Wednesday

DOW JONES ஒரு பார்வை - TECHNICAL VIEW


DOW JONES ஒரு பார்வை

DOW JONES இல் தற்போது நிலவும் TECHNICAL FACTORS, PATTERNS, அதனால் DOW JONES இல் நடந்து கொண்டிருக்கும் விளைவுகளை பற்றி முழுமையாக பார்ப்போம்
DOW JONES EOD CHART ( PLEASE CLICK ON THE PICTURE FOR LARGE VIEW)

மேலே உள்ள படத்தை பாருங்கள், இது DOW JONES இன் END OF THE DAY CHART இன் DAILY VIEW , இதில் மூன்று வடிவங்களை மூன்று நிறங்களில் கொடுத்துள்ளேன், அவற்றை முதலில் பார்போம்

பச்சை நிறத்தில் உள்ளது TRIANGLE எனப்படும் முக்கோண வடிவம் ஆகும்
வெள்ளை நிறத்தில் இடைளிவெளி விட்டு விட்டு வரையப்பட்ட கோடு (WHITE DOTED LINE) HEAD & SHOULDER PATTERN ஆகும்

மஞ்சள் நிறத்தில் உள்ளது CHANNEL வடிவம் ஆகும்


இந்த மூன்று வடிவங்கள் தான் DOW JONES இல் தற்போது ஏற்பட்டுள்ளது மேலும் அதன் விளைவுகளும் நடந்து கொண்டிருக்கிறது , இந்த மூன்றையும் பற்றி தனித்தனியாக பார்போம்

பச்சை நிற வடிவம் முக்கோணம் :-

இந்த வடிவம் கடந்த நவம்பர் மாதம் 2008 இல் DOW JONES EOD CHART இல் தோன்றி கடந்த ஜனவரி மாதம் 8660 என்ற புள்ளியில் BREAK DOWN ஆனது, அதாவது 8660 என்ற புள்ளியில் இருந்து 2100 TO 2150 புள்ளிகள் கீழ் இறங்கி 6500 என்ற புள்ளியை இலக்காக அடைய வேண்டும் என்ற இலக்குடன் , (தற்போது DOW JONES 6700 என்ற புள்ளிகளில் உள்ளது ), இந்த வடிவத்தின் இலக்கை அடைய இன்னும் 200 முதல் 300 புள்ளிகள் தேவை படுகிறது
அடுத்து வெள்ளை நிறத்தில் உள்ள Head & Shoulder :-

இந்த வடிவம் டிசம்பர் மாதம் 08 இல் தோன்றி பிப்ரவரி மாத வாக்கில் 7480 என்ற புள்ளியில் இருந்து 750 புள்ளிகள் இறங்கி 6800 to 6750 என்ற இலக்கை அடைவதற்காக BREAK DOWN ஆனது, அதன் இலக்குகள் வெறும் 10 நாட்களில் அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே ( DOW JONES இப்பொழுது 6700 என்ற இடத்தில உள்ளது )


இறுதியாக மஞ்சள் நிறத்தில் உள்ள CHANNEL வடிவத்தை பற்றி

கடந்த ஜனவரி மாதம் 9090 என்ற புள்ளியில் இருந்து இந்த CHANNEL அமைப்பானது DOW JONES EOD CHART இல் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் 7250 என்ற புள்ளியிலிருந்து 750 புள்ளிகள் கீழ் இறங்கி 6500 என்ற இலக்கை அடைவதற்காக 7245 என்ற புள்ளியில் BREAK DOWN ஆனது , அதன் இலக்கை அடைய இன்னும் 200 புள்ளிகள் மீதம் உள்ளது ( DOW JONES இப்பொழுது 6700 என்ற இடத்தில உள்ளது )

என்னுரை:

மேற்கண்ட மூன்று TECHNICAL அமைப்புகளில் இருந்து நாம் ஒரு விஷயத்தை தெளிவாக அறியலாம் அதாவது 6500 என்ற இலக்கு DOW JONES இல் ஏற்படுவதற்கான TECHNICAL விஷயங்கள் முன்னரே EOD CHART இல் உருவாக்கி விட்டது , தற்பொழுது அதன் விளைவுகள் நடந்து வருகிறது , இதில் HEAD SHOULDER PATTERN உடைய இலக்கான 6750 ஐ DOW JONES அடைந்து விட்டது , இன்னும் TRIANGLE மற்றும் CHANNEL ஆகிய இரண்டு அமைப்புகளின் இலக்குகள் மட்டும் பாக்கி உள்ளது , அதுவும் இன்னும் சில நாட்களில் நடந்து விடும் என்றே கருதுகிறேன், பொருத்து இருந்து பார்போம், ஒருவேளை 6500 யும் சில காரணகளினால் கடக்குமானால் அடுத்த தாங்கு நிலை 6400 இல் உள்ளது , அங்கிருந்து மீட்சிகள் தொடங்கலாம் , அப்படி தொடங்காமல் மீண்டும் கீழே செல்ல முற்ப்பட்டால் , அது TECHNICAL ANALYSING ஐ பொறுத்தவரை அர்த்தமற்ற நகர்வுகளாகவே அமையும்
நன்றி - சரவண பாலாஜி