Wednesday

WHAT NEXT?

Wednesday – 25-03-09

 

அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் ஆரம்பித்து, முந்தய நாள் HIGH POINT ஐயும் உடைத்து மேலே சென்று, தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழுந்துள்ளது,

அதன் காரணம்,

அமெரிக்க அரசு சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு பிரச்சனைகளில் தவித்துக்கொண்டிருக்கும் அந்நாட்டின் வங்கிகளின் உதவிக்காக அதன் சில சொத்துகளை வாங்க இருப்பதாக முன்னர் அறிவித்தது ,

இந்த விஷயம் எந்த அளவிற்கு பயன் தரும்  என்று பயந்த முதலீட்டாளர்கள் வங்கிப்பங்குகள்  உயரத்தில் இருக்கும்போதே  PROFIT BOOKING செய்ததினால் விழுந்தது

தற்போது நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க FUTURE MARKET சற்று சிறிய உயரத்துடன்  நடந்து வருகிறது ,

ஆனால் ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் நடந்து வருவது கவனிக்க வேண்டிய விஷயம்,

அதே நேரம் தற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY 18 புள்ளிகள் (இந்த பதிவை எழுதும் பொது) உயர்வுடன் நடந்து வருகிறது

நமது சந்தைகள் OPEN ஆகும் நேரங்களில் மேற்கண்ட சந்தைகளின் நிலைகளை பொறுத்து OPEN ஆகும் வாய்ப்புகள் அதிகம்  

சரி நாம் NIFTY TECHNICAL ஆ என்ன சொல்லுதுன்னு பார்த்துவிடுவோம் வாருங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை பாருங்கள் இந்த படம் NIFTY இன் DAY VIEW CHART

NIFTY TRIANGEL CHART


இதில் NIFTY இல் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒரு TRIANGLE அமைப்பு உருவாக்கி

கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி 2785 என்ற புள்ளியை BREAK DOWN புள்ளியாக கொண்டு கீழே உடைபட்டுள்ளது ,

இதன் படி  NIFTY இன் கீழ் நோக்கிய இலக்கு 1800,

அதன் படியே கீழ் நோக்கி இறங்கிக்கொண்டிருந்த நம்மை வலுக்கட்டாயமாக உலகசந்தைகள் நம்மை மேல் நோக்கி இழுத்தது,

இந்த உயர்வு கிட்ட தட்ட அக்டோபர் மாதத்தில் உருவான TRIANGLE இன் TOP TRENT LINEக்கு அருகில் வந்து விட்டது,

மேலும் இந்த புள்ளியை NIFTY ஒரு முறை இரண்டு முறை இல்லை ஆறு முறை மேலே கடக்க முயன்று முடியாமல் கீழே சரிந்துல்லத்தை படத்தில் பாருங்கள் ,

ஆகவே இந்த TRIANGLE இன் TOP TRENT LINE NIFTY க்கு ஒரு நல்ல தடை நிலையாக இருக்கும் என்றே கருதிகிறேன்,

மேலும் அனைத்து INDICATOR களும் OVER BOUGHT என்ற நிலையில் வேறு உள்ளது ,

ஆகவே 3050 என்ற புள்ளியை S/L ஆக வைத்து SHORT SELL செய்பவர்களை செய்யலாம் (3050 2 நாள் தொடர்ந்து CLOSE செய்யவேண்டும் )

இப்பொழுது இந்த தடை நிலை 3035 TO 3045 என்ற புள்ளிகளில் உள்ளது,

ஒருவேளை NIFTY இந்த புள்ளிகளை மேலே கடந்து 3050 க்கு மேலே தொடர்ந்தார்ப்போல்நாள் CLOSE ஆனால் ,

NIFTY இன் உயர்வு சொல்லிக்கொள்ளும் வகையில் அமையும் என்பதில் சந்தேகம்இல்லைஅதே நேரம்

அப்படி உயர்வடைந்தால் அது சந்தை TECHNICAL ஆக செய்த தவறு என்று தான் என்னால் சொல்ல முடியும்,

ஆகவே அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் முடிவு செய்யவேண்டும்,

ஏன் என்றால் இந்த TRIANGEL அமைப்பு உடைபட்டதிர்க்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி எழும் ,

என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் ,

எது எப்படியாகிலும் , BUYING POSITION களில் கவனமாக இருப்பது சால சிறந்தது

மேலும் நாளை F&O EXPIRY வேறு உள்ளது அகவே POSITION எடுக்கும் பொது கவனமாக எடுங்கள்

NIFTY SPOT TODAYS LEVELS

NIFTY ABOVE 2956 TARGET 2975 TO 80, 2995, 3005, 3017 TO 20, 3033 TO 37, 3043 TO 47, 3070

NIFTY BELOW 2914 TARGET 2904 TO 2900, 2880 TO 83, 2877 TO 70, 2854, 2839 TO 35, 2811,

கவனிக்க வேண்டிய பங்குகள்

ABB

ABB யை பொறுத்த வரை இந்த உயர்வுகளில் சரியான முறையில் பங்கேற்க்கவில்லை என்றே நான் கருதிகிறேன்,

மேலும் இதன் இலக்கு 395 TO 400 என்ற வகையில் இருப்பதற்கான THECHNICAL சாத்தியங்கள் தெரிகிறது ,

ஆகவே சந்தையின் இறக்கங்களில் வாங்கலாம்

BUY ABB AT 374 TARGET 381, 386, 394, 400, S/L 369

OR

BUY ABB AT 355 TO 360 RANGE TR 374, 381, 386, 395, 400, S/L 346