீழ் இறங்கினால் கீழ் வரும் புள்ளிகளை நோக்கி நகரலாம்

 

NIFTY BELOW 2611 TARGET 2583, 2570, 2553, 2539, 2524, 2502, 2480, 2460, 2350, 2250

 

 

சரி இப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்

 

ஒன்றும் இல்லை அவசரப்படாதீங்க NIFTY இல் நான் தற்காலிகமாக ஒரு சிறிய உயர்வை எதிர்பார்கின்றேன் அது நடப்பதற்கான காரணங்களை தான் மேலே சொல்லி உள்ளேன் ,

 

மேலும் அடுத்த வாரத்தில்  இரண்டு நாட்களும் மேலும் ஒரு நாள் விடுமுறையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது , அப்படி இப்படி பார்த்தாலும் F&O EXPIRY வெகு அருகில் வந்துவிடும் ,

 

அடுத்து நமது சந்தை இப்பொழுது OVER SOLD POSITION இல் வேறு உள்ளது,

 

அகவே SHORT COVERING வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ,

 

SO நாம் SUPPORT POINT ஆகா 2500 TO 2480, 2460 என்ற நிலையை வைத்துக்கொள்வோம்

 

ஒருவேளை 2460 என்ற புள்ளி உடைப்படுமானால் வீழ்ச்சிகள் தொடரும் அதாவது 2350 , 2250, 2100 TO 2000 வரைக்கும் செல்லலாம்

 

அப்படி இல்லாமல் 2500 TO 2480 என்ற புள்ளிகளை SUPPORT ஆகா எடுத்துக்கொண்டு மேலே உயர்ந்தால்

 

அதன் இலக்குகள் 2736, 2810, 2825, 2875 என்ற நிலை வரை செல்லும்,

 


 

 நிறைய பேர் கருத்துகள் சொல்லுங்கள் உற்ச்சாகமாக இன்னும் நிறைய விஷயங்கள் செய்யலாம்

நன்றி